பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/761

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பும்‌ எஃகும்‌ 737

மணல், கந்தகம், ஃபாஸ்ஃபரஸ் போன்றவை மிகுந்து காணப் பட்டால் உலைகளில் அவற்றைப் பிரித்தெடுப்பதில் பல சிக்கல்கள் ஏற்படும். மணல் மிகுதியாகக் கலந் திருப்பின் அழுக்கு பெருகுவதோடு, அதை உருக்க எரிபொருளும் மிகுதியாகச் செலவாகிறது. ஃபாஸ் ஃபரஸை நீக்க மிகுந்த செலவாவதால் எஃகின் விலை கூடுகிறது. லாகவும் இருக்க வேண்டும். சாம்பலில் ஊதுலை. இரும்புத் தாதுக்களைக் கரியுடன் கலந்து சூடேற்றும் அமைப்பு ஊதுலை எனப்படும். தற்கால ஊதுலை சுமார் நூறு அடி உயரமும் அகன்ற பாகத்தில் இருபத்தெட்டு அடி குறுக்களவும் கொண்டதாகும். இதன் அமைப்பு, முனையற்ற இரு கூம்புகளை ஒன்று சேர்த்து வைத்ததுபோல் இருக் கும். இதன் வெளிப்புறம் ஓர் அங்குலத்திற்கும் மேலான தடிப்புள்ள எஃகுத் தகடுகளால் ஆனது. உட்புறம் சூடு தாங்கும் கற்களால் இரண்டு முதல் ஐந்து அடி வரை கட்டப்பட்டிருக்கும். நீர் தொடர்ந்து உள்ளே செலுத்தப்பட்டு ஊதுலையின் உட்புறம் மிகுதியாகச் சூடேறாமல் பாதுகாக்கப் படுகிறது. இதை ஒரு முறை இயக்கத் தொடங்கி னால் சுமார் ஐந்து ஆண்டுகள்வரை தொடர்ச்சி யாக இயக்கலாம். தினமும் சுமார் 1,000 டன் இரும்பை உருக்கலாம். தற்கால ஊதுலைக்குச் சுமார் 2000 டன் உயர்ந்த ரகத் தாதுவும் நூறு டன் கல் கரியும், ஐநூறு டன் சுண்ணாம்புக்கல்லும், மூலர் யிரத்து ஐநூறு டன் காற்றும் தேவைப்படுகின்றன. இரும்பின் தாதுவையும், கல்கரியையும், சுண்ணாம்புக்கல்லையும் தேவையான அளவு நிறுத்து, அவற்றைத் தள்ளுவண்டிகளின் உதவியால் உலைக்குள் கொட்டுவர். உலையின் வாய் குல்லாய் வடிவமுள்ள இரு மூடிகளையுடையது. மேல்மூடி சிறியதாகவும், கீழ்மூடி பெரியதாகவும் இருக்கும். மேலும் ஒரு மூடி திறக்கும்போது மற்றொரு மூடி உலையின் வாயை மூடியே இருக்குமாதலால் உலை யிலிருந்து ஊதுலை வளிமம் வெளிவராமல் தடுக்க முடிகிறது. இவ்வளிமத்தைக் கொண்டு தொழிற் கூடங்களில் நீராவியைத் தயாரிக்கவும், அடுப்புகளை எரிக்கவும் முடியும். இவ்வளிமத்தில் சுமார் இருபத்து நான்கு விழுக் காடு கார்பன் மோனாக்சைடு உள்ளது. ஆகையால் இதை வெளியே செலுத்துவது மிகவும் ஆபத்தானது. உலையின் கீழ் சுமார் எட்டு அடி உயரத்தில் உலை யின் வெளிச்சுற்றளவில் சம தூரத்தில் உள்ளவாறு 10-15 குழாய்களின் வழியாகச் சூடேற்றப்பட்ட காற்று உலையினுள் செலுத்தப்படுகிறது. உலையின் அடிப்பாகத்தில் மூன்று அல்லது நான்கு அடி உயரத் திற்குள் உருக்கிய இரும்பும் அழுக்கும் வந்தடை கின்றன. இப்பாகத்திற்குக் கணப்பு என்று பெயர். காற்று கல்கரியை நன்றாக எரித்து மிகுந்த வெப்பத் அ.