பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/826

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

802 இல்லைட்டு

802 இல்லைட்டு யாத தன்மைகொண்டதும், ஸ்மக்டைட்டு, வெர்மிகு லைட்டு ஆகிய களிக்கனிம வகைகளைச் சார்ந்ததும் ஆகும். இது ஒற்றைச் சரிவுப் படிகத் தொகுதியில் படிகமாகியுள்ளது. மிகுதியான இல்லைட்டுகள் மஸ் கோவைட்டை ஒத்த ஈரெண் பட்டக வடிவமாகவும் பையோடைட்டை ஒத்த வேறு சில மூவெண் பட்டக வடிவமாகவும் இயற்கையில் காணப்படுகின்றன. இதன் இயல்பான வேதியியல் உட்கூறு நீர்ம பொட்டாசிய அலுமினியம் சிலிகேட்டின் அளவு இரண்டுக்குக் குறையாமலும் 1 முதல் 1.5 வரை யிலும் இருக்கும். இல்லைட்டின் சிலிக்கா அளவு மஸ்கோவைட்டின் சிலிக்கா அளவைவிட மிகுதியாக வும் பொட்டாசியம் அளவைவிடக் குறைந்தும் காணப்படுகிறது. இதன் காரணமாக இல்லைட்டு மஸ்கோவைட்டிலிருந்து பிரித்துப்பார்க்கப்படுகிறது. களிக் கனிமங்கள் இல்லைட்டை ஒத்த பண்புடையன வாகவும் மஸ்கவைட்டிலிருந்து மாறுபட்டனவாகவும் இருந்தால் நடைமுறை வழக்கில் அவை இல்லைட்டுத் தொகுதியின் கீழ் கொணரப்படுகின்றன. の 192 உள்ள மைக்கா கட் கட்டமைப்புச் சிறப்பியல்புகள். இல்லைட்டுக் கட் டமைப்பு அனைத்து வகையிலும் அபிரகத் தொகுதி யில் மஸ்கோவைட்டு, டமைப்பை ஒத்திருக்கும், இதன் அடிப்படைக் கட் டமைப்பு அலகு ஓர் எண் பட்டகப் பாளத்தை மையமாகக் கொண்டு மேலும், கீழும் ஒரு நாற் பட்டகப் பாளத்தைக் கொண்டுள்ளது போன்று அமைந்துள்ளது. இந்த அடிப்படை அலகு மாண்ட் மாரில்லோனைட்டை (montmorillonite) ஒத்திருக் கிறது. இருந்தாலும் 15 விழுக்காடு சிலிக்கான் அலு மினியத்தால் மாற்றப்பட்டு இருக்கும். அவ்வாறான வேதியியல் பரிமாற்றங்களால் ஊட்டக்குறைவு (charge deficiency) ஏற்பட்டு அவை பொட்டாசியம் அயனிகளால் இல்லைட்டின் அடிப்படை அலகுகளில் சரிப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு இல்லைட்டு அடிப்படை அலகுகளை அடுக்கிக் கொண்டே செல்லும்போது பொட்டாசியம் அதில் பொருந்தி பன்னிரெண்டு ஆக்சிஜன் அயனிகளால் சூழப்பட, சமமாக கட்டமைப்புச் விரிவடையா அதனால் இல்லைட்டுகள் உருவாகின்றன. எண் பட்டக எண்ணிக்கைகளை வைத்தும், அதன் பொருத்தும் நிலையை வைத்தும் இல்லைட்டை ஈரெண் பட்டகப் பிரிவு, மூவெண் பட்டகப் பிரிவு ஆகிய இரு வகை களாகப் பிரிக்கலாம். குறைவான அளவு அலுமினியத் தால் இதிலுள்ள சிலிக்கான் மாற்றப்பட்டும் அலு மினிய சிலிக்கான் மூலப்பொருள் விகிதம் மிகுந்த அளவு கொண்டும் உள்ள இது நன்கு படிகமாகி அபிரகத் தொகுதியின் மைக்காவிலிருந்து மாறுபடு கிறது. கட்டமைப்பு அற்ற சிறப்பியல்புகள் இயற்கையில் இல்லைட்டு, சிறுசிறு துகள்களாக உருவாகிப் பெரும் நேர் படிவுகளாகக் கிடைக்கின்றது. இருந்தாலும் மாண்ட் மாரில்லோனைட்டு துகள்களைவிடப் பெரியனவா கவும் சிறந்த படிக விளிம்புகளை உடையனவாகவும் காணப்படுகின்றன. இல்லைட்டு குறைந்த அயனிப் பரிமாற்றத் திறன் கொண்டது (20-30 மி. சமானம்/100கி). இவ்வகைப் பரிமாற்றங்கள், பிணைப் பால் ஏற்பட்ட முறிவுகளில் காணப்படுகின்றன. இடைப்பட்ட அடுக்குகளில் உள்ள பொட்டாசியம் அயனி நன்றாக அமுக்கப்பட்டு வேதியியல் ஊட்டக் கூறு சமமான நிலையில் உள்ளதால் அயனிப் பரி மாற்றங்கள் மிகவும் குறைந்த வேகத்தில் நடைபெறு கின்றன. இல்லைட்டின் நீர் இறக்க வரைபடங்களை ஆராயும் போது இடைப்பட்ட நீர் அடுக்குகள் காணப் படுகின்றன. மேலும் அவை 100°C வெப்ப அளவில் மறைந்து விடுகின்றன. எனவே, அலுமினிய உட் கூறுகளில் சிலிக்கா ஊடுருவி இருந்தாலும், பொட்டாசியம் குறைந்த அளவு காணப்பட்டாலும் இவற்றை இல்லைட்டு என்றும் மிகுதியான சிலிக்கா வும் குறைவில்லா பொட்டாசியமும் காணப்பட்டால் அவற்றை ஃபின்ஜைட் என்றும் அழைப்பர். பொட்டாசியம் தூய இல்லைட்டின் இடைப்பட்ட அடுக்குகளில் ஊட்டக்கூறு சமமான நிலையை அடைந்துள்ளதால் நேர் அயனிப் பரிமாற்றமோ, கரிம வேதியியல் நீர்மங்களோ இதன் உட்கூறில் ஊடுருவ வாய்ப்பு இருப்பதில்லை. அதனால் விரி வடையாத் தன்மையுள்ள இல்லைட்டுகள் இயற்கை யில் மிகுந்து காணப்படுகின்றன. இருந்தாலும் சிறி தளவு நேர்அயனிப் பரிமாற்றங்கள் இவற்றின் உடைந்த படிகவிளிம்புகளில் நிகழ்கின்றன (கயோ வினைப் போன்றது). காண்க, கயோலின். இல்லைட்டு நிறமற்றது. ஆனால் சிறிதளவு இரும்பு ஆக்சைடும் ஹைட்ராக்சைடுகளும் கலந்திருப்பதால் மஞ்சள், பச்சை, பழுப்பு நிறங்களில் இயற்கையில் காணப்படுகின்றது. இதன் கடினத்தன்மை 1 முதல் 2 வரையிலும், அடர்த்தி 2.6 முதல் 2.9 வரையிலும் காணப்படும். மின்துகளியியல் நுண்ணோக்கியின் உதவியால் காணும்போது இல்லைட்டுகள் மிகக் குறைந்த படிக உருவைக் கொண்ட துகள்களாகவும், ஒழுங்கற்ற அமைப்புடைய படிகங்களான மாண்ட் மாரில்லோன்னைட்டு படிகங்களாகவும் இருக்கும். இதன் அடர்த்தி, கடினத்தன்மை, ஒளிவிலகல் எண் முதலியவற்றை நுட்பமாகக் காணவியலாது. இதில் அடங்கியுள்ள நீர் அடுக்குகளின் தன்மை, எண்ணிக்கை, இதில் படிந்துள்ள மற்ற வேதி மாசுகளைப் பொறுத்து இதன் ஒளியியல், இயற்பியல் பண்புகள் மாற்றம் அடைந்துள்ளன. இதன் துகள் மிகவும் சிறியதாகவும் பெரும் பாலும் படிகவுருவமற்றுக் கிடைப்பதாலும் இதன் ஒளியியல் பண்புகளை நுட்பமாக ஆராய்வது மிகவும் கடினமாகும். இருப்பினும் இவற்றின் சில ஒளியியல்