பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/801

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரைச்சல்‌, மின்‌ 777

N (f) = 4k TR r(f) N (f) = 4k TR வெடி இரைச்சல். ஒரு வெப்ப வெற்றிடக் குழா யில் எதிர்முனையம் தற்செயலாக வெளியிடும் மின் அணுக்களால் தோன்றும் மின்னோட்ட ஏற்றத் தாழ்வுகளே லெடி இரைச்சலாகும். ஒரு துப்பாக்கியி லிருந்து வெளிப்படும் குண்டுகள் போன்று, விட்டு விட்டு வலிவான இரைச்சலாக எழும்புவதால் அது வெடி இரைச்சல் (shot noise) என்று அழைக்கப் படுகிறது. இந்த இரைச்சல் மின்னோட்டத்தால் குறிப் பிடப்படுகிறது. வெப்பத்தால் மட்டுப்படுத்தப்படும். ஓர் இரு முனையத்தில் (வெப்பக்குழல் வகை) இது கீழ்க்காணும் வாய்பாட்டால் பெறப்படும். I2 n = 2lds qe B ஆம்பியர்கள் ஒரு PN சந்திப்பு இரு முனையத்தில் குறைந்த அலைவெண்களிலும் மின்னோட்டத்திலும், In = 2 (1 + 1,) qe B. எனும் வாய்பாட்டால் பெறப்படும். பிரிப்பு இரைச்சல். பிரிப்பு இரைச்சல் என்பது ஒரு பல் பொருள் வெற்றிடக்குழாயில், ஒரு மின்முனையத் தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சேர்க்கும் மின் முனைகளுக்கிடையே, மின் அணுக்கற்றையின் தற் செயலான பிரிப்பால் (ஒருநாண் முனையத்தில் திரைவலைக்கும், நேர்மின் முனையத்திற்கும் இடையே தோன்றுவது) தோற்றுவிக்கப்படும் மின் னோட்ட ஏற்றத்தாழ்வின் விளைவால் தோன்றுவ தாகும். மின்னோட்டம் இரண்டு அல்லது அதற்கு மேற் பட்ட பாதைகளுக்கிடையே பிரிய நேரிடும்போது பிரிப்பு இரைச்சல் தோன்றுகிறது. ஒரு திரிதடையத் தில் (transistor) மூன்றாவது முனையும் மின்னோட் டம் பெறுவதாக இருப்பின், அதைவிட இரு முனையத்தில் இரைச்சல் குறைவாக இருக்கும். பிரிப்பு இரைச்சலின் பிரிகை தட்டையானதே. தாழ் அலைவெண் அல்லது மினுமினு இரைச்சல். (flickering noise) ஒரு வெப்ப வெற்றிடக் குழலில், எதிர்மின் முனையின் வெவ்வேறு பகுதிகளில், மெது வாக மாறும் வெளியீடுகளின் காரணமாக, மின் னோட்டத்தில் தோன்றும் ஏற்றத்தாழ்வுகளினால் விளையும் இரைச்சல் மினுமினு இரைச்சல் அல்லது தாழ் அலைவெண் இரைச்சல் ஆகும். 1/f இரைச்சல் என்றும் இது அழைக்கப்படுகிறது. சில கிலோ ஹெர்ட்சுக்குக் குறைவான அலை வெண்களில் ஓர் இரைச்சலின் பகுதி தோன்றுகிறது. அதன் பிரிகை அடர்த்தி, அலைவெண் குறையக் குறைய அதிகரிக்கிறது. இரைச்சல்,மின் 777 மின் அணுக்குழல்களில், ஆக்சைடு பூசப்பட்ட எதிர் முனையங்களின் ஆக்சைடு கட்டமைப்பில் தோன்றும் மெதுவான மாறுதல்களாலும், தூய்மை யற்ற அயனிகள் நகர்வதாலும் இது தோன்றுகிறது. பகுதி கடத்திகளில் சுமப்பான்களின் அடர்த்தி யில் தோன்றும் ஏற்றத் தாழ்வுகளால் இது நேர் கிறது. குறைந்த அலைவெண்களில், வெற்றிடக்குழல் களை விடப்பகுதி கடத்தி மிகைப்பிகளில் இது அதிக இடர்ப்பாடுகளைத் தோற்றுவிக்கிறது. மிகு உயர்வெண் அல்லது மாறு-கால இரைச்சல். பகுதி கடத்திக் கருவிகளில் ஒரு சந்திப்பினைத் தாண்டும் சுமப்பான்களின் மாறுகாலம், சைகையின் குறிப்பிட்ட காலத்தோடு ஒப்பிடக்கூடியதாக அமைந்தால் சில சுமப்பான்கள் மூலம் அல்லது உமிழ்வானை ஊடுருவித் திரும்பச் சென்றடையும். இது ஓர் உட்கொடு அனுமதிப்பானைத் தோற்று விக்கிறது. அதன் கடத்துமப் பகுதி அலைவெண்ணை ஒட்டி அதிகரிக்கிறது. ஓர் இரைச்சல் மின்னோட்ட ஆக்கல் அல்லது எழுப்பல் தொடர்பு கொண்டுள்ளது. அலைவெண் னோடு கடத்துமம் அதிகரிப்பது போன்றே, பிரிக் அடர்த்தியும் அதிகரிக்கிறது. மின்னணுக் குழல் களிலும் இத்தகைய இரைச்சல் எழக்கூடும். எதிர் முனையத்திலிருந்து கட்டுப்பாட்டு வலைக்குச் செல் லும் மின்னணுக்களின் மாறுகாலம் குழல் சைகை யின் காலத்தோடு ஒத்து அமைந்தால் இத்தகைய நிகழ்ச்சி தோன்றக்கூடும். ஆக்கல் மறு சேர்க்கை இரைச்சல். பகுதி கடத் திக் கருவிகளில் சில தூய்மையற்ற மையங்கள் தற் செயலான தேர்வின்படி அயனிப்படுத்தப்படுகின்றன. கருவியில் சுமப்பான்களின் தற்செயலான தோற்றம் உருவெடுக்கிறது. மேலும் இந்தச் சுமப்பான்கள் அயனிப்படுத்தப்பட்ட தூய்மையற்ற மையங்களோடு தற்செயலாக மீண்டும் சேர்கின்றன. மொத்த விளைவு, பகுதி கடத்தியின் கடத்து மத்தில் ஒரு தற்செயலான ஏற்றத் தாழ்வுள்ள பகுதி உருவெடுக்கிறது. இதில் ஓர் இரைச்சல் மின்னோட் டம் தோன்றுகிறது. குறிப்பேற்ற இரைச்சல். கடத்துமத்தின் மெது வான ஏற்றத் தாழ்வுகளால் கூடுதல் ஓசை அல்லது குறிப்பேற்ற ஓசை உருவாக்கப்படுகிறது. ஒளியியல் கடத்திகளிலும் இத்தகைய இரைச்சல் உருவாகிறது எனலாம். உயர் பகுதிகடத்திக் கருவிகளில் தற்செயல் இரைச்சல் பல்வேறு நுட்பங்களால் தோன்றுகிறது. தற்செயல் இரைச்சல் ஆக்கலின் நுட்பங்களெல்லாம் புலப்படக்கூடிய குறுக்கு மின்னோட்டங்களும் அழுத் தங்களும் நுண்ணோக்கி மட்டத்தில் தோன்றும் பல