பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/793

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருள்பார்வைத்‌ தகவமைப்பு 769

இருள்பார்வைத் தகவமைப்பு வெளிச்சமுள்ள இடத்திலிருந்து இருண்ட இடத்திற் குச் செல்லும்போது முதலில் பார்வைத்திறன் குறை கிறது. சற்று நேரத்தில் கண் இருளுக்கு ஏற்ப மாறு வதால் சுற்றிலும் உள்ள பொருள்கள் தெரிய ஆரம் பிக்கின்றன. இதனையே இருள் பார்வைத் வமைப்பு (dark adaptation) எனலாம். தக வெளிச்சத்தில் இருந்து வந்த ஒருவரை இருளில் அமரவைத்துச் சில நிமிட இடைவெளிக்கொருமுறை, மிக மங்கலான ஒளியை அவரது கண்ணில் பாய்ச்சி, அவரது கண்ணில் இருளுக்குத்தக அமையும் தன் மையை அல்லது திறனை அளவிட முடியும். இந்த ஆய்வு முடிவடையும் தறுவாயில் அவரது பார்வைத் திறன் பத்தாயிரம் மடங்காக அதிகரிக்கிறது. முதல் நான்கு நிமிடங்களில் பார்வைத் திறன் வேகமாக அதிகரித்து, அடுத்து வரும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு சமநிலையில் இருக்கிறது. பிறகு இது மிக மெது அதிகமாகிக் கொண்டே வந்து இறுதியில் ருளில் பார்க்கும் உச்சநிலைத் திறனை அடைகிறது. இதனை இருள் இசைவு எனக் குறிப்பிடுவர். இந்த இரண்டாவது மாற்றத்திற்குக் காரணம் விழித்திரை யில் அமைந்துள்ள குச்சிகள் (rods) எனப்படும் ஒளி உணர்விகளின் இருளுக்குத் தகஅமையும் தன்மையே யாகும். லாக விழித்திரையின் ஒளி உணர்விகள் குச்சிகள் என் றும்,கூம்புகள் என்றும் இரண்டு வகைகளாகப் பிரிக் கப்படுகின்றன. ஒரு மனிதனின் விழித்திரையில் நூற்று இருபத்தைந்து மில்லியன் குச்சிச் செல்களும், ஆறு மில்லியன் கூம்புச் செல்களும் உள்ளன. குறைந்த ஒளியில் பார்க்கும் திறன் (scotopic vision) குச்சிச் செல்களால் உண்டாகிறது. அணில்களின் கண்களில் கூம்புச் செல்கள் மட்டுமே இருப்பதால் அவற்றிற்குப் பகலில் மட்டுமே பார்வைத் திறன் உண்டு. வௌவால்களின் கண்களில் குச்சிச் செல்கள் மட்டுமே இருப்பதால் அவற்றிற்கு இரவில் மட்டுமே கண் மனிதனுக்கு இரண்டு உண்டு. செல்களும் தேவையான அளவு இருப்பதால் இரவி லும் பகலிலும் கண் தெரிகிறது. பார்வை வகைச் பிறவியிலேயே மாலைக்கண் நோய் உள்ளவர் களுக்கு இந்தக் குச்சிச் செல்கள் செயலற்றுப் போவ தால் இவர்களுக்கு இருளுக்குத் தகவமையும் திறன் இல்லாமற் போகிறது. கூம்புச் செல்களுக்குக் குச்சிச் செல்களைப் போல் இருளுக்குத் தகஅமையும் திறன் முழுமையாக இல்லாவிட்டாலும், முதலில் மிக மிகக் குறைந்த அளவில் இருளுக்குத் தகஅமையும் திறனை அவற்றால் உருவாக்க முடிகிறது. ஆனால் கூம்புச் செல்கள் மிக விரைவாகச் செயல்பட்டுச் சில நிமிடங் களில் இச்செயல் திறனை இழந்துவிடச்செய்கின்றன. அ.சு.4-49 இருள்பார்வைத் தகவமைப்பு 759 குச்சிச் செல்கள் மெதுவாகச் செயல்படத் தொடங்கி நீண்ட நேரம் செயல்படும் திறன் பெற்றிருக்கின்றன. மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்குக் கூம்புச் செல்கள் மட்டுமே இருப்பதால் அவர்கள் சில நிமிடங் கள் மட்டும் இருளுக்குத் தகஅமையும் தன்மை பெறு கிறார்கள். படம்-1 இருளுக்குத் தகஅமையும் தன்மையை அளவிட்டுக் காட்டுகிறது. க்னக (அளவு நிலை) [ விதிக்கட்டந்த அலகுகள்] 51 முக்தப்பகுதி 2533424 0 10° D 5° முககுப்பத்தி பொட்டுப்பகுதி சாதனைத் தூண்டனின் அமைவு இருளுக்குத் தகஅமையும் திறன் முதலில் கூம்புச் செல்களினால் வேகமாக ஏற்பட்டு ஐந்து நிமிடங் களுக்கு நீடிக்கிறது. பிறகு சமநிலை அடைகிறது. பின்னர் குச்சிச் செல்களினால் ஏற்படும் மெதுவான ஆனால் நீடித்த இருளுக்குத் தகஅமையும் திறன் முப்பது நிமிடங்களில் உண்டாகிறது. இந்த பார்வைத் இருளுக்குத் தக அமையும் தன்மையை அளக்க ஒளிமானிகள் எனப்படும் கருவி கள் உள்ளன. ஆனால் அவற்றைச் சாதாரணக் கண் ஆய்வுகளுக்குப் பயன்படுத்துவதில்லை. ஒளிமானி ஆய்வு செய்யப்படுவதற்கு முன்னர் அந்த ஆய்வுக்கு உள்ளாகும் மனிதர் குறைந்தது இருபது நிமிடங் களாவது இருட்டறையில் இருக்க வேண்டும். அதிக வெளிச்சத்திலேயே ஒருவர் இந்த ஆய்வுக் குள்ளாகும்போது அவருடைய இருளுக்குத் தக அமையும் திறன் மிக மெதுவாக உண்டாகிறது. இருளுக்குத் தக அமையும் கண்பார்வையின் செயல்பாடானது குச்சிச் செல்களில் உள்ள நரம்பு நார்களில் மாற்றத்தை வேகமாக ஏற்படுத்துவதோடு குச்சிச் செல்களின் வெளிப்புறத்தில் ஒரு வேதி மாற்றத்தையும் மிக மெதுவாக ஏறத்தாழ முப்பது நிமிடங்களில் ஏற்படுத்துகிறது. இந்த வேதி மாற்றம் சற்றுச் சிக்கலானது. ஏனெனில் இதற்குத் தேவை யானு குச்சிநிறமி அல்லது பார்வைநிறமி இருள் இசைவின்போதுதான் உண்டாகிறது; அது ஒளி யினால் சிதைக்கப்படுகிறது. இந்தப் பார்வை