பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/799

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரைச்சல்‌, ஒலிசார்‌ 775

நுண்கலை எண்களில் கிளைஸ்ட்ரான்கள் சிறந்த அலை எழுப்பிகள். ஆனால் அவை முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. அவற்றை நிரந்தரமாகப் பயன்படுத்த வேண்டும். இரைச்சல், ஒலிசார் எஸ்.சுந்தரசீனிவாசன் தேவையற்ற ஒலி, இரைச்சல் எனப்படும். எந்தவோர் ஒலியையும் தேவையற்றதெனக் கூற ஒரு புறநிலை யான அளவுகோல் வேண்டும். மனிதர்களைப் பொறுத்தவரை ஒலி இரைச்சலா இல்லையா என்பது அவர்களுடைய உளநிலையைப் பொறுத்தது. உறைத்திறம். ஒலிக்கான உளவியலான மனிதத்து வங்களை மதிப்பிடுவதற்கும் புறநிலை அளவு கோலைக் கண்டறிவதற்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் புறநிலை அளவில் எரிச்சலூட்டல், பேச்சுக்குறுக்கீடு, கேள்விப் புலனுக்கு ஊறுவிளைத்தல், பணி செய்யும் திறத் தைக் குறைத்தல் ஆகிய உட்கூறுகள் கருதப்படு கின்ற றன. மனிதரிடம் உருவாகும் விளைவைப் பொறுத்து இரைச்சல் அளவிடப்படுகின்றது. அது குறிப்பாக அயர்வு அல்லது புறநிலைக் கட்டமைப்பு, கருவிகள் ஆகியவற்றில் ஏற்படுத்தும் குறுக்கீட்டைப் பொறுத் தது. இந்த வகைகளில் இரைச்சலுக்கான அளவு புறநிலைத் கோட்பாட்டு வழியாக முற்றிலும் தன்மை வாய்ந்ததாக உருவாக்கமுடியும். வானூர்தி களின் கட்டமைப்பில் ஏற்படுவது போன்ற ஒலி அயர்வை உருவாக்குவதாலும், வானூர்திகளில் உள்ள வழிகட்டுப்படுத்தும் மின்துகளியல் சுற்றுவழி களில் இதன் செறிவான ஒலி அலை ஊறுவிளைவிப் பதாலும் இது தேவையற்றதெனக் கருதப்படுகிறது இரைச்சலுக்கான மூன்றாவது வரையறை, தேவையான ஒலியிலிருந்து வேறுபடுகின்ற சூழல் ஒலியைக் குறிப்பிடுகிறது. இந்த ஒலி தேவையான ஒலியுடன் கலந்து இழைந்து அதன் இயல்பைக் கெடுத்துவிடும். இவ்வாறு சோனாா என்ற கருவி யில், கண்டறியும் பொருளிலிருந்து திருப்பி அனுப் பப்பட்ட குறிப்பலை, தேவையான ஒலியாகும். பிற ஒலிகள் இரைச்சல் எனப்படும். இயற்பியல் குறிப்பீடுகள் அல்லது தரக்குறிப்புகள் முன்னர்க்கூறிய வரையறைகள் இரைச்சல் எனப்படும் ஒலியலை குறித்த பொது இயல்பை விளக்கவில்லை. ஒலி அலை குறிப்பிட்ட தூய குரலையோ பல்வேறு சைன் வடிவ அலைத்தொகுப்பையோ குறிப்பிடுகிறது. இரைச்சல், ஒலிசார் 775 அல்லது பல்வேறு தறுவாய்ச் சிறப்பியல்புகளையும் வீச்சுகளையும் உடைய எண்ணிக்கையிலான அவற் றின் தற்செயல் தொகுப்பு நிகழ்வைக் குறிப்பிடும் தானியங்கியின் எரிபொருள் வெளியேற்ற இரைச்சல் ஒரு தூய குரல் ஒலியாகும். ஆனால், காற்றுத் தாரையின் ஓசை தற்செயல் இரைச்சலாகும். இந்த ஒலியின் இயற்பியல் சிறப்பியல்பு அதனு டைய கதிர்வீச்சுச் செறிவையும் அலைவெண்ணை யும், அதனுடைய இடப்பரவலையும் குறிப்பிடும். சிறு இடைவெளியிலுள்ள தனித்த மதிப்புகளால் தனி அலைவெண் உடைய ஒலி அலையைக் குறிப் பிடுவது போலன்றி இந்தத் தற்போக்கு இரைச்சல்கள் புள்ளியியல் மதிப்புகளால் குறிப்பிடப்படுகின்றன. ஒலிசார் தற்போக்கு இரைச்சல் மின்னியல் இரைச்ச லுக்கு இணையான தாகும். 1. ஹெர்ட்ஸ் அலைவெண் பட்டையில் உள்ள கதிர்வீச்சுச் செறிவின் மதிப்பால் இரைச்சல் அளவு குறிப்பிடப்படுகின்றது. தற்போக்கு இரைச்சல் சற்றுச் சீரான செறிவுப் பரவலைக் கொண்டிருந்தால் அது 1 ஹெர்ட்சுக்கும் மேலான செறிவு மட்டம் எனப்படும். இது 5,50,500 ஹெர்ட்ஸ் ஆகிய இடைவெளியிலுள்ள அலைவெண் பட்டை அகலங்களாலோ 1/10, 1/3, 1 எண்மம் உடைய அலைவெண்களாவான நிலை விழுக்காட்டுப் பட்டை அகலங்களாலோ குறிப்பிடப்படும். வழக்க மாகத் தொழிலக இரைச்சல் கட்டுப்பாட்டு நடை முறைகளில் இரைச்சல் செறிவு எண்ம அலைவெண் பட்டைகளால் குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலான இரைச்சல் அளவைகளுக்கு நடைமுறையில் தேவைப்படும் அலைவெண் இடை வெளி, எண்ம அலைவெண் பட்டையால் உள்ள டக்கப்படுகிறது. மிகச்சிறிய பட்டையின் நடு அலை வெண் 63 ஹெர்ட்ஸ். மிகப் பெரிய பட்டையின் நடு அலைவெண் 8000 ஹெர்ட்ஸ். தற்போக்கு இரைச்சலின் ஒட்டு மொத்தச் செறிவு அது குறிப் பிடப்படும் அலைவெண் பட்டைகளின் அனைத்து மதிப்புகளின் சராசரி மதிப்பாகும். காண்க, இரைச்சல் மின். நடைமுறையில் புறநிலையான இரைச்சல், புற நிலையான ஓசை போன்ற இயற்பியல் கூறால் மதிப் பிடப்படுகிறது. இது 113 அல்லது 1 எண்மப் பட்டை களில் அளக்கப்படுகின்றது. சீர் இரைச்சல், சீர் இரைச்சல் என்பது 1 ஹெர்ட்ஸ் அலைவெண் பட்டையில் உள்ள ஒவ்வொரு அலை வெண்ணிலும் ஒத்த வீச்சுடைய அலையாகும். தகைய சீர் இரைச்சல் மின் சுற்று வழிகளிலேயே ஏற் படும் என்றாலும் ஒலிசார் இரைச்சலில் அரிதாக நிகழ்கிறது. பெரும்பாலான தற்போக்கு ஒலிசார் இரைச்சல் அலைவெண்ணைப் பொறுத்துச் சீரற்ற வீச்சுப் பரவலைக் கொண்டிருக்கும்.