இலகு (தனி) எந்திரங்கள் 809
படும் திசையை மாற்றிக்கொள்ள இது பெரிதும் உதவுகிறது. எடுத்துக்காட்டாகக் கிணற்றில் நீர் இறைக்கும்போது கீழிருந்து மேல் நோக்கி இழுப் பதைவிட நிலைக்கப்பியின் உதவியால் மேலிருந்து கீழேயிழுப்பது எளிதாக இருக்கின்றது. இடம் பெயர்ந்து நகரும் கப்பிகள், இயங்கு கப்பிகள் எனப் படும். கப்பியின் சட்டத்தில் எடையைத் தொங்க விட்டுக் கயிற்றின் ஒரு முனையை நிலையாக ஓரிடத் தில் கட்டிவிட்டு மறுமுனையில் முயற்சியை ஈடுபடுத் தினால் சுப்பியும் அதனுடன் எடையும் மேலே உயர்ந்துவரும். இப்பொழுது முயற்சி, எடையில் அரை அளவானதாக இருக்கும். எனவே, இவ் வமைப்பின் எந்திரலாபம் 2 ஆகும். பெரிய எடை களைத் தூக்கப் பல கப்பிகளை இவ்வாறு அமைத்துப் பயன்படுத்தலாம். இத்தகைய கப்பி களைக் கொண்ட அமைப்பின் எந்திரலாபம் 2 ஆகும். பல கப்பிகளை ஒரே சட்டத்தில் கொத் தாகப் பொருத்திய கப்பித் தொகுதிகள் இரண்டைக் கொண்டு அதிக எடைகளை எளிதில் தூக்கலாம். படம் 5 இல் உள்ளதுபோல் ஒரே கயிறு அனைத்துக் கப்பிகளின் வழியாகவும் செல்கிறது. மேலுள்ள சுப்பித் தொகுதியை நிலையாகப் பொருத்தி வைத்துக் இலகு (தனி) எந்திரங்கள் 809 கீழுள்ள தொகுதியில் எடையைக் கட்டிவிட்டுக் கயிற்றின் முனையில் முயற்சியை ஈடுபடுத்தினால். எடை மேலே உயரும். எடையும் முயற்சியும் ஒத்த நிலையில் இருக்கும்போது எடையைப் படம் 5 இல் காண்பது போன்று ஒரே கயிற்றின் ஆறு (6) பகுதி களும் தாங்குகின்றன. இப்பகுதிகளில் உள்ள இழு விசை T. ஈடு படுத்தப்படும் E க்குச் சமமாகும். எனவே, E=L/6 அல்லது எந்திர லாபம் = மொத்தம் in கப்பிகள் இருந்தால் எந்திரலாபம் 2 n. L E 6. சாய்தளம். கிடைமட்டத்திற்குச் சாய்வாக உள்ள ஒரு சமதளம் சாய்தளம் (inclined plane) எனப்படும். செங்குத்தாக ஏறாமல் சாய்வான பரப்பில் நடந்து சென்றால் குறிப்பிட்ட இடத்தை எளிதாக அடைந்து விடலாம். ஒரு பொருள் சாய்தளத்திலிருக்கும்போது அதன் எடை 1 புவி மையத்தை நோக்கி நேர் கீழாகச் செயல்படுகிறது. பொருளின் மீது தளம் செலுத்தும் எதிர்ச் செயல் தளத்திற்கு நேர்குத்தாகச் செயல்படுகிறது. இவற்றால் பொருள் கீழே வர முற்படும். இதனைத் தளத்திற்கு இணையான E என்ற விசை எதிராகச் செயல்பட்டுத் தடுத்து நிறுத் தும். சாய்தளம் கிடைமட்டத்திற்கு O' சாய்ந்திருப்ப தாகக் கொண்டால் E.L.R என்ற விசைகளால் பொருள் நிலையாய் இருக்கும். எனவே, லாமியின் தேற்றத்தின்படி, E R Sin (90+0) Sin (180-0) L Sin 90 = R L Cos 0 E Sin 6 L 1 I AB எந்திர லாபம் = E Sin 0 BC/AB BC 1 F தளத்தின் நீளம் தளத்தின் உயரம் h எனவே, எப்போதும் எந்திரலாபம் ஒன்றைவிட மிகுதியாகவே இருக்கும். சாய்தளத்தில் பொருளின் மீது செயல்படும் திறன் கிடை மட்டத்திற்கு இணையாகச் செயல் பட்டால்,லாமியின் தேற்றத்தின்படி, L L E R B Sin (90+0) Sin (180-0) Sin 6 L E = R Sin 6 Sin 6 L எந்திர லாபம் = = படம் 5. இருசும் சுப்பியும் E Cos @ Sia @ 1 tan #