774 இரைச்சல் எழுப்பி, மின்
774 இரைச்சல் எழுப்பி, மின் RC படுகிறது. இந்த வடிப்பி மேல்கீழ்த் துண்டிப்பு அலை வெண்களைத் தேவைப்படித் தேர்ந்தெடுத்துக் கொள் ளும் திறன் வாய்ந்தது. எனவே, எந்த அலை வெண் பட்டையையும் இதில் பெறமுடியும். இந்த வடிப்பி பலகட்ட RC வடிப்பிகளால் ஆனது ஒவ் வொரு கட்டமும் ஒரு மிகைப்படுத்தியால் பிரிக்கப் படுகின்றது. உயர் தாழ் சிறப்புயல்புகளைப் பயன் படுத்திக் கடத்தல் பட்டைச் சிறப்பியல்புகள் உருவாக் சப்படுகின்றன. வடிப்பியை ஒத்திசைவிக்க மதிப்புகள் மாற்றப்பட வேண்டும். வடிப்பின் விளிம்பு களைச் சரிப்படுத்த இதில் உச்ச மதிப்புச் சுற்று வழிகள் பயன்படுத்தப்பட்டாலும் துண்டிப்பு வீதங்கள் எண்மத்திற்கு 18 முதல் 24 டெசிபலுக்கு மேல் உயர்வதில்லை. எனவே, நெடும் சரிவுடைய இரைச்சலைப் பகுப்பாய்வு செய்ய இவை தகுந்தவை அல்ல. மிகு குறும்பட்டை வடிப்பிகளாகவும். இவற்றைப் பயன்படுத்த முடியாது. காண்க. வடிப்பி. இரைச்சல் எழுப்பி, மின் மின் மு.புகழேந்தி பொதுவாகத் தற்செயல் மின் ஓசைகளை மின்னியல் அளவீடுகளுக்காக எழுப்பும் ஒரு கருவி ஒலி எழுப்பி எனப்படும். ஒரு வானொலிப் பெட்டி அல்லது மிகைப் பியின் ஓசைஎண்ணை அளப்பதற்கு ஒலி எழுப்பிகள் பயன்படுகின்றன. ஒரு மின்னியல் அமைப்பு, த ற் செயல் ஒலிக்கு அளிக்கும் எதிர்விளைவு ஆய்வுகளுக் கும், ஓசையின் தீவிரத்தை அளவிடுதற்கும் கூட அவை பயன்படுகின்றன. ஓசை எழுப்பியின் சில மாதிரிகள். சூடான கம்பி, இருமுனையம், வளிமம் வெளியீட்டுக் குழல், கிளை ஸ்ட்ரான், நேர் மின்னோட்டத்தால் சூடாக்கப்படும் ஒரு விளக்கு இழையின் சூடான கம்பி ஆகியவை ஓசை எழுப்பியாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஓசையைச் செலுத்த வேண்டிய முனைகளில் குறுக்க இழை இணைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு வானொலிப் பெட்டியின் விண் சட்டமுனை களின் இழை எழுப்பும் ஓசை, வெப்ப ஓசையாகும். நைகுவிஸ்ட் வாய்பாட்டால் அதன் செறிவு கணக் கிடப்படலாம். N ARTo இங்கு T என்பது வெப்பநிலை R இழையின் தடை ச = போல்ட்ஸ்மேன் நிலை எண் ஓர் இருமுனைய ஓசை எழுப்பியில் வெடி விளை வால் ஓசை எழுப்பப்படுகிறது. மாறு நேரத்தின் தலைகீழ் எண்ணிற்கும் மிகக்குறைவான விரைவு எண்களில் ஓசைச்செறிவு எண் N = 2CI என்ற ஸ்காட்டி வாய்பாட்டால் பெறக்கூடும். இவ்வாய் பாட்டில் C என்பது ஓர் எலெக்ட்ரானின் மின் ஏற்பு, 1 என்பது சராசரி நேர் மின்முறை மின் ஒட்டம். இத்தகைய கணக்கீடுகளில் வழக்கம்போல் நேர் முனை மின்னோட்டம் மின் அணு அணு உமிழ்வால் மட்டுப்படுத்தப்படுகிறது. வளிம் வெளியீட்டு ஓசை எழுப்பி பொதுவாக ஓர் அலைவழிப்படுத்தியால் மூடப்பட்ட ஒளிர் குழலாகும். ஒலி எழுப்பலின் நுணுக்கம் வெப்பமாக இருக்கும். வளிம் வெளியேற்றத்தில் உள்ள எலெக்ட்ரான்கள் உயர்ந்த தற்செயல் வேகங்களைப் பெறுகின்றன. அவை உயர்ந்த ஒத்த ஓசை வெப்ப நிலையை ஒத்து அமைகின்றன. இந்த ஒத்த ஓசை வெப்பநிலை, குழாயில் உள்ள வளிமத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. ஆனால் குழலின் அமைப்புகளையோ வெளியேற்ற மின் னோட்டத்தையோ பொறுத்து அமைவதில்லை. ஓர் எதிர்வினை கிளைஸ்ட்ரான், அதிர்வுகளைத் தவிர்க்கப் பிரதிபலிப்பு வலை, குழமத்துடன் பொருத் தப்பட்டு, எதிர்முனை மின்னோட்டத்தின வெடி விளைவால் ஓசை எழுப்புகிறது. ஓர் ஓசை எழுப்பி எழுப்பும் ஓசை ஏறக்குறைய நிலையான செறிவு கொண்டிருந்தால் வசதியாக இருக்கும். விரைவு எண் இயக்காஎல்லை முழுதும் நிச்சயமாகக் குறையக்கூடாது. வெப்ப ஒசை மூலங்கள் இத்தகைய தட்டையான ஓசைப்பிரிகையை வானொலி அலைவெண்கள் அனைத்திலும் அளிக்கின்றன. ஏனெனில் அந்த மூலக் கருவிகளிலும், சுற்றுகளிலும் உள்ளமைந்த கொண் மங்களும் (capacitor ) தூண்டிகளுமே (inductors) அலைவெண்ணை மட்டுப்படுத்துகின்றன. இருமுனையங்களோ மாறுநேரத்தின் தலைகீழ் எண் வரிசையில் உள்ள அலைவெண்களை மட்டுப் படுத்துகின்றன. செயல்முறையில் சிறப்பான இரு முனையங்கள் சில நூறு மெகாஹெர்ட்ஸ் வரை பயன் படுத்தப்படக்கூடும். நுண் அவை அலைவெண்களின் ஒலி எண்ணை அளப்பதற்கு அனைத்து மிகைப்பி களும் (மும்முனையம், பயண அலைக்குழல், கிளைஸ்ட் ரான் ஆகியவை) உயர்ந்த ஓசை எண் கொண்டுள் ளன. அடிப்படை வெப்ப ஓசைக்கு மேல் 20 டெசிபல் வரை உயர்ந்த ஓசை எண் ஆகும். வெப்ப வெளியீட்டுக் குழாய்கள், வெப்பக்கம்பி அலை மூலங்களை விடச் சிறந்தவை. அவை கிடைக் கும் ஓசைத் திறனை மிகுதியாக உருவாக்குகின்றன.