பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/779

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருமுனைத்‌ திருப்புதிறன்‌ 755

போன்ற அலகுகளினால் மதிப்பிடுகின்றனர். (காண்சு, போர் மாக்னெட்டான், நியூக்கிளியர் மாக்னெட் டான்). ஒரு பொருளின் காந்த நிலைமத் திருப்பு திறனுக்கு, அப்பொருளின் அணுக்களில் உள்ள எலக்ட்ரான்களின் சுற்றுப் பாதை இயக்கம், அவற் றின் தற்சுழற்சி, அணுக்கருவின் தற்சுழற்சி ஆகியவை காரணமாக அமையும். ஒருபுற மின்புலத்திலும், மின் இருமுனையி காந்த இருமுனையி ஒருபுறக் காந்தப் புலத்திலும் நிலைமாற்றத்திற்கு உள்ளாகின்றன. இந்த நிலை மாற்றம் நிலைபேறான இருமுனையி தன்மை யாலோ, தூண்டப்படுவதால் உண்டாகும் தற்காலிக மான இருமுனையி தன்மையாலோ ஏற்படலாம். நிலை திருப்புதிறனை அளவிட்டு, ஒரு மூலக்கூறின் கட்டமைப்பை ஆய்ந்தறிய இயலுவதால், வேதி யியல் வழிமுறையில் நிலைமத்திருப்புதிறன் அளவீட்டு முறை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப் படுகின்றது. ஒருபுற மின்புலத்தில் ஆய்வு மூலக்கூறுகளை வைத்தால், அவற்றின் அச்சு, முனைவாக்கத்திற்கு உள்ளாகின்றது (படம்). மாறுமின்புலத்தின் எதிர் வெண் 10 ஹெர்ட்ஸ் என்ற எல்லைக்குட்பட்டு இருக்கும்வரை, மூலக்கூறின் நிலைமாற்றம், ஒரு நிலை மின்புலத்தில் உள்ளது போலவே இருக்கின் றது. அதிர்வெண் 10 ஹெர்ட்ஸ்க்கும் மேல் இருக்கும் போது, மின்புல மாறறத்திற்கு ஏற்ப, மூலக்கூறு நிலைமாற்றம் பெறப் போதிய காலம் கிடைப்ப தில்லை. அப்போது மூலக்கூறின் மின் பண்புகளில் குறிப்பிடத்தக்க விளக்கம் ஏற்படுகின்றது. இவ்விலக் கத்தின் அளவினை மதிப்பிட்டு மூலக்கூறின் இயல் பான மின் பண்புகளை ஆய்ந்தறிகின்றனர். இருமுனை அயனி கொ.சு. ம. பல கரிம மூலக்கூறுகள் அமிலத் தன்மை வாய்ந்த கார்பாக்சில் தொகுதியையும், காரத்தன்மை கொண்ட அமினோ தொகுதியையும் கொண்டுள்ளன. இதனால் அவை ஈரியல்பு படைத்தவையாக (amphoteric) விளங்குகின்றன. எடுத்துக்காட்டாக, கிளைசீனில் (H,N-CH,-COOH) அமினோ தொகுதியும், கார்பாக் சில் தொகுதியும் உள்ளன. நீரியக் கரைசலில் இச்சேர் மத்தில் உள்ள கார்பாக்சில் தொகுதி பிரிகையடைந்து ஹைட்ரஜன் அயனியைக் கொடுக்கிறது. இந்த ஹைட் ரஜன் அயனி மறுமுனையில் உள்ள அமினோ தொகுதி யால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு முனையில் நேரயனியையும் மறுமுனையில் எதிரயனியையும் கொண்ட இருமுனை அயனி (zwitterion) உண்டா அ.க.4-48அ இருமுனைத் திருப்புதிறன் 755 கிறது (H,N+CH,-(007). அமினோ அமிலங்களின் அமில, காரப் பண்புகள் இழப்பிற்கு இருமுனை அயனி அமைப்பே காரணமாகும். நடுநிலைக் கரைசலில் ஓர் அமினோ அமிலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு சமநிலையில் உள்ளது. + RCHNH, COOH H+ + H RCHNH, COO- RCHNH, COO கரைசலின் pH ஐப் பொறுத்துச் சமநிலை அமை கிறது. அமிலக் கரைசலில் இணை அமிலமும், காரக் கரைசலில் இணைகாரமும் மேலோங்கி இருக் கின்றன. ஒரு குறிப்பிட்ட pH இல் அனைத்து அமி னோ அமிலங்களின் இருமுனை அயனியின் செறிவும் அதிகமாக இருக்கும். இருமுனை அயனி மின்சுமை யற்று இருப்பதால் அந்தக் குறிப்பிட்ட pH இல் அமினோ அமிலம் மின்புலத்தில் எந்த முனையை நோக்கியும் நகர்வதில்லை. இவ்வாறு எந்தக் குறிப் பிட்ட pH இல் அமினோ அமிலம் மின்புலத்தில் அங்குமிங்கும் நகர்வதில்லையோ அந்த pH அந்த அமினோ அமிலத்தின் மின்சுமை மாய்நிலை (iso electric point) எனப்படும். கிளைசீனின் அதிக உருகுநிலையும், ஹைட்ரோ கார்பன் கரைப்பான்களில் கரையாத அதன் பண் பும், கிளைசீன் உள்உப்பாகத் ( inner salt) திண்ம நிலையில் இருப்பதைக் காட்டுகின்றன. எக்ஸ் கதிர் கள் மூலமாக, அமினோ அமிலங்கள் இருமுனை அயனிகளாக இருப்பதை அறியலாம். த.தெ. நூலோதி. Finar I.L., Organic Chemistry, Vol 2, Fourth Impression, ELBS, London, 1982. இருமுனைத் திருப்புதிறன் இது பொருள்களின் மின்னியற் பண்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இப்பண்பு பொருள்களின் சீர்மை அமைப்பைப் பொறுத்தது. அதாவது பொருள் களில் அமைந்த இயைபுக் கூறுகள் பெற்றுள்ள மின் னியல் சமச்சீர்மையின்மையின் ஓர் அளவாக இதனைக் கொள்ளலாம். காந்த ஈர்ப்புத் திருப்புதிறன் இதனு டன் தொடர்புற்ற ஒரு காந்தப் பணியாகும்.