பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/810

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

786 இரைப்பை எடுப்பு

786 இரைப்பை எடுப்பு கொப்பூழுக்கு மேலே, தூய்மை செய்து சற்று இடப் புறத்தில் மேலிருந்து கீழாக, கத்தியால் கீறி வயிற் றைத் திறக்கவேண்டும். மண்ணீரல், அதன் அருகி லுள்ள நிணநீர்க்கட்டிகள், இரைப்பை இரத்த நாளங்கள், மண்ணீரல் இரத்த நாளங்கள், கணையத் கல்லீரல் புற்று நோய்க் கட்டி உணவுக்குழல் உதர தின் வால்பகுதி ஆகியவற்றை இடப்புறமிருந்து வலப் புறம் தள்ள வேண்டும். இட இரைப்பைத் தமனியை யும் மண்ணீரல் இரத்த நாளங்களையும் உறைக்குப் பின்னால் கட்டவேண்டும். இரைப்பை யும் உணவுக்குழலும் சேருமிடத்திலுள்ள நிணநீர்க் கட்டிகளை அதன் இருப்பிடத்திலிருந்து விலக்கிச் சிறிய உதரமடிப்பை இரைப்பை இணைப்பிலிருந்து விடுவிக்க வேண்டும். இதைப்போல் இரைப்பையின் கீழ்ப்பகுதிக்கு அடியிலிருக்கும் நிணநீர்க்கட்டிகளை விலக்கிப் பெரிய உதரமடிப்பைக் குறுக்குப் பெருங் குடலிலிருந்து விடுவிக்க வேண்டும். கணையத்தின் வெட்டிய விளிம்பை, தானே உட்கவரப்படும் இழை யால் தைக்க வேண்டும். அதனருகில் ஒரு சிறிய ரப்பர் நீர் வெளியேற்றியை வைத்து அதன் இன் னொரு விளிம்பை வயிற்றில் ஏற்படுத்தும் மற்றொரு காயத்தின் வழியாக வெளியே கொண்டு வரவேண் டும். இரைப்பை வெட்டப்பட்டபிறகு, படத்தில் உள்ளதுபோல் செரிமான உறுப்புகளை இணைக்க வேண்டும். பித்த நீரும் கணைய நீரும் உணவுக்குழலினுள் எதிர்க்களித்து உணவுக்குழல் அழற்சியை ஏற்படுத் தாது என்பதால் இம்முறை கையாளப்படுகிறது. நெஞ்சு வயிற்றுக்கீறலிட்டால் (tharacoabdominal incision) உட்கவரப்படாத இழைகொண்டு உதர விதானத்தைக் கவனமாகத் தைக்க வேண்டும். நீரில் மூழ்கியிருக்கும் குப்பிக்குள் நுரையீரல் உறையிடை நீரை வடியுமாறு செய்ய வேண்டும். முழுஇரைப்பை நிணநீர்க்கட்டிகள் மண்ணீரல் உணவுக்குழல் மீதமுள்ள இரைப்பை மென்டம்