க.4-47 இரும்பும் எஃகும் 737 தை உண்டாக்குகிறது. மேலும் அது எரிந்த கரியுடன் கூடி கார்பன் மோனாக்சைடை உண்டாக்குகிறது. இவ்வளிமம், இரும்புத் தாதுவை இரும்பாகக் குறைத்துக் கார்பன்டை ஆக்சைடாகிறது. உலை யினுள் வெவ்வேறு உயரங்களில் வெவ்வேறு வேதி வினைகள் நடந்தவாறு இருக்கும், உலையினுள் மிகவும் சூடான பாகம் காற்றுக் குழாய்களின் அருகில் இருக்கும். இவ்விடத்தின் வெப்பநிலை இரும்பின் உருகுநிலையைவிடச் சுமார் 300°C, கூடுதலாகும். இந்த இடத்திலிருந்து வெப்பம் குறைந்து கொண்டே போய் உலையின் வாயினருகில் சுமார் 250°C ஆக இருக்கும்.சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் வரை ஊதுலைக்குள் சூடேற்றிய காற்றைச் செலுத் தும் பழக்கம் இல்லை. அப்போது ஒரு டன் இரும்பை உருக்க எட்டு டன் நிலக்கரி தேவைப்பட்டது. ஆனால் காற்றைச் சூடேற்றுதலால் மட்டும் இதன் அளவில் மூன்று டன் குறைகிறது. அறிவியல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த இந்நாளில் ஒரு இரும்பிற்கு 900 கிலோ கல்கரி போதுமானது. பெரும் உருளை வடிவமான கோபுரங்களில் முதலில் ஊதுலை வளிமத்தை எரித்தும், பிறகு சூடேற்றப்பட்ட கற் களின் மூலம் காற்று செலுத்தப்பட்டும் சூடேற்றப் படுகிறது. டன் உலையின் இயக்கம், தாதுக்கள், கரி, சுண்ணாம்பு ஆகியவற்றை உலை மேல் இட்டதும் அவை இரு மூடிகளின் வழியே உள்ளே சென்று நாற்புறமும் பரவி வருகின்றன. பொருள்கள் சிறிது சிறிதாகச் சூடேறிக் கீழ்நோக்கிச் செல்லும். அப்போது மேல் நோக்கி வரும் கார்பன் மோனாக்சைடு தாதுக்களை இரும்பாகக் குறைக்கிறது. மேலிருந்து 20 அடி உயரத்தில் சுண்ணாம்புக்கல் கார்பன்டைஆக்சைடை இழந்து சுண்ணாம்பாக மாறுகிறது. வெப்பம் மிகுதி யாகும்போது இவ்வினை வெகுவேகமாக நிகழ்கிறது. சுண்ணாம்பு கீழே, உலையின் அகன்ற பாகத் திற்கு வந்ததும், இரும்புத் தாதுவிலுள்ள துணைப் பொருளான சிலிக்காவுடன் சேர்ந்து கால்சியம் சிலிக்கேட்டு கசடாக மாறுகிறது. மேற்கூறிய கரியி லிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இரும்பு பஞ்சுபோல் இருக்கும். இவ்விரும்பு கரியுடன் கீழே கலக்கும் போது சுமார் நான்கு விழுக்காட்டை உறிஞ்சிக் கொள்கிறது. இக்கரிக்கலப்பினால் இரும்பு 15000°Cக் குள்ளாகவே உருகி உலையின் அடிப்பாகத்தை வந்தடைகிறது. அழுக்கு உருகி, இரும்பின் மேல் கசடாக மிதக்கிறது. இவ்வாறு கசடும். இரும்பும் மிகுதியாகிக் கொண்டு வரும்போது, காற்றுக் குழாய்களின் மட்டத்திற்கு வருமுன் அவை உலையிலிருந்து வெளி யேற்றப்படும். இரும்பு சுமார் நான்கு மணிக்கொரு முறையும், கசடு இரண்டு மணிக்கொரு முறையும் அதனதன் துளைகளின் வழியே வெளியேற்றப்படும்.