இணை நிலை மின் சுற்றுவழிகள் 55
நூலோதி. பழனியப்பன், எஸ்., ஆல்காக்கள், வி.கே.பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1986. Alex - opoulos, C. J., Introduction Mycology.John Wiley Sons Inc., New York, 1962; Mehrotra, B. S. The fungi an introduction, Oxford and IBH Pub. Co., New Delhi 1980. இணை நிலை மின் சுற்றுவழிகள் 55 (circuit) உள்ள மின்னோட்டம் (current, I). I, I, என இரண்டு பகுதிகளாகப் பிரிகிறது. 11, 1, இரண் டின் கூட்டுத்தொகை Iக்குச் சமம். I=I,+I,, == எனவே. R$ Rz ww இணை நிலை மின் சுற்றுவழிகள் மின் இணைப்புகளைப் பொதுவாகப் பக்க இணைப்பு முறை என்றும் (parallel connection), தொடர் இணைப்பு முறை என்றும் (series connec- tion) இரு முறைகளாகப் பிரிக்கலாம். ஒரு மின்கலத் துடன் அல்லது ஒரு மின்னோட்ட இயற்றியுடன் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மின்தடை களை இணையாகப் பிணைக்கும்பொழுது ஓர் இணைநிலை மின்சுற்றுவழி (paraliel circuit) கிடைக் கிறது. வீடுகளில் வழங்கப்படும் மின்சாரத்தைப் பற்பல கருவிகளுக்குப் பயன்படுத்தும்போது, அவை யாவும் பக்க இணைப்பு முறையிலே பொருத்தப்படுகின்றன. மின்இணைப்பு படம் 1. மின்விளக்குகளின் இணைநிலை இணைப்பு பக்க இணைப்பு முறையில் ஒரு கருவி கெட்டுப்போனாலும் அல்லது மின் விளக்கின் இழை அறுந்து போனாலும் மற்றவை இயங்கும். தேவையான மின் விளக்குகளை அல்லது கருவி களைத் தனித்தனித் தொடர் மாற்றிகளைக் (swit- ches) கொண்டு இயங்கச் செய்ய முடியும். அனைத்து மின் மின்னழுத்தம் சாதனங்களுக்கும் செலுத்தப்படும். சமமாகச் பக்க இணைப்பில் மின் தடைகள். இந்த வகை இணைப்பு, படத்தில் காணப்படுகிறது. இதனில் v' என்ற மின்னழுத்த வேறுபாடு (potential difer- R ence) மின்தடைகள் (resistance) R1, இரண்டுக் குமே பொதுவாக உள்ளன. மூலச்சுற்று வழியில் 2 R3 w E படம் 2. இணைநிலை மின்சுற்றுவழி R, வழியாக II மின்னோட்டமும், R, வழியாக I. மின்னோட்டமும் பாய்கின்றன. இப்பொழுது 1, = V/R,; I, = V/R, ஆகும். எனவே, தொகு மின் தடை R = VI ஆகும். இரண்டு மின் தடைகள் Ry R, ஆகியவை பக்க இணைப்பில் இருக்கும்பொழுது, அவற்றின் வழியாகச் செல்லும் மின்னோட்டம் முறையே II, I, எனில், 11 = R R, + R, R₁ R1 + R, I I ஆகவே, இரண்டு கிளைகளில் பாயும் மின்னோட் டங்கள் அக்கிளைகளில் அமைந்த மின் தடைகளுக்கு எதிர் விகிதத்தில் இருக்கும். தொடர்நிலை மின்சுற்றுவழிகளை விட இணை நிலை மின்சுற்றுவழிகள் இல்லங்களில் பயன்படுத்தச் சிறந்தவை. ஏனென்றால், தொடர்நிலையில் ஒரு மின்விளக்குக் கெட்டுப் போனால் மற்றவை எரியா பக்க இணைப்பு முறையில் அமைக்கப்பட்ட கருவி கள். ஒரு மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தை அளப்பதற்குப் பயன்படும் கருவி அம்மீட்டர் (am- meter) ஆகும். மின்னோட்டமானியில் (golvano- mater) உள்ள கம்பிச் சுருளின் முனைகளின் குறுக்கே குறைந்த அளவு மின்தடையுள்ள இணைத்தடம் (shunt) ஒன்றை அமைத்தால் அம்மின்னோட்டங் காட்டி அம்மீட்டராக மாற்றியமைக்கப்படும். இணைத்தடத்தின் மின்தடையைத் தகுந்தவாறு மாற்றியமைப்பதால் அம்மீட்டர் அளவுகளின் நெடுக் கத்தை (range) மாற்றிக் கொள்ளலாம்.