பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/830

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

806 இலகு (தனி) எந்திரங்கள்‌

806 இலகு (தனி) எந்திரங்கள் 比 盛付 8 உள ST ஞ் 0123456789 படம் 3. காட்டி மிகுதியாக ஏற்படுவதால் நிறமாறுதல் அடைந்து எண்களை அந்தந்த இலக்க வடிவில் புலப்படுத்து கின்றன. காட்டி (display) என்பது இத்தகைய இருமுனை யங்களின் தொகுதிகளால் ஆனது. ஓர் இலக்கத்துக்கு ஏழு பகுதிகள் கொண்ட ஒரு தொகுதி என்றவாறு நான்கு அல்லது ஆறு (சில அளவிகளில் ஆறுக்கு மேலும்) தொகுதிகள் இணைக்கப்பெற்றிருக்கும். 'அ' முதல் 'எ ' முடிய உள்ள ஏழு பகுதிகளிலும் மின்சாரம் செலுத்தப்பட்டால் எட்டு என்கிற எண் காட்டியில் தோன்றும். இவ்வாறு ஏனைய எண்களுக் கும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே மின் சாரம் செலுத்துவதன் மூலம் இலக்க வெளிப்பாட் டைப் பெறலாம். இந்த ஏழு பகுதிகள் அடங்கிய தொகுதிகள் பலவற்றைப் பொது நேர்மின்வாய்ச் சுற்றுவழி (common anode circuit) அல்லது பொது எதிர்மின் வாய்ச் சுற்றுவழி (common cathode circuit) என இருவகையாக அமைக்கலாம். சாதாரண வோல்ட்டளவிகளை விட இலக்க வோல்ட்டளவிகள் பின்வரும் சிறப்புகளைப் பெற்றி ருக்கும். அளவீட்டில் பிழை நேரிடுதல் மிக அரிது; ஓர் அலகின் மிகச் சிறிய பகுதியினைக் கூடத் தெளி வாகவும் துல்லியமாகவும் காட்ட வல்லது; இணைப் படும் இணைப்பில், யாதொரு ஊறுபாடும் இழைக்கப் படாத வண்ணம் மிகுந்த (ஏறத்தாழ 10 மெகா ஓம்கள்) மின்தடை பயக்க வல்லது. சில இலக்க வோல்ட்டளவிகள் தகுந்த அளவீட்டு எல்லையைத் தானே தேர்ந்தெடுத்துச் செயல்படுகின்றன. இவை திறனறிவு குறைந்தவர்களும் எளிதில் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. கி. வெ. இராமச்சந்திரன். இலகு (தனி) எந்திரங்கள் நெம்புகோல், கப்பி, இருசு,ஆப்பு, சாய்தளம், திருகு ஆகியவற்றையொத்த தனி அமைப்பு, தனி எந்திரம் அல்லது இலகு எந்திரம் (simple machine) எனப்படு கிறது. எந்திரத்தில் செலுத்தப்படும் விசை, வினை (effort) அல்லது முயற்சி எனப்படும். எந்திரத்