பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/819

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரைப்பைப்‌ புற்றும்‌, அறுவை வழிகளும்‌ 795

புற்று சீர்கேடுகள்) இரத்த ஒழுக்கு ஓட்டை இரைப்பைப்புண் அடைப்பு முன்சிறுதடல் அடைப்பு இரைப்பைப்புற்று வயிற்றின் கீழ்ப்பாகத்தில் பரவுதல் சூற்பை, குருக்கன் பர்க் கட்டி என்பன. நோய் பற்றி அறியும் வழிகள். எண்டோஸ்கோப் என்னும் நீண்ட குழல் போன்ற கருவியை விழுங்கச் செய்து இரைப்பையின் உள்பாகத்தை நேரடியாகக் கண்டு, ஐயத்திற்குரிய பாகத்தில் தசை வெட்டி யெடுத்து ஆய்வு செய்தல் வேண்டும். பேரியம் கொடுத்து எக்ஸ்கதிர்படம் எடுத்துப் பார்த்தல் மூலம் கீழ்க்காணும் அறிகுறிகளைக் காண வேண்டும். பொதுவாக இரைப்பையின் உட்புறம் ஒழுங்காக இருக்கும். இரைப்பை நோயில் இரைப்பையின் உட் புறம் ஒழுங்கற்றுக்காணப்படும். சாதாரண நிலையில் உண்ட பேரியம் உணவு, கொடுத்த மூன்று மணி நேரத்திற்குள் இரைப்பையை விட்டுக் குடலுக்குள் செல்லத்துவங்கும். இரைப்பைப்புறவாயிலில் புற்று ஏற்பட்டால் இவ்வெளியேற்றம் தாமதமாகும். புற்று வளர்ந்த பகுதிகளில் பேரியம் உணவு படியாமல் நிலையான நிரப்புக்குறைபாட்டை ஏற்படுத்தும். மருத்துவ முறைகள். அறுவை முறைகள்; புற்று மருந்து முறை; கதிர் வீச்சு முறை என்பன. இரைப்பைப் புற்றும், அறுவை வழிகளும் 795 அறுவை முறை. முதலாவதாக கி.பி. 1881 இல் பில்ரோத் என்ற அறுவை மருத்துவர் வியன்னா பல்கலைக் கழக மருத்துவ மனையில் புதிய அறுவை முறையைக் கையாண்டார். அது இன்றும் பல அறிஞர்களால் கையாளப்படுகிறது. அவர் பைலோ ரஸ் பகுதியில் புற்று ஏற்பட்ட பகுதியை வெட்டி யெடுத்துவிட்டு முன்சிறு குடலையும், இரைப்பையின் முன்பகுதியையும் இணைத்து உணவுப் பாதையைச் சரிசெய்தார். கி.பி. 1887இல் ஸ்லேட்டர் என்னும் அறிஞர் இரைப்பை முழுதையும் எடுத்துவிட்டு உணவுக் குழாயையும், முன்சிறுகுடலையும் இணைத்து உணவுப் பாதையைச் சரி செய்தார். இம்முறை 1940 வரை அனைத்து வல்லுநர்களாலும் உலகெங்கும் கையாளப் பட்டது. அறுவைக்கான சில விதிமுறைகள். நோயுற்றவர் களில் 30% மருத்துவரிடம் வரும்போது அறுவைக்கு உட்படாத அளவில் நோய் முற்றிவிடுகிறது. நோய் முற்றாத நிலையில் இரைப்பையை அறுவை முறை மூலம் நீக்கலாம். இதற்கு, நிணநீர்ச் சுரப்பிகளில் நோய் பரவாமல் இருத்தல் வேண்டும். யுள்ள பிற உறுப்புக்களுக்கும் நோய் பரவாமல் இருத்தல் வேண்டும். வயிறு பாதிக்கப்படாமல் இருத்தல் வேண்டும். இரைப்பைப் புற்றுநோயில் கையாளப்படும் அறுவை வகைகள் சுற்றி அடிப்பாக இரைப்பை அகற்றும் முறை. இரைப்பை யின் பின்பகுதியில் புற்றிருந்தால் 85% இரைப்பை யை அகற்றிவிட்டு, முன்பகுதியை முன்சிறுகுடலுடன் இணைத்து உணவுப் பாதையைச் சரி செய்யலாம். முழு இரைப்பை அகற்றல். இரைப்பையின் மேல் பாதியில் புற்றிருந்தால் இரைப்பை முழுதையும் எடுத்துவிட்டு உணவுக் குழலை முன்சிறு குடலுடன் இணைத்து உணவுப் பாதையைச் சரிசெய்யலாம். முற்றிய இரைப்பைப் பின் பகுதியில் புற்று நிலையில் இருந்தால் அப்பகுதியை அறுவை மூலம் அகற்றிவிட்டு இணைத்து உணவுப் பாதையைச் சரி செய்யலாம். உணவு செலுத்த இரைப்பையில் துளைஇடுதல். மாலி காட் இரப்பர் குழாயை இரைப்பையில் இணைத்து உணவைத் திரவ வடிவத்தில் வெளியிலிருந்து செலுத் தும் முறை, இரைப்பையின் பண்டஸ் பகுதியில் புற்றுள்ளவர்களுக்கு முற்றிய நிலையில் கையாளப் படுகிறது. உணவு செலுத்த இடைச்சிறுகுடலில் துளை இடுதல். பைலோரஸ் பகுதி நோயுற்று முற்றிய நிலையில் இரப்பர்க்குழாயை முன்சிறுகுடலுக்குள் இருக்குமாறு செய்யலாம்.