இருமூலக்கூறு வினை 761
மின்னாற்றல், காந்தப்புலனாற்றல், ஒளிவகை ஆற்றல் ஆகிய யாவுமே ஒன்றோடொன்று நெருங் கிய தொடர்புள்ளனவாதலால், ஒளிக்கும் மின்முனை வாக்கத்துக்கும் தொடர்பு இருப்பதை எளிதாகஉணர லாம். வெப்ப அலைகளாலான அகச் சிவப்புக் கதிர் களை ஒரு பொருளின் மீது பாய்ச்சினால் இக்கதிர் களின் ஆற்றல்பொருளிலுள்ள மூலக்கூறு பிணைப்பு களைப் பாதிக்கின்றது. பிணைப்புகள் யாவுமே எல்லா வெப்பநிலைகளிலும் அதிரக்கூடியவை. இவ் வதிர்வின் விளைவு அகச் சிவப்புக் கற்றையால் கூடுத லாகின்றது. ஓரின மூலக்கூறுகளுள் (திருப்புதிற னற்ற) இவ்வதிர்வு மாற்றம் சீர்மை குலையாது நிகழ் கின்றது. பல்லின மூலக்கூறுகளில் இவ்வதிர்வு மாற் றம் சீர்மைக் குலைவைக் கூடுதலாக்குகிறது. திருப்புதிறனின் இருமுனைத் விளைவுகள் பொருள்களின் தன்மைகளைப் பாதிக்கின்றன். கொதிநிலை வளிமங்கள் நீர்மங்களாகும் இயல்பு திண்மங்களின் கரைதிறன், ஒட்டுமை ஆகியன முனைவுகொள் திறனால் மாறுபடும் பண்புகள் • ஆகும். எடுத்துக்காட்டாக:வளிமத்தையோ, அம்மோ னியா வளிமத்தையோ நீர்மமாக்கும் முறையைக் கூற லாம். ஒரு HCI மூலக்கூறின் ஹைட்ரஜன் முனை மற் றொரு HC) மூலக்கூறின் குளோரின் முனையை ஈர்க்க வல்லது. உயர் அழுத்தத்தில் இம் முனையிகளுக் கிடைப்பட்ட ஈர்ப்பு, கூடுதலாகிறது. ஈர்ப்புவிசை மிகக் கூடுதலாகையில் வளிமம் நீர்மமாக மாறு கின்றது. திருப்புதிறனற்ற H2, Cl2, N, போன்ற ஓரின அணு மூலக்கூறுகளும், இணைதிறனே வாய்க்கப் பெறாத He, Ne, A போன்ற ஓரணு மூலக்கூறுகளும் உயர் அழுத்தத்தில் சீர்மை இழந்து, முனைவுற்று, ஒன்றையொன்று ஈர்த்து ஈர்த்து நீர்மமா கின்றன. இது தூண்டப்பட்ட முனையிகளின் தோற்றத்தால் ஏற்படுகின்றது. மூலக்கூறுகள் ஒன்றையொன்று மிகவும் நெருங்குகையில் ஒன்றின் அணுக்கருக்கள் மற்றொன்றின் எலெக்ட்ரான்களை ஈர்ப்பதால் அணுக்களின் சமச்சீர்மை குலைந்து இரு முனையிகள் தோன்றுகின்றன. முனைவுற்ற மூலக் கூறுகளாலான வளிமங்கள் நீர்மமாவது எளிதானது. திருப்புதிறனின் விளைவாகப் பல பொருள்கள் நீரில் கரைகின்றன. சமையல் உப்பு நீரில் கரைகிறது. உப்பில் வலிமை வாய்ந்த அயனிப் பிணைப்புகள் உள்ளன. உப்பை நீரிலிட்டவுடன் உப்பின் அயனி களை நீர் மூலக்கூறுகள் சூழ்ந்துகொள்கின்றன.நீர் இருமுனையி ஆதலால் நீரின் ஆக்சிஜன் அணு சோடியம் அயனியுடனும், நீரின் ஹைட்ரஜன் அணுகுளோரைடு அயனியுடனும் வலுக்குறைந்த பிணைப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் ஒரே நீர் மூலக்கூறு இருவகை அயனிகளுடனும் இணைவ தில்லை. இந்த அயனி - இருமுனையி இடையீடு ion- dipole interaction) கரையும் இயக்கத்திற்கு அடிகோலுகிறது. மின்முனைவற்ற மூலக்கூறுகளா இருமூலக்கூறு வினை 761 லான நீர்மங்களில் உப்புக் கரையாது; ஏனெனில் இந்நீர்மங்களில் இருமுனையிகள் இல்லை. ஈரமான களிமண்ணாலோ, பிளாஸ்டிக், ரெசின் களாலோ உருவாக்கப்படும் பொருளின் வடிவம் குலையாமல் நிலைத்திருப்பதற்கு முனைவுற்ற மூலக் கூறுகளுக்கிடைப்பட்ட ஈர்ப்பு வினை காரணமா கிறது. துணி, காகிதம், மரம், உலோகம் போன்ற பரப்புகளின் மீது ஈரக்காற்று ஒட்டுவதும் நீரின் இருமுனைத் திருப்பு திறனால்தான் நிகழ்கிறது. எஸ். விவேகானந்தன் -மே. ரா. பாலசுப்பரமணியன் நூலோதி. Barrow, Gordon M.. Physical Chemistry, McGraw-Hill Book Company, New York, 1966; Daniels, F., and Alberty, R.A.. Physical Chemistry, Third Edition, John Wiley and Sons, New York, 1966; Maron, Samuel H., and Lando, Jerrome B., Fundamentals of Physical Chemistry. Macmillan Publishing Company, New York, 1974; Meclellan, A,L., Tables of Experi- mental Dipolemoments, W.H. Freeman and Co., San Francisco, 1963. இருமூலக்கூறு வினை ஒரு வினையில் கிளர்வுற்ற அளவைத் (activated com- plex) தோற்றுவிக்க எத்தனை எண்ணிக்கையுள்ள இனங்கள் (மூலக்கூறுகள், அணுக்கள், இயங்கு உறுப்புகள், அயனிகள் தேவையோ அவையே வினையின் வினைப்படு மூலக்கூறு எண் (molecularity ) எனப்படும். இவ்வினைப்படு மூலக்கூறு எண் ஒரு முழு எண்ணாக இருக்க வேண்டும். ஒன்று, இரண்டு, மூன்று மூலக்கூறுகள் கிளர்வுற்ற அணைவுகளைத் தோற்றுவித்தால் அவை ஒரு மூலக்கூறு (unimolecular) இருமூலக்கூறு (bimolecular), மும்மூலக்கூறு (trimole- cular) வினைகள் எனப்படும். எனவே இக்கருத்து கொள்கையளவினதாகும்; ஆனால் வினை வரிசையை ஆய்வின் மூலம் கண்டறியலாம். இருமூலக்கூறு வினையில் ஒரு வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்த இரு மூலக்கூறுகள் ஒன்றோ டொன்று மோதும்போது இரண்டிற்கும் இடையி லுள்ள பினணப்பு முறிவடைகிறது. புதிய பிணைப்பு கள் ஏற்பட வினைப்பொருள்கள் உண்டாகின்றன. எடுத்துக்காட்டாக, ஹைட்டிரஜன் அயோடைடு ஹைட்ரஜனாகவும், அயோடினாகவும் பிரியும் வினை மாற்றத்தைக் கொள்ளலாம். 2HI H -1 H... H I
- H, + I,
H-I H 468 I H I