814 இலயமின்மை நீக்கிகள்
814 இலயமின்மை நீக்கிகள் ஊது குழல் ஆய்வு முறையில் மூடிய குழலில் இதை வெப்பப்படுத்தும்போது நீர்த் திவலைகளைக் கொடுக்கும். பின்பு கருமை நிறமாக மாறும். எளி தில் உருகி எமரால்டு பச்சை நிற ஒளியைக் கொடுக் கும். கரிக் குழி ஆய்வு முறையில் சோடாவுடன் கூட்டி, ஊது குழலால் வெப்பப்படுத்தும் போது உலோகச் செம்பைக் கொடுக்கும். சில வேளைகளில் ஆர்செனிக்கின் நாற்றத்தை உண்டு பண்ணும். அடர் நைட்ரிக் அமிலத்தில் வெகு எளிதில் கரையும் சில செம்புப் படிவுகளில் காணப்படும் மிக அரி தான கனிமப்பொருளே இலபிதேனைட்டாகும். செக் கோஸ்லோவேக்கிய நாட்டில் நைஷோல்க்கு அருகில் விபிதென் என்ற டத்தில் இவை அதிகமாகக் காணப்படுவதாலும் இப் பெயர் இட்டு அழைக்கப் படுகின்றன. இங்கு இக்கனிமம் சால்கோபைரைட்டு குவார்ட்சு கனிமங்களுடன் பாறைகளில் உள்ள குழி களில் காணப்படுகிறது. பொதுவாகச் செம்புத்தாது கிடைக்குமிடங்களில் குறைந்த அளவில் காணப்படு கிறது. அமெரிக்காவில் உள்ள யூரல் மலைத் தொடர் களில் நிசாகினி, தாகில்ஷிக் இடத்திலும், அரி சோனா மாவட்டத்தில் கிரின்லி, கிளிப்டான் னும் இடத்திலும் இக்கனிமம் கிடைக்கிறது. என் பயன்கள். இக்கனிமம் இந்தியாவில் அதிக அள வில் கிடைப்பதில்லை. இது அதிக அளவில் கிடைத் தால் செம்பின் சிறப்புக் கனிமமாகப் பயன்படும். சு. ச. நூலோதி. Ford. W.E., Dana's Text Book of Mineralogy, Fourth Edition, Wiley Eastern Limited, New Delhi, 1985; Winchell. A N., Winchell. H., Elements of Optical Mineralogy, Fourth Edition, Wiley Eastern Private Limited, New Delhi, 1968. கள் விரிவடையவும் செய்கின்றன. தூய இரத்தம் தமனிகளுக்கும், கழிவு இரத்தம் சிரைகளுக்கும் கொண்டு செல்லப்படுவதுடன், கழிவு இரத்தம் நுரை யீரல்களில் தூய்மையடைவதும் நிகழ்கிறது. இச் செயல்பாட்டில் ஏதாவது மாறுதல் ஏற்பட்டால், இதயமேலறைகளுக்கும், கீழறைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்விட, அதன்மூலம் இரத்த ஓட்டத்தில் மாறுபாடு உண்டாகின்றது. இலயமின்மை நீக்கிகள் (antiarrythmic drugs) இந்த மாற்றங்களைத் திருத்திச் சீரான இரத்த ஓட்டம் ஏற்பட வகை செய்கின்றன. செயல்படும் விதம். இதய மேலறைக் கணு, இதய மேலறைக் கீழறைக்கணு தவிர மற்ற இடங்களிலிருந்து பிறக்கும் கட்டளைகளைத் தடுத்து நிறுத்துகின் றன. கட்டளைகளின் வேகத்தையும் குறைக்கின்றன. இதயக் கீழறைகள் விரிவடையும் நேரத்தைக் கூட்டு கின்றன. இதயச் செல்களிலிருந்து பொட்டாசியம் வெளிவருவதைக் குறைக்கின்றன. மருந்துகள், குயுனிடின், புரோகேனமைடு போன்ற இதயத் தசைகள் முழுதையும் பாதிக்கும் மருந்துகள், லிக்னோகெய்ன், பெனிட்டாயின் போன்ற இதயத் தசைகளின் பாதியைப் பாதிக்கும் மருந்துகள், புரோப் பனலால் போன்ற நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மருந்துகள், டிஜிட்டாலிஸ் வகைமருந்துகள், வெரப் பாமில், ஃபீனைல் அலனின் போன்ற இதர வகை மருந்துகள் ஆகியன இந்நோய்க்கு மருந்தாகப் பயன் படுகின்றன. எல்லா இதய இலயமின்மைக்கும் மருத்துவம் தேவைப்படுவதில்லை. உடல்நலத்திற்கு ஊறு விளை விக்கும் இதய இலயமின்மைக்கு மட்டும் மருத்துவம் அளித்தால் போதுமானது. இரத்த அழுத்தக் குறை வினால் ஏற்படும் இதய இலயமின்மையை இரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தப் பயன்படும் நார்அட்ரீல னின் போன்ற மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். எஸ். விசுவநாதன் . இலயமின்மை நீக்கிகள் சீரான இரத்த ஓட்டம் உடலின் திசுக்களுக்கு ஆக்சிஜனையும், உணவையும் அளிப்பதுடன், கார் பன் டை ஆக்சைடு போன்ற கழிவுப் பொருள்களைத் திசுக்களிலிருந்து பெற்றுக்கொள்ளவும் செய்கின்றது. இந்தச் சீரான இரத்த ஓட்டத்திற்குத் தேவையான துடிப்பு சைனோ ஏட்ரியல் கணுவிலிருந்து தொடங்கி இதய மேலறைக்குப் பரவுகிறது. பின் அங்கிருந்து தய மேலறை கீழறைக் கணுவிற்குப்பரவி பர்க்கிஞ்சி எனப்படும் தசைநார்களின் வழி இதயக் கீழறை களை வந்து அடைகின்றது. இந்தச் செயல்பாடு ஒரு சக்கரம் போல் செயல்படுகின்றது. இதயமேலறை சுருங்கும்போது இதயக்கீழறைகள் விரிவடையவும் இதயக் கீழறைகள் சுருங்கும்போது இதய மேலறை இலவங்கப்பட்டை இத்தாவரம் லாரேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் சின்னமோமம் சைவானிகம் (cinnamomum zylanicum) ஆகும். தற்போது இத் தாவரம் இலங்கை, பர்மா, மலேசியா, மேற்கு இந்தியத் தீவுகள், தென் அமெரிக்கா முதலிய நாடு களிலும் இந்தியாவில் நீலகிரி, கேரளா, அசாம், உத்தரப்பிரதேசம் முதலிய இடங்களிலும் நன்கு பயிராகிறது.