பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/791

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவாழ்விகள்‌ 767

ஆரைகளால் தாங்கப்படவில்லை. செவுள்களும், செவுள்பிளவுகளும் நிறையுயிரி நிலையிலும் நிலைத் திருப்பன. இரண்டு இணைக் கால்களும் ஒரே அளவு நீளமுடையவை. மேல், கீழ் தாடைகளில் பற்கள் உள்ளன. இவற்றில் உட்கருவுறுதல் நடைபெறு கிறது. இந்தியாவில் அசாம், டார்ஜிலிங் ஆகிய இடங்களில் இமாலயச் சலமாண்டர் (Himalayan salamander) காணப்படுகிறது. இது டைலட்டோடி ரைட்டான் வெர்ருகோசஸ் என்னும் சிறப்பினத்தைச் சேர்ந்தது. புரோட்டியஸ் பொதுவினத்தைச் சேர்ந்த ஐரோப்பியக் குருட்டுச் சலமாண்டர்கள் யுகோஸ் லாவிய நாட்டில் நிலத்தடிக் குகைகளில் வாழ் கின்றன. இவற்றின் செவுள் உறுப்புகள் வாழ்நாள் முழுதும் நிலைத்துள்ளன. வடக்கு, மத்திய அமெரிக்கா வில் வாழும் ஆம்பிளிஸ்ட்டோமா இனத்தைச் சேர்ந்த புவி சலமாண்டர்களின் உடலின் மேற்பரப் பில் கறுப்பு, மஞ்சள் கோடுகள் காணப்படுவதால் இவை புலி சலமாண்டர்கள் எனப்படுகின்றன. ஆக்சலாட்டல் எனப்படும் இதன் வேற்றிளரிகள் நிறையுயிரியாக வளருமுன்பே இனமுதிர்ச்சியுற்று இனப்பெருக்கம் செய்கின்றன. இவ்வாறு இளரிப் பண்புகள் முழுதும் மறையாத நிலையில் பெருக்கம் செய்யும் தன்மை இளமுதுக்குறுதல் (neotony ) எனப்படும். இன் வரிசை: ஏப்போடா. இவ்வரிசை ஜிம்னோஃபியானா என்றும் சீசிலியா என்றும் வழங்கப்படுகிறது. சதுப்பு நிலப்பகுதிகளில் வாழும் கால்களற்ற பாம்பு போன்ற புறத்தோற்றமுடைய இருவாழ்விகள் இந்த வரிசை யில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றின் தோலில் மிகச் சிறிய இடைப்படைச் செதில்கள் காணப்படுகின்றன. மிகச்சிறிய, பார்வையாற்றல் அற்ற கண்கள், உடல் தோலால் மூடப்பட்டுள்ளன. சில ஏப்போடுகளின் தலைப்பகுதியில் உள்ளிழுக்கும் தன்மையுடைய குட்டையான மெல்லிய உணர்நீட்சிகள் (tentacles ) உள்ளன. ஆண் ஏப்போடுகளில் கல்வியுறுப்புகள் (copulatory organs) உள்ளன. உடல் நீண்டு இருப் பதால் இருநூற்றுக்கும் மேற்பட்ட விலா எலும்புகள் உள்ளன. இவற்றின் உடல்நீளம் இனங்களுக்கு ஏற்ப 10 செ. மீ. முதல் 1.5 மீட்டர்வரை வேறுபடுகிறது. இருவாழ்விகள் மண்புழுக்களைப் போல நிலத்தில் வளைகளில் வாழ்கின்றன. பொதுவாக இவை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை. சில ஏப் போடுகள் குட்டிபோடும் (viviparous) இயல்புடை யவை. இப்பிரிவைச் சேர்ந்த இக்தியோபிஸ் (ichthyo- phis), ஜெஜெனோ பிஸ் (gegenophis) ஆகிய இரண்டு பொதுவினங்கள் தென்னிந்தியாவில் கேரளக் கடற் கரைப் பகுதியிலும், மைசூர், குடகுமலைப் பகுதி யிலும் காணப்படுகின்றன. வாழிடங்கள். நீர், நிலம் ஆகிய இரண்டு வாழிடங் இருவாழ்விகள் 