பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/772

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

748 இரும விண்மீன்கள்‌

748 இரும விண்மீன்கள் கலவையை படுகிறது. இது நேரடியாகவும், அனிச்சையாகவும் மூச்சுச் சுரப்பை மிகுவிப்பதோடு, கட்டியான திர வத்தை நீர்க்குமாறும் செய்கிறது. நெடுநாள் மூச்சுக் குழல் அழற்சி, ஆஸ்த்துமா போன்ற நோய்களில் இது பயன்படுத்தப்படுகிறது. 300 கி. வாய் வழியே ஒரு நாளைக்கு மூன்று முறை கொடுக்க வேண்டும். இந்தக் கலவை கசப்புக்கலந்த உப்புச் சுவையோடிருக்கும். நீர்த்த திரவத்திலிருந்து அயோடின் தனியாகப் பிரிந்துவிடுவதால் நாட்பட்ட கண்வெளிப்படல் மருந்தை உட்கொள்ளக்கூடாது. நீர்க்கட்டி, கண்ணிமைகளில் நீர்க்கட்டி, கண்ணீர்ப் பெருக்கம். தொண்டையில் நீர்க்கட்டு, புண் ஏற் படல், தலைவலி, தோல் நோய்கள் போன்றவை இதன் பக்க இம்மருந்தைத் விளைவுகளாகும். தொடர்ந்து நீண்டநாள் கொடுப்பதால் தைராய்டு சுரப்பு நீரினளவு குறைந்து தைராய்டு பெரியதாகும். இபிகாகுயன்ஹா (ipecacuanha). இம் மருந்து சில நேரங்களில் சளி நீக்கியாகவும் பயன்படுத்தப்படு கிறது. மூச்சுச் சுரப்புத்திறனை மிகுவிக்கவும், சுரப்பு நீரை நீர்க்கச்செய்யவும் டிஞ்ச்சர் இபிகாகுயன் ஹா ஒரு மில்லி அளவில் கொடுக்கப்படுகிறது. குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற பக்க விளைவுகளை இம்மருந்து உண்டுபண்ணும். இதில் எமிட்டின் என்ற அல்கலாய்டு அடங்கியிருக்கிறது. வாசிசின், வாசிசினோன் போன்ற சக்தி வாய்ந்த அல்கலாய்டுகள் மூச்சுச் சிறுகுழல் விரிவாக்கிகளாக வும்,சளி நீக்கிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. -மீ. வா. நூலோதி. Satoskar R.S, and Bhandarkar S.D., Pharmacology and Pharmacotherapeutics Popular Prakasan Pvt Ltd., Bombay. 1981. இரும விண்மீன்கள் பேரண்டத்தில் (universe) பல கோடி மண்டலங்கள் (galaxies) உள்ளன என்றும், ஒரு மண்டலத்தில் கோடிக்கணக்கான விண்மீன்கள் பரந்து சிதறிய வாறு இருக்கின்றன என்றும் வானியலார் மதிப்பிட் டுள்ளனர். நிறை, பரிமாணம், நிறம், வெப்பநிலை, ஒளிர்திறன் (luminosity) ஈர்ப்புச்சக்தி போன்ற பல இயற்பியல் தன்மைகளால் இவ்விண்மீன்கள் ஒன்றுக் கொன்று வேறுபட்டுக் காணப்படுகின்றன. வேறு பாடுகளுக்கு ஏற்ப அவற்றைப் பெருஞ் சிவப்பு விண் மீன் (red giant star) சிறு வெள்ளை விண்மீன் (white dwarf star), நியூட்ரான் விண்மீன் (neutron star), மாறொளிர் விண்மீன் (pulsar star) எக்ஸ்-கதிர் விண்மீன் (x-ray star), இரும விண்மீன் (binary star) பல்லிணை விண்மீன் (multiple star), கருந்துளை விண்மீன் (black hole star) என்ற பல வகைகளாகப் பிரித்திருக்கின்றனர். இரும விண்மீன்கள் என்பவை, தங்களுடைய பொது ஈர்ப்பு மையத்தைச் சுற்றி வலம் வந்த வண் ணம் மிக அருகருகே அமைந்திருக்கும் இரண்டு விண் மீன்களாகும். பொதுவாக இந்த இரும விண்மீன்கள் ஒன்றைச் சுற்றி ஒன்று ஒரு நீள்வட்டப் பாதையில் {elliptic orbit) செல்கின்றன எனலாம். இரும விண்மீன்களின் இவ்வியக்கத்திற்குக் காரணம், பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கும், சந்திரன் பூமியைச் சுற்றி வருவதற்கும் ஆதாரமாக விளங்கும் அதே ஈர்ப்பு ஆற்றல் ஆகும். விண்மீன்களுள் இவ்வாறு ஒன்றை ஒன்று சுற்றி வரும் இரும் விண்மீன்கள் இருக்கலாம் என்பதை முதன் முதலில் ஷெர்ஷல் (Herschel) எனும் வானிய வார் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு 60,000க்கும் மேற் பட்ட இரும விண்மீன்களைப் பற்றி வானியல் அறி ஞர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். புவிக்கு மிக அருகில் உள்ள ஆல்பா சென்டாரி (alpha centauri) என்ற விண்மீன் கூட ஓர் இரும விண்மீனே. இதில் உள்ள இரு விண்மீன்களும் ஏறக்குறைய சூரியனுக் கும் நெப்டியூனுக்கும் இடைப்பட்ட தொலைவில், 80 ஆண்டுகள் சுற்றுக் காலத்துடன் இயங்கி வரு கின்றன. எண்ணிலாத் தொலைவில் உள்ள இரும விண்மீன்களை இனங்கண்டறிந்து கொள்ள முடிய வில்லை என்றாலும், ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்தது 46 விழுக்காடு விண்மீன்கள் இரும விண்மீன்களாக இருக்கலாம் என்று வானியல் வல்லு நர்கள் கருதுகின்றனர். 15 விழுக்காடு விண்மீன்கள் சூரியனைப் போலத் தனிநிலை விண்மீன்களாகும் என்றும், எஞ்சிய 39 விழுக்காடு விண்மீன்கள் பல்லி ணைத் தொகுப்பு விண்மீன்களாக இருக்கலாம் என்றும் இவற்றில் மூன்று அல்லது அதற்கு மேற் பட்ட விண்மீன்கள் கூட்டாக இயங்குகின்றன என்றும் மதிப்பிட்டுள்ளனர். ஓர் இரும விண்மீனின் இயற்பியல் சிறப்புக் கூறு அதில் உள்ள இரு விண்மீன்களுக்கிடைப்பட்ட தொலைவாகும். உண்மையில் இத்தொலைவே அதன் பல்வேறு சிறப்பியல்புகளை, குறிப்பாக அதன் சுற்றுக்காலத்தை (orbital period) வரையறுக்கக் கூடியதாக இருக்கின்றது. 50 முதல் 1,00,000 வானி யல் அலகு (astronomical unit) வரையுள்ள இடை வெளியுடன் கூடிய இரும விண்மீன்களை வானியல் அறிஞர்கள் இனங் கண்டறிந்திருக்கின்றனர். இவற் றின் சுற்றுக்காலங்கள் 102 முதல்10* ஆண்டு நீண்ட நெடுக்கையில் காணப்படுகின்றது. கெப்ளரின் மூன்றாவது விதியைக் கொண்டு, நெருக்கமாக அமைந்துள்ள இரும விண்மீன்கள் கூடுதலான சுற்றுக் என