இலக்க வோல்ட்டளவி 805
இலக்க வோல்ட்டளவி 805 புள்ளிகளுக்கிடையே நிலவும் மின் அழுத்த வேறுபாட் யோ அளவிட வல்லது. டை கடிகாரத்தில் எண்கள் மற்றும் முள்களைக் கொண்ட பழைய வகைக் கடிகாரம், முள் ஏதுமின்றி எண்களை மட்டுமே கொண்ட நவீன மின்னணு வியல் கடிகாரம் என ருவகை உள்ளதைப் போல இந்த வோல்ட்டளவிகளில் இரண்டு வகை உண்டு. அவை இணைமுகவோல்ட்டளவி (analog voltmeter) இலக்க வோல்ட்டளவி (digital voltmeter) என்பன. முதல் வகையில் நகரக்கூடிய ஒரு முள்ளின் நிலையைக் கொண்டு மின் அழுத்த வேறுபாட்டின் அளவை அறியலாம். சில அளவிகளில் மின் அழுத்தம் நூறு வீதத்திலும் குறிப்பிடப்படுவதுண்டு. இலக்க வோல்ட்டளவிகளில் வெறும் எண்கள் மட்டுமே ஒளிர்வதன் மூலம் மின் அழுத்தத்தின் அளவைக் கணக்கிட முடிகிறது. ணைமுகவோல்ட்டளவியில் முகப்புத்தட்டு ஒரே சீரான சம அளவுடைய பகுதிக் கோடுகளை யோ முதலில் மிக நெருக்கமான பகுதிக் கோடு களையும் பின்னர் விரிவடைகின்ற இடைவெளியோடு கூடிய பகுதிக்கோடுகளையோ பெற்றிருக்கும். இவ் வகை பெரும்பாலும் காந்த அளவிகள் மின் மண்டலத்தினூடே ஒரு சுருளின் அசைவினையொட் டியோ, மின்காந்த மண்டலத்திலிருந்து ஒரு சிறு அடிப்படையாகக் இரும்புத் துண்டின் விலகலை கொண்டோ இயங்குகின்றன. செயல்பாட்டு முறைகள். முதற்கண், கணிக்கப்பட வேண்டிய மின் அழுத்தத்தைப் பல மடங்கு பெருக்கி யோ, குறைத்தோ அளவியின் அளவீட்டு எல்லைக்கு உட்படும் வகையில் முகப்புத்தட்டு, திருத்தியமைக்கப் படுகிறது. இந்த அளவி தனக்குக் கிடைக்கும் மின் அழுத்த மாற்றங்களை ஒவ்வொரு குறுகிய காலக் கட்டத்திலும் அளவிட்டு இவற்றின் சராசரி மதிப்புக்கேற்ப ஒரு மின்னேற்பியில் (condenser ) மின்சாரத்தை நிரப்புகிறது. இத்துடன் அளவியின் உள்ளேயே படத்தில் காட்டியபடி ஒரு மின் அழுத்தத் தையும் உருவாக்குகின்றது. இதே நேரத்தில் தொடர்ச்சியான மின் துடிப்புகளை (pulses) ஒரே சீரான கால இடைவெளி விட்டு எண்ணும் கருவி ஒன்றில் செலுத்துகின்றது. அளவிட வேண்டிய மின் அழுத்தமும் அளவியின் உள்ளே தோற்றுவிக்கப்பட்ட மின் அழுத்தமும் ஒப்புநோக்கப்பட்டு இரண்டும் சரிசமமாக ஒன்றிடும் தருணத்தில் எண்ணும் கருவியினுள் நுண் அலைகள் செலுத்தப்படுவது தடைப்படுகிறது. எண்ணும் கருவி தன் எண்ணிக்கை தொடர்வதை நிறுத்தி விடுகிறது. இப்போது இலக்க வடிவில் அளவியில் வெளிப்படும் எண்ணிக்கை கணிப்பில் உள்ள + மின் அழுத்த (வோல்ட்) காலம் (வினாடிகன்) படம் 2. மின் அழுத்தத்தைத் துல்லியமாகக் காட்டுகிறது. சில அளவிகளில் மின் அழுத்தத்தின் திசையைக் குறிக்க ஆகிய குறியீடுகள் காட்டப்படுவது உண்டு. இத்தகைய இலக்க வோல்ட்டளவிகள் மின் அழுத்தம் மட்டுமன்றி மின்தடைத் தகைவு (விசை) இடப்பெயர்ச்சி போன்றவற்றை அளவிடவும் பயன் படுகின்றன. இந்த அளவுகள் முதலில் நேர்மின் அழுத்தமாக மாற்றப்பட்டுப் பின்னரே வோல்ட்டள வியினுள் செலுத்தப்படுகின்றன. இலக்கு வோல்ட்டளவியின் பகுதிகள்: இயக்க மாற்றி (digital converter), எண்ணும் கருவி (counter) காட்டி (display) ஆகியன. காட்டி என்பது இலக்க வெளிப்பாட்டிற்கான முகப்புத்தட்டாகும். இலக்க வடிவங்கள் வெளிப்படுவ தற்கு ஒளி உமிழும் இருமுனையம் (LED - light emitting diode); நீர்மப் படிம இருமுனையம் (LCD liquid crystal diode) என்ற இருலகைக் கருவிகள் பயன்படுகின்றன. முதல் வகையில் சில இருமுனையங்கள் (ஒரு திசையில் மட்டுமே மின்சாரம் பாய்வதை அனுமதிக் கக் கூடிய கருவிகள்) தன்னுள் மின்சாரம் செலுத்தப் படும்போது ஒளிப்பிழம்பை வெளியிடும் இயல்பு உடையவை. இவை சிலிக்கான், கால்சியம் ஆர் செனைடு, கால்சியம் பாஸ்ஃபைடு போன்ற எளிதில் த்திக்கும் அரிதல் கடத்திக்கும் இடைப்பட்ட ஒரு பகுதிக்கடத்தி வகையினால் உருவாக்கப்படுபவை. இப்போது அங்காடிகளில் பச்சை, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களில் ஒளி உமிழக்கூடிய இருமுனையங்கள் கிடைக்கின் றன. கட நீர்மப் படிம வகைகளில் வேதிமாற்றம் காரண மாக மின்சாரம் பாயும் சில பகுதிகள், ஏனைய பகுதிகளையும் சுற்றுச் சூழலையும் விட ஒளிக் கசிவு