767 களில் வாழக்கூடிய இவ்விலங்குகளின் வாழிடங்கள் மிக வேறுபட்டவை. சில இருவாழ்விகள் வாழ்நாள் முழுதும் நீரிலேயே உள்ளன; சில இருவாழ்விகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் நீரில் வாழ் கின்றன; வேறு சில தம் வாழ்நாள் முழுதையும் நிலப்பகுதியிலேயே கழித்துவிடுகின்றன. பால்வழி இருதோற்றம் (sexual dimorphism). இரு வாழ்விகளில் ஆண், பெண் ஆகிய இரு வகைகளுக் கிடையில் புறத்தோற்றத்தில் பால் வேற்றுமைகளும், நிறவேற்றுமைகளும் காணப்படுவதில்லை. ஆனால், இனப்பெருக்கப் பருவகாலங்களில் இரண்டாம் நிலைப் பால்பண்புகள் உண்டாகின்றன. இக்காலங் களில் சில இனத்தைச் சேர்ந்த ஆண்கள் பளிச்சிடும் உடல் நிறமும் வளர்ச்சியுற்று விறைத்து நிற்கும் முதுகுச் செதில்களும் பெறுகின்றன. ஆண் தவளை களுக்கும், தேரைகளுக்கும் இனப்பெருக்க காலங் களில் முன்கால் கட்டைவிரல்களில் மென்மையான கலவித்திண்டுகள் (nuptial pads) வளருகின்றன. இத் தசையில் மெல்லிய அரும்பு முள்கள் வளர்ந்து, கலவி பின்போது பெண் உயிரியை இறுகப் பற்றிக் கொள்ள உதவுகின்றன, இனப்பெருக்க காலம் முடி வுற்றபின் இத்தசைகள் குறைந்து மறைந்து விடு கின்றன. பருவகாலத்தில் ஆண் தவளைகளின் கீழ்த் தாடைப் பக்கங்களில் ஒலிப்பைகள் (vocal sac) நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. இப்பைகளின் உதவியால் ஆண் தவளைகள் ஒலி எழுப்பிப் பெண் தவளை களின் கவனத்தைத் தம்பால் ஈர்க்கின்றன. இனத் இனப்பெருக்கம். இனப்பெருக்ககாலம் திற்கு இனம் வேறுபடுகிறது. பொதுவாக இவை குளிர்காலங்களிலும், மழைக்காலங்களிலுமே இனப் பெருக்கம் செய்கின்றன. இனச்சேர்க்கை நீரில் நடை பெறுகிறது. கருமுட்டையைச் சூழ்ந்துள்ள நிறமற்ற பொருள் நீரை உறிஞ்சி உப்பி, நீரில் நுரை போல மிதக்கிறது. கருமுட்டைக டைகளுடன் மிதக்கும் இந்த நுரைக்கு முட்டைநுரை (spawn) என்று பெயர். இந்த முட்டைநுரை நீர்த்தாவரங்களில் ஒட்டிக் கொள்கிறது. இம் முட்டைகளிலிருந்து தலைப் பிரட்டை வேற்றிளரிகள் வெளிவந்து வளர்உருமாற்ற மடைந்து நிறையுயிரிகளாக நிறையுயிரிகளாக மாறுகின்றன. மரங் களில் வாழும் பறக்கும் தவளைகள் மரப் பொந்து களில் அல்லது இலைக்கொத்துகளிலுள்ள நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. சில தவளைகளில் காணப்படும் சேய்பேணுமுறை வியக்கத் தக்கதாகும். செவிலித்தேரை கருவுற்ற முட்டைகளை அதன் பின் முதுகு, தொடைகளுக்கிடையில் ஏறத் தாழ மூன்று வார காலம் (முட்டைகள் பொரிந்து வேற்றிளரிகள் வெளிவரும் காலம் வரை) சுமக் கின்றன. தென் ஆப்பிரிக்காவில் வாழும் கிரிப்டோ பேட்ரேகஸ் இவான்சி எனப்படும் தவளை, முட்டை களை வேற்றிளரிகள் வெளிவரும்வரை தன் முதுகில் சுமக்கிறது. ஃபிளக்ட்டோநேட்டஸ் இனத்தைச் சேர்ந்