பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/765

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பும்‌ எஃகும்‌ 741

பாளங்கள் மேற்கூறிய முறையில் தயாரிக்கப் பட்ட உருகின எஃகை வெப்பம் தாங்கும் கற் களால் கட்டப்பட்ட பெரும் கொப்பறைகளில் ஏந்துகின்றனர். அவ்வாறு ஏந்தும்போது தேவையான அளவு ஆக்சிஜன் நீக்கும் உலோகங்களையும், கலவை உலோகங்களையும் சேர்க்கின்றனர். சீரான மேற் பரப்புள்ள எஃகினாலான பொருள்கள் தேவை யானால் ஆக்சிஜனை நீக்காமல் விட்டு விடுவர். தகடு களும், குழாய்களும் செய்ய இவ்வகை எஃகு பயன் படுகிறது. வெப்பத்தில் வேலை செய்தல். எஃகுப் பாளங்கள் இறுகியதும் அவற்றைச் சூடாக இருப்பினும் தூக்கும் பொறிகளால் அச்சுகளிலிருந்து எடுத்து, பின்பு அவை உருளைகளிடையேயோ, நீராவியால் இயக்கப்படும் பெரும் அளவுச் சம்மட்டிகளாலோ, நீரியியக்கவியல் அழுத்து பொறிகளாலோ அழுத்தி அல்லது தட்டி நீட்டுகிறார்கள். இம்முறையில் நீராவிக் கொதிகலன் களில் பயன்படும் உருளைகள், ஆகாய விமானப் பாகங்கள், போர்க் கருவிகள் ஆகியவை செய்யப் படும். எஃகுப் பாளங்களை 1200°C முதல் 1300°C வரை வெப்பப்படுத்திக் காய்ச்சித் தகடாக்குகின்றனர். இவ் வெஃகை 900°C வெப்பநிலைக்குக் கீழ் அவ்வளவு எளி தாக உருவாக்க முடிவதில்லை. அவ்வாறு செய்வதால் எஃகின் உட்கூற்றில் மாற்றம் ஏற்படுகிறது. ஆகை யால், அவ்வெப்பம் 900°C அடைந்தவுடன் தகடாக் கலை நிறுத்தி மீண்டும் காய்ச்சித் தகடாக்குவர். அடித்து வடித்தலும் அழுத்தலும், எஃகைச் சம் மட்டிகளால் தட்டி வேலை செய்வதால் இவ்வெஃகின் மேல் பகுதி மாறுதல் அடைகிறது. இவ்வெஃகுக் கட்டிகளின் உள்பாகத்தில் இதன் விளைவு அவ்வள வாக இல்லை. ஆனால் அழுத்த எந்திரங்களால் தகடாக்கப்படும் முறையில் இதன் பயனைப் பொருள் இரும்பும் எஃகும் 741 கட்டமைப்பு முழுதும் பரவச் செய்யலாம். இம் முறைகள் உருளைகளில் நீட்டுவதைவிடச் சிறந்தவை. கப்பல்களின் முறி உந்திகள் (propellers) இம் முறையில் உருவாக்கப்படுகின்றன. உருளைகளில் நீட்டுதல். தங்கம், வெள்ளி போன்ற மிருதுவான உலோகங்களைப் பதினாறாம் நூற்றாண் டி லேயே உருளைகளில் நீட்டித் தகடுகளாகச் செய் தனர். ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில் தான் உ உருளைகளில் தகடாக்கும் முறை வழக்கத்திற்கு வந்தது. இந்தியாவில் உற்பத்தியாகும் எஃகில் சுமார் தொண்ணூற்றைந்து விழுக்காடு உருளைகளில் உரு வாக்கப்பட்டது. இப் பொருள்களே பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன. எஃகுப் பாளங்களை அச்சுகளில் இருந்து எடுக்கும்போது அவற்றின் வெப்பநிலை சுமார் 1000°C ஆக இருக்கும். பின்பு பொந்துக்கள் போன்ற சிறு அடுப்பில் வைத்து 1200°C முதல் 1300°C வரை சீராக்கக் காய்ச்சுவர். இவ்வடுப்புகள் கல்கரி வளிமத்தால் சூடேற்றப்படு கின்றன. பிறகு இப்பாளங்கள் உருளைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. தற்காலத்திய உருட்டு ஆலைகள் மிகவும் சிக்கலான அமைப்புள்ளவை. வெந்திரங்கள் மின்சாரத்தால் இயங்குகின்றன. வ் எஃகில் உள்ள கரியின் சிறப்பு. எஃகில் உள்ள கரியின் அளவைப் பொறுத்து அவற்றின் பண்புகள் மாறும். இதில் கரியின் விழுக்காடு மிகுந்தால் கடின மும், வலிமையும் மிகும். 0.4 விழுக்காடு கரியை உட் கூறில் கொண்டுள்ள எஃகு, தூய்மையான இரும்பைப் போல் இருமடங்கு கடினமும், வலிமையும் கொண் டுள்ளது. ஒரு விழுக்காடு கரியை உட்கூறில் கொண் டுள்ள எஃகு மூன்று மடங்கு வலிமை கொண்டது. கரியின் அளவு மிகுந்தால் அது விரைவில் உடையும் படம் 2. பொக்காரோ எஃகுத் தொழிற்சாலையில் காய்ச்சிய எஃகு உருளைகளில் நீட்டித் தகடுகளாகச் சுருட்டி வைக்கப்பட்டுள்ளது