இரைப்பைப் புண் இரைப்பைக் கட்டிகள்-அறுவை 793
இரைப்பைப் புண், இரைப்பைக் கட்டிகள்-அறுவை முறைகள் 793 பகுதியில் உண்டாகின்ற புண்கள், கட்டிகள் இவற்றின் பின் விளைவுகளான இரைப்பைப் புற்று நோய் ஆகியவை இரைப்பை நோய்களாகும். இரைப்பைப் புண். மனித உடலில் அனைத்துப் பாகங்களிலும் தோன்றுகிற புண்களைப் போலவே, இரைப்பையின் உட்பாகத்திலும் புண்கள் உண்டா கின்றன. இவை முனைப்பாக உடனுக்குடன் தோன்றும் புண்களாகவோ, அன்றி நாள்பட்ட புண்களாகவோ இருக்கலாம். முனைப்பான இரைப்பைப் புண்கள். வலிநீக்கி உட்கொள்பவர்களுக்கும், மருந்துகளை தீப்புண் உடையவர்களுக்கும், நரம்பு மண்டலம் சிறுநீரக மண்டலம் போன்றவை பாதிக்கப்பட்டவர்களுக்கும் இவை உண்டாகின்றன. இவ்வகை முனைப்பான இரைப்பைப் புண்கள் உண்டாகும்போது, நோயாளி களுக்கு மேற்புற வயிற்று வலியுடன் இரத்த வாந்தி யும் இரத்தக் கழிச்சலும் ஏற்படும். மருந்துவ அறிவுரையின்றி மருந்து உட்கொள் வதைத் தடுப்பதாலும், மின்தடுப்பு ஆற்றல் உள்ள அமில- எதிர்ப்பு நீர்ம மருந்துகள் உட்கொள்வதாலும் இரைப்பைப் புண்களைத் தடுக்கலாம். தொடக்க காலத்தில் இப்புண்கள் ஏற்பட்டிருப்பதை இரைப்பை ஆய்வுக் குழாய் மூலம் கண்டுபிடித்தால் உடனே, இரைப்பையில் உறிஞ்சு குழாயைச் செலுத்தி, மிகக் குளிர்ந்த உப்புநீர் விட்டுக் கழுவியோ அமில எதிர்ப்பு ஆற்றல் கொண்ட நீர்ம மருந்து செலுத்தி யோ இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்தலாம். இரத்த இழப்பு அதிகம் உள்ள நோயாளிகளுக்கு உடனே இரத்தம் செலுத்த வேண்டும். இம்மருத்துவ முறைகளால் பலன் இல்லாவிட்டால் நோயாளிகளை அறுவை மூலம் குணப்படுத்தலாம். இரைப்பை சுருங்கி விரிவதைக் கட்டுப்படுத்தும் வேகஸ் நரம்பை வெட்டி எடுப்பதன் மூலமோ, முனைப்பான புண்கள் ஏற் பட்டுப் பாதிக்கப்பட்ட இரைப்பைப் பகுதியை வெட்டி எடுத்தல் மூலமோ நோயைக் குணப்படுத் தலாம். நாள்பட்ட இரைப்பைப் புண்கள். நாள்பட்ட, நீடித்த இரைப்பைப் புண்கள் பெரும்பாலும் நாற்பது வயதிலிருந்து அறுபது வயது உள்ளவர்களுக்கு உண்டாகின்றன. இவை ஆண்கள், குடிப்பழக்கம் உள்ளவர், புகை பிடிப்பவர், தாழ்ந்த பொருளா தாரச் சமூகத்தைச் சார்ந்தவர் '0' இரத்தப் பிரிவைச் சார்ந்தவர் ஆகியோரிடையே அதிகமாகக் காணப் படுகின்றன. நாள்பட்ட இரைப்பைப் புண்கள் உண்டாகக் காரணங் கள். இரைப்பையின் உட்பகுதியில் போர்வை போல் பரவலாக மூடியுள்ள சீதச் சவ்வு சேதம் அடைதல்; அளவுக்கு அதிகமான அமிலம் இந்தச் சவ்வுப் பகுதியை அரித்தல்; சிலரிடம் இயற்கையிலேயே அமிலத்தைத் தாங்கி எதிர்க்கும் ஆற்றல் குறைந்து காணப்படுதல்; பித்தநீர் இரைப்பை நோக்கி வந்து தவ்வுப் பகுதியைச் சிதைத்தல் ஆகியனவாகும். நாள் பட்ட புண் உள்ள நோயாளிகளுக்கு மேல்வயிற்றுப் பகுதியில் எரிச்சலோ, மிதமான தொடர்ந்த வலியோ நெஞ்சுப் பகுதியில் எரிச்சலோ, முதுகுப்புறம் பரவக் கூடிய வலியோ இருக்கும். இந்த மிதமான வலி மது குடிப்பதாலோ,சூடான நீர்மங்களை உட்கொள்ளும் போதோ, திட உணவாலோ அதிகமாகும். இரைப்பையிலிருந்து உணவு செரிக்கப்பட்டு உட் சென்றவுடன் அல்லது வாந்தியாக வெளிப்பட்ட பின்னர் இரைப்பை காலியாகும்போது, இந்த வலி தானாகவே குறைந்து விடுகிறது. இந்த நோய்க்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்கு உட்பட்டனவாகவே பெரும்பாலும் இருக்கும். ஆகை யால்தான் நாள்பட்ட இரைப்பைப் புண் உள்ளவர் கள், விரைவில் மருத்துவர்களிடம் வருவதில்லை. தேவையான பசி இருந்தபோதிலும் உணவு உட் கொள்வதால் ஏற்படும் வலி காரணமாக இவர்கள் உணவு உட்கொள்வதில்லை. மேற்புற வயிற்றுப் பகு தியை அழுத்தி ஆய்வு செய்யும்போது இந்நோயாளி களுக்கு வலி ஏற்படும். இந்த நீண்டகால இரைப் பைப் புண்கள் தேவையான காலத்தில் குணமாக்கப் படாவிட்டால் வலி அதிகமாகி வாந்தியும், வாந்தியில் இரத்தம் வெளிப்படுவதும் உண்டாகலாம். புண் ஏற் பட்ட பகுதிகணையத்துடன் ஒட்டிக் கொள்வதாலோ இரைப்பை அடைப்பு ஏற்படுவதாலோ இரைப்பை யில் துளை ஏற்படுவதாலோ உடல்நிலை மிகவும் பாதிக்கப்படுகின்றது. பேரியம் மாவு கொடுத்து எக்ஸ்கதிர் படமெடுப்பதாலும் இரைப்பை உள் நோக்கியாலும் திசு ஆய்வினாலும் இரைப்பைப் புண்களைக் கண்டுபிடிக்கலாம். புற்றுநோய் அறிகுறி இல்லை என்றால் தொடக்க காலத்தில் சிமட்டிடின் என்ற மருந்தால் நலப்படுத்தலாம். இச்சமயத்தில் காரம், புளிச்சுவை உள்ள உணவு, மது, புகைபிடித் தல் இவற்றை நோயாளி முற்றிலும் தவிர்க்க வேண் டும். நோய்க்கான அறிகுறிகள் அதிகமாக இருந்தால் இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும். 6 முதல் 12 வாரங்கள் வரை மருந்துகளால் நலமாக வில்லை என்றாலோ நலமான பினனர் மீண்டும் புண்கள் ஏற்படும் அறிகுறிகள் இருந்தாலோ அறுவை மேற்கொள்ளுதல் நலமாகும். அறுவை முறைகள். இரைப்பையின் உட்பகுதி புண்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அப்பகுதியை வெட்டி எடுத்துவிடலாம். இரைப்பையின் உட்பகுதி யில் ஆய்வுக் குழாய் மூலமாக இரத்தக் குழாய் களிலுள்ள அழுத்தத்தை உறைய வைத்தும் இரத்த இழப்பை நிறுத்தலாம். இரைப்பையில் துளை ஏற் பட்டிருந்தால் அவசர அறுவை மூலமாக அதை மூடியோ,பாதிக்கப்பட்ட பகுதியை வெட்டியோ, பின் ஒட்டியோ குணப்படுத்தலாம். அடைப்பு இருக் கும் நோயாளிகளின் பாதிக்கப்பட்ட இரைப்பைப்