பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/814

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

790 இரைப்பை-நடுச்சிறுகுடல்‌ இணைப்பு (அறுவை)

790 இரைப்பை -நடுச்சிறுகுடல் இணைப்பு (அறுவை) பொருத்தி உணவை அதன் வழியே செலுத்தலாம். இரைப்பையில் துளையிடுதல் இருவகைப்படும். அவை தற்காலிகமான இரைப்பைத்துளை, மற்றொன்று நிரந்தரமான இரைப்பைத்துளை என்பன. தற்காலிகமான இரைப்பைத் துளை. உணவுக் குழலில் சுருக்கம், வாய்வழியே உணவு உண்ண முடியா நிலை இவற்றில் அறுவைக்கு முன் உடல் நிலையைத் தேற்ற, இரைப்பையில் துளையிட்டு அதில் ஒரு மாலிக்காட் ரப்பர்க் குழாயைப் பொருத்தி வைப்பர். இதன் மூலம் பால், முட்டை மருந்து முதலியவற்றைச் செலுத்தலாம். உடல்நிலை தேறிய பின் நிரந்தரமாக உணவு செல்ல அறுவை மூலம் வழி செய்தபின், ரப்பர்க் குழாயை நீக்கினால் துளை அடைபடும். முற்காலத்தில் வேகஸ் நரம்புத் துண்டிப் புடன் இரைப்பைப் புறவழி ஒட்டுறுப்பு (pyloroplasty) அறுவைக்குப்பின், வயிற்றை வெறுமையாக திருக்க இவ் அறுவை செய்யப்பட்டது. தற்காலத்தில் மூக்கின் வழியே குழாயை இரைப்பை வரை செலுத்திச் சுரப்பைத் தொடர்ந்து நீக்குவதால் இரைப்பையில் துளையிடுவதில்லை. வைத் நிரந்தரமான இரைப்பைத் துளை. உணவுக்குழல், வாய் மற்றும் தொண்டையில் தோன்றும் புற்று நோய் முற்றிய நிலையில், நீர்ம உணவு கூட உண்ண முடியாநிலையில் வயிற்றின் வழியே இரைப்பையில் துளையிட்டு நிரந்தரமாக ரப்பர்க் குழாயைப் பொருத்துவர். அறுவை முறை, வயிற்றுப் பகுதியை உணர்ச்சி யற்றுப் போகச் செய்து எளிதில் செய்யப்படும் இவ்வறுவை இருவகைப்படும். ஸ்டாம்ஸ் அறுவை யில் குழாயை இரைப்பையினுள் செலுத்திய பின் சுற்றிச் சுற்றி சுருக்குப்பை போலத் தையலிட இரைப் பைச் சுரப்பி மற்றும் ரப்பர்க் குழாய் வெளியே வருவதில்லை. விட்செல் முறையில் வடிகுழாயை இரைப்பைச் சுவரில் ஒரு குகை போல் உண்டாக்கிப் பதித்துத் தையவிட வேண்டும். வயிற்றுச் சீலை (omentum) சிறிது நேரத்தில் அதனைச் சுற்றி ஒரு பாதுகாப்புத் தடுப்பை ஏற்படுத்துவதால் கசியும் உணவோ இரைப்பைச் சுரப்போ வயிற்றினுள் செல்லுவது தடை செய்யப்படுகிறது. எம்.ஜே. பிரடெரிக் ஜோசப் இரைப்பை -நடுச்சிறுகுடல் இணைப்பு (அறுவை) நடுச்சிறுகுடலுடன் இரைப்பையின் பின் பகுதி யையோ, முன் பகுதியையோ அடிப்பகுதியையோ இணைப்பதை இரைப்பை நடுச்சிறுகுடல் இணைப்பு அறுவை என்றழைக்கலாம். இவ்வறுவை குறிப்பாக ஹைட்ரோகுளோரின் அமிலச் சுரப்பு அதிகமாகி முன்சிறு குடலில் புண் வந்த நிலையிலும். இதே நோய்க்கு மருத்துவமாக முழு அளவு வேகஸ் நரம் புத் துண்டிப்பின் காரணமாக இரைப்பையில் ஏற் படும் தேக்கத்தைச் சீர் செய்யும் பொருட்டு ஒரு வடிகாலாகவும் செய்யப்படும். சிலசமயம் இரைப் பைப் புற்று முழுதுமாக அகற்ற முடியாத நிலையி லிருந்தால் தற்காலிக மருத்துவமாகவும் இது மேற் கொள்ளப்படுகிறது. பொதுவாகப் பின்புறம் செய்யப்படும் இரைப்பை நடுச்சிறுகுடல் இணைப்பு நல்ல பலனைக் கொடுப்ப தால் மிக அதிக அளவில் பின்புறமே செய்யப் படுகிறது. அறுவைக்காக வயிற்றைத் திறந்த பிறகு பெரும் உதர மடிப்பு (greater omentum), குறுக்குச்குடல், பின்புற இரைப்பை போன்றவை வயிற்றுக் காயத் திற்கு மேல் கொண்டு வரப்பட்டு, மேற்புறமாக அறுவையாளருக்கு எதிராக இருக்கும் உதவியாள ரால் தூக்கிப் பிடித்துக் கொள்ளப்படும். பிறகு இடப்புறமாக முதுகு எலும்புப் பக்கம் குறுக்குப் பெருங்குடலுக்குக் கீழ் நடுச்சிறுகுடலைக் கண்டு, முன்சிறுகுடலுடன் இணைந்த இடத்தை ஆராய்ந்து அதிலிருந்து நடுச் சிறுகுடலை வெளியே எடுத்துத் துணியில் சுற்றி ஒரு புறம் வைக்க வேண்டும். காக குறுக்குப் பெருங்குடல் தாங்கியில் உள்ள நடுக் குடல் தமனியின் இடப்பக்கம் இரத்த நாளமற்ற பகுதியில் நேர் வாக்கில் கத்தரியால் 10 செ.மீ. கிழிக்க வேண்டும். இதன் வழியாக இணைப்புக் இரைப்பையை வெளியே எடுத்துக் குறுக்காக அல்லது நேராக (அறுவையாளரின் பழக்கத்தின்படி) நடுச்சிறுகுடலுடன் அதன் தொடக்க நிலையிலிருந்து சுமார் 8-10 அங்குலம் தள்ளி நெடுக இணைக்க வேண்டும். இவ்விணைப்பு, இரைப்பையின் புற வாயிலை (pylorus) ஒட்டி அமையும். இந்நிலை யில் அமைந்தால் மட்டுமே இரைப்பையிலிருந்து உணவு நன்கு வெளிவரும் வாய்ப்பு அதிகரிக்கும். இணைப்பின் அதிக அளவு நீளம் 8 12 செ.மீ வரை இருக்கும். இணைப்பின் போது குடல் திருகிக் கொண்டோ, இழுத்துக் கொண்டோ இருக்கக் கூடாது. குடல் தொய்வும் ஏற்பட்டுவிடக்கூடாது. தானே உட்கவரப்படும் இழைகளாலோ பட்டுஇழை களாலோ அடிப்புறத் தையல் போடப்படும். பிறகு அவ்வுறுப்புகளில் இருந்து 5 செ.மீ. தள்ளித் திறப் பர். முதலில் வெளிப்புறப்படலத்திற்கு அருகில் தசைப் படலத்தையும் ஒன்றாகத் திறந்த பிறகு சளிப்பட லத்தை இடுக்கி மூலம் பிடித்த நிலையில் திறக்க வேண் டும். பிளந்த உட்புற விளிம்புகள் ஒவ்வொன்றிலும் பூட்டிய தையலை, தானே உட்கவரப்படும் இழை யால் தொடர்ந்து போட வேண்டும். பிறகு இது வளைந்து மேற்புறமாக மூட அதன் விளிம்புகளை க