பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/843

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலமிச்சை 819

இலாசுரைட்டு இது ஆர்த்தோ சிலிக்கேட்டு என்னும் பெரும் கனிமத் தொகுதியைச் சார்ந்தது. ஆர்த்தோ சிலிசிக் அமிலத்தின் உப்புகளும் சிலிக்கானும் ஆக்சிஜன் அணுக்களோடு 1:1 என்னும் விகிதத்தில் கலந்து இருக்கும். இவற்றைச் சாம்பலாக்கும்போது ஹைட்ர ஜன் திண்மங்கள் வெளிவருகின்றன. இத்திண்மங் களில் உள்ள இலாசுரைட்டு, சோடாலை லட்டு என்னும் கனிமப் பிரிவைச் சேர்ந்ததாகும். பருஞ்சதுரபடிகத் (isometric) தொகுதியின் கீழ் இது காணப்படுகின் றது. இப்படிகங்கள் பருஞ்சதுரங்களாகவும், சாய் சதுரங்களாகவும் (dodecahedron) கிடைக்கின்றன. இவை பல சமயங்களில் திண்ணிய படிகங்களாகவும் இறுகிய கடினமான படிகங்களாகவும் காணப்படும். சாய்சதுரப் பக்கங்களுக்கு (110) இணையாகக் கனிமப்பிளவு தெளிவற்றுக் காணப்படும். ஒழுங்கற்ற கனிம முறிவைப் பெற்றது. இதன் கடினத் தன்மை 5-5.5; அடர்த்தி எண் 2,38-2.45; பளிங்கு மிளிர் வைக் கொண்டது. இரும்பின் மிளிர்வையொத்த- வானத்தையொத்த ஊதா, பச்சை கலந்த நீல வண்ணங்களில் படிகங்களாகக் கிடைக்கின் றன. இக்கனிமங்கள் ஒளிக்கசிவுத் தன்மையைப் பெற்றவை. ஒளி அச்சுகளுக்கு இணையாக ஒளி விலகல் எண் 1.5 ஆகும். நுண்ணோக்கியின் கீழ் ஆயும்போது இவற்றின் குறைந்த ஒளி விலகல் இயல்பு ஒளி ஊடுருவாத் தன்மை அரிதாகப்பெற்றுள்ளன. கனிமப் பிளவு ஆகியவற்றைக் கொண்டு மற்ற கனிமங்களி லிருந்து பிரித்து அறிந்து கொள்ள இயலும், இவற் றின் மெல்லிய கனிமச் சீவல் ஒன்றை எடுத்து அதை நைட்ரிக் அமிலத்துடன் சேர்த்து ஆவியாக்குதலால் அவற்றினின்று ஹைட்ரஜன் சல்ஃபைடு என்ற வளிமம் வெளிவருவதிலிருந்து இவற்றுடன் தொடர் புடைய பிற சோடாலைட்டுப் பிரிவுக் கனிமங்களி லிருந்து இவற்றை வேறுபடுத்தி அறிய முடியும். இவை சோடியம் சல்ஃபைடு கலந்த சோடியம் அலுமினியம் சிலிக்கேட்டு என்ற வேதியல் இயைபை யும் கொண்டது. இருப்பினும் இதனையொத்த இதன் படிகத் தொகுதியில் உருவாகும் பிற கனிமங்களான சோடாலைட்டு, ஹாயினைட்டு என்பன கனிம மூலக்கூறுகளுடன் கலந்து ஒத்த இயல்பைப் பெற்று வேதி இயைபில் மாறிக் காணப்படும். சுண்ணாம்புப் பாறைகளில் கிரானைட்டுப் பாறைகள் ஊடுருவும் போது உண்டாகும் தொடு உருமாற்றுப் பாறைகளில் இவை காணப்படுகின்றன. இக்கனிமங்கள் பொது வாகப்பைரைட்டு என்னும் கனிமத்தின் நுண்ணிய கனிம மணிகளைத் தம்முள் உள்ளடக்கியிருப்பதைக் காணலாம். ஆப்கானிஸ்தானத்திலுள்ள கோக்சா பள்ளத்தாக்குகளிலும், பெயிர்சியாவிலுள்ள துர்கிஸ் தானிலும், சிலியில் உள்ள ஆண்டிள் தொடர்ப் பகுதியிலும் மிகுதியாகக் காணப்படு அ.க.4-52அ இலமிச்சை 819 கின்றன. இவை லாப்பிஸ், லசூலி என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றன. நல்ல நீல வண்ணத்தைப் பெற்றுள்ள இக்கனிமங்கள் விலை உயர்வான அழகு மலர்க் குவளைகள் ஆபரணத்தட்டுமுட்டுப் பொருள் கள் (ornamental upholsters ) செய்வதற்குப் பயன் படுகின்றன. மேலும் பல வண்ணப் பட்டைத் தளங் கள் செய்யவும் பயன்படுகின்றன. இதனைப் பொடி யாக்கி அல்ட்ராமைரைன் என்னும் வண்ணப் பொருள் செய்கின்றனர். இலாமிச்சை ஞா. வி.இராஜமாணிக்கம் இது இந்தியாவிலும் வங்காளத்திலும் காணப்படு கிறது. இப்பொழுது வெப்ப மண்டலப்பகுதிகளிலும், நடுநிலை வெப்ப மண்டலப்பகுதிகளிலும் வளர்க்கப் படுகிறது. இது இந்தியாவிலிருந்து மேற்கிந்தியத் தீவு களுக்கும், லோசினியானாவுக்கும் பரவியது. இது பிரெஞ்சுப் பூங்காக்களில் வளர்க்கப்படுகிறது. தானாகவே இயற்கையாக எங்கும் வளரும் இயல் புடையது; விளாமிச்சை வேர் என்ற வேறொரு பெயரும் இதற்குண்டு. தாவரவியலில் இதனை வெட்டி வேரியா சைசனாயிட்ஸ் (vetveria zizanoides, Linn.) என்று அழைப்பார்கள். . சிறப்புப் பண்புகள். இது சொரசொரப்பான பல பருவச்செடி. தடிப்பான மட்நிலத்தண்டுகள் கொண் டது. தண்டுகளின் அடிப்பகுதி ஏறக்குறைய அமுங்கி யிருக்கும். இலைகள் குறுகலானவை; பின்வளைந் தவை; தட்டையாயிருக்கும். கீழ் இலையின் உறை மிகவும் அமுங்கியிருக்கும். மஞ்சரி. இதன் கூட்டுப் பூந்திரள் (panicle) நேராயிருக்கும்; பல கதிர் வட்டங்கள் கொண்டது. அரிதாகக் கூட்டுரெசீம்களாகவும் காணப்படும். மூன்று மஞ்சரிக்காம்புகளையும் பல இணைப்புகளை யும் கொண்டது; நொறுங்கும் தன்மையுடையது. மலர்கள் மென்மையான காம்புடையவை. சிறு கதிர் கள் இரண்டு வரிசையாயிருக்கும். ஒன்று காம்புட னும், மற்றொன்று காம்பற்றும் இருக்கும். பாலினங் கள் உருவில் வேறுபட்டிருக்கும். காம்பற்ற சிறுகதிர் கள் இடையில் சற்றே அமுங்கியிருக்கும். உமிகள் ஒத்தவை; தோல் போன்றோ காகிதம் போன்றோ காணப்படும். கீழ்ப்பகுதி வட்டமாகவும் மேல்பகுதி படகு வடிவாகவும் இருக்கும். லெம்மாக்கள் கண் ணாடி போன்றவை. கீழ்ப்பகுதி இரண்டு நரம்புடன் முழுமையாகவும், மேல் பகுதி இரண்டு பற்களுடனும் காணப்படும். இரண்டு மலைத் சூலகத்தண்டுகள் படும். தானியம் நீள் சதுரமாகவும், சற்றே முனையில் காணப்