இல்லைட்டு 803
பண்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள னர். மேற்கூறியபடி இது ஒற்றைச்சரிவுத் தொகுதியில் படிகமாகியுள்ளது. மேலும் சிறந்த அடியிணை வடிவப்பக்கப்பிளவு கொண்டது. இதன் ஒளியியல் அச்சுக்கோணம் (optic axial angle 2V) 100 குறை வாகவும் மெதுவொளி அச்சின் (a) ஒளிவிலகல் எண் 1.04 முதல் 1.57 வரையிலும் விரைவொளி அச்சின் (7) ஒளிவிலகல் எண் 1.57 முதல் 1.61 வரையிலும் இடையொளி அச்சு (B) ஒளிவிலகல் எண் 1.57 முதல் 1.61 வரையிலும் உள்ளன. விரைவொளி அச்சும், உடையொளி அச்சும் ஒரே ஒளிவிலகல் எண் கொண்டுள்ளன. தனால் இல்லைட்டு குறைந்த அளவு பல திசை அதிர்நிறமாற்றப் பண்பைப் பெற்றுள்ளது. உருவாக்கமும் பரவலும். களிப் பாறைகளிலும் புழுதிப் பாறைகளிலும் இவை மிகுந்து காணப்படும். பிற சிலிக்கேட்டுக் கனிமங்கள் குறிப்பாக மைக்கா, ஃபெல்சுபார் ஆகியவை வேதிச் சிதைவிற்கு உட் பட்டுச் சிறுசிறு துகள்களாக இயற்கையில் காணப் படுகின்றன. பிறவகைக் களி, களிமட் பாறைகள் வானிலை வேதிச் சிதைவிற்கு உட்படும்போது இல்லைட்டுகள் உருவாகின்றன. இவை வெந்நீர் ஊற்று வளாகத்தில் காணப்படும் படிவுகளில் அரி தாகக் கிடைக்கின்றன. நீர் வெப்பப் படிவுகளில் வை மிகுந்து காணப்படுகின்றன. பொதுவாக இல்லைட்டுக் களிக் கனிமம் கணடங் களுக்கு அருகில் காணப்படும். படிவுப் பாறைப் உலகெங்கும் படிவுகளில் பரந்து காணப்படும். எனவே இந்தியாவில் தமிழ்நாட்டிலும், கேரளாவி லும், குஜராத், ஒரிசா மாநிலங்களிலும் இக் களிக் கனிமங்கள் பரந்து காணப்படுகின்றன. மற்ற வகைக் களிக்கனிமங்களான கயோ லினைட்டும், பெண்டோனைட்டும் மிகுதியாகக் கிடைப்பதால் அவை வெண்களிமண் தொழிலில் பயன்படுவதில்லை. அவ்வாறு மேற்கூறிய கனிமங்கள் கிடைக்காதபோது இவற்றை வெண் களிமண் தொழிலில் மிகுதியாகப் பயன்படுத்துவா. இல்வைட்டு - சு. ச செஞ்சாய்சதுரப் படிகத் தொகுதியில் படிகமாகி யுள்ள கனிமம், இவ்வைட்டு (ilvaite) ஆகும். இதன் வேதியியல் உட்கூறு Ca Fe (FeOH) SiO அல்லது 2CaO, 4 Fe0, Fe,0,, 4Si0,,H,0 என்பதாகும். இந்த இல்வைட்டு என்னும் பெயர் இலத்தீன் மொழியில் எல்பா என்ற தீவின் பெயர் ஆகும். இதன் நிறம் கருமை, சாம்பல் கலந்த கருமையாயும் இதன் உராய் அ க.4-51அ இல்வைட்டு 803 வுத் துகள் கருப்பாகவும் சிலசமயங்களில் கரும் பச்சை, கரும்பழுப்பு நிறமாயும் காணப்படும். குறை வான உலோக மிளிர்வையும் சீரற்ற முறிவையும் கொண்டு காணப்படும். இதன் கடினத் தன்மை 5.5-6 வரையிலும் அடர்த்தி 3.80–4.10 வரையிலும் இருக்கும். இதன் உருகுநிலை அல்லது உருகுதிறன 2.5 ஆகும். அமிலத்துடன் ஊண்பசை மிளிர்வு கொண்டிருக்கும். இது இரண்டு வகைக் கனிமப் பிளவு கொண்டது. குறுவிணைவடிவப்பக்கப் (010) பிளவும், அடியிணை வடிவப்பக்கப் (001) பிளவும் கொண்டது. படிகங்களின் பட்டகப்பக்கத்தில் செங் குத்து நேர்கோடுகள் கொண்டிருக்கும். இதன் கனி மச்சீவல் ஒளிபுகாத்தன்மையைக் கொண்டது. ஒரு இதன் ஒளியியல் தளம் 7 ம் அடியிணைவடி வப் பக்கத்திற்கு (001) செங்குத்தாக உள்ளது. ஒளிபுகாத்தன்மையைக் கொண்டுள்ளதால் இதன் ஒளியியல் பண்புகள் குறைந்த அளவில் காணப்படு கின்றன. இதன் ஒளியியல் அச்சுத்தளம் செவ்விணை வடிலப்பக்கம் (100) ஆகும். இது எதிர்மறை ஒளி யியல் பண்பைக் கொண்டது. இதன் கனிமச்சீவலில் வலிமையான பலதிசை அதிர்நிறமாற்றம் உள்ளது. தன ஒளிபரவல் வலிமையானது. இதன் ஒளி விலகல் எண் விரைவொளி அச்சுக்கு (X) 192 ஆக வும், மெதுஒளி அச்சுக்கு (Y) 1.89 ஆகவும், இடை யொளி அச்சுக்கு (Z) 1.91 ஆகவும் இருக்கும். எனவே இதன் பலதிசை அதிர் நிறமாற்றம் விரை வொளி அச்சின் திசையில் பழுப்பு அல்லது பழுப்புக் கலந்த மஞ்சள் நிறமாகவும் மெதுவொளி அச்சுத் திசையில் பழுப்பு அல்லது ஊடுருவாத் தன்மையாக வும், இடையொளி அச்சுத்திசையில் கரும்பச்சை முதல் ஒளி ஊடுருவாத்தன்மை கொண்டனவாகவும் இருக் கும். எதிர்பலிப்பு ஒளியில் விரைவொளி அச்சுத் திசையில் பழுப்பாகவும், இடையொளி அச்சுத்திசை யில் பச்சையாகவும் மெதுவொளி அச்சுத்திசையில் பழுப்பாகவும் காணப்படும். எதிர்பலிப்பு விழுக் காடு 'a' அச்சுத் திசையில் இணையாகச் சிவப்பு 8 ஆரஞ்சு 8.5 பச்சை 9.5 ம், C அச்சுக்கு இணை யாகச் சிவப்பு 5,ஆரஞ்சு 5,பச்சை 7 காணப் படும். இதன உட்கூறில் 29.3 விழுக்காடு சிலிக்காவும் இரும்பு செஸ்கு ஆக்ஸைடு 19.6 விழுக்காடும், இரும்பு புரோடாக்சைடு 35.2 விழுக்காடும் சுண்ணாம்பு 13.7 விழுக்காடும் நீர் 2.2 விழுக்காடும் காணப்படும். சிலசமயங்களில் உட்கூறில் மாங்கனீஸ் இரும்பின் இடத்தில் பெயர்ந்து இருக்கும். இவ்வகை இல்வைட்டு இரும்புக் கனிமங்களுடன் இணைந்து காணப் படும். மேலும் தொடுகை உருமாற்ற வளாகங்களில் துத்தநாகம், செம்பு ஆகிய தாதுக்களுடன் சேர்ந்து காணப்படும்; மேலும் இவை டெக்டே சிலிகேட் வகை யில்படிகமாகும் சியோலைட்டுகளுடன் காணப்படும்.