820 இலார்னைட்டு
820 இலார்னைட்டு சாய்வாகவும் இருக்கும். இதில் இரண்டு சிற்றினங் கள் உண்டு. வெ. சைசனாயிட்ஸ். இதன் வேர்க்கட்டை கடற் பஞ்சு போன்ற வேர்கள் கொண்டது. இந்த வேர் கள் மிக்க மணமுடையவை. இவை மருந்தாகப் பயன் படுகின்றன. தண்டுகள் குஞ்சம் போன் று தடிப்பாக வும் ஆறு அடி உயரமுள்ளவையாகவும் இருக்கும். இவை தோல் போன்றவை; 1-3 அடி நீளமுள் ளவை அனைத்து மாவட்டங்களிலும் கடல் மட்டத் திலிருந்து மூவாயிரம் அடி வரை உள்ள இடங்களில் இது வளர்கிறது. இதனை விர்கெல், வியால் எனவும் அழைப்பார்கள். வெ. லாஸோனி. இதன் வேர்க்கட்டை கிடை. மட்டமானது. வேர்கள் மிருதுவானவை அல்ல; மணமுள்ளவையும் அல்ல; தண்டுகள் மென்மை யானவை; 1.5-5 அடி உயரமிருக்கும்: இவைகள் தளிர்போன் றலை: 3-9 அங்குலம் நீளமானவை; இவை கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கடல் மட்டத்திற்கு மேல் 1400-3000 அடியில் வளர் கின்றன. பொருளாதாரச் சிறப்பு. இலாமிச்சை வேரிலிருந்தும் மட்ட நிலத் தண்டிலிருந்தும் எண்ணெய் கிடைக்கிறது. இதன் வேர்கள் நறுமணமுள்ளவை. இவை பாய் தயாரிக்கவும், விசிறியாகவும், தொங்கும் திரைகளுக் குப் பதிலாகவும், சூரிய ஒளித்தடுப்பாகவும், கூடை யாகவும், தலையணையாகவும் பயன்படுகின்றன வேரிலிருந்து கிடைக்கும் உயர்வகை எண்ணெய் சிட்ரோ நெல்லா எண்ணெய் போல் இருக்கும். இது வாசனைத் தைலங்கள் சோப்பு, மருந்துப்பொருள் கள் முதலியவை தயாரிப்பதற்குப் பயன்படுகிறது. மேலும் வண்ணப் பூச்சுகளில் நிலைநிறுத்தியாகவும் (fixative) பயன்படுகிறது. ப. அண்ணாதுரை நூலோதி. இராமமூர்த்தி கே. கே, தமிழ்நாட்டுத் தாவரங்கள், தமிழ்நாட்டு பாட நூல் நிறுவனம், சென்னை, 1979; Hill, A.F,, Economic Botany. McGraw-Hill Book Company, 1982. இலார்னைட்டு இக் கனிமம் நீசோ சிலிக்கேட்டு வகையில் ஆலிவின் தொகுதியில் அடங்கும். இதன் வேதியியல் உட்கூறு CaSiO ஆகும். இது ஒற்றைச் சரிவுப் படிகத் தொகுதி யில் (monoclinic system of crystals) காணப்படு கின்றது. இதன் அடர்த்தி எண் 3.28 ஆகும். நல்ல திண்மையான செவ்விணை வடிவப் பக்கப் (100) பிளவும், இப்பக்கத்தை (100) இரட்டுறு பக்கமாகக் கொண்டதால் படலப் பிளவும் காணப்படுகின்றன. இலார்னைட்டு (larnite) வெண்மை நிறமாகவும், இதன் கனிமச் சீவல் நிறமற்றும் இருக்கும். நீரினால் மெதுவாகத் தாக்கப்பட்டும் வலிமை குன்றிய அமிலத் தால் விரைவாக, களிபடிவாக (gelatinizes) மாறும் தன்மையும் உடையது. நீ Ca, SiO, இயற்கையில் இயல்பாகக் காணப்படுகிறது. ஆனால் & Ca, SiO, இதன் உருகுநிலையான 2130°C வெப்ப நிலைக்குக் கீழ் நிலையான தன்மை கொண்டது. Ca,SiO+ என்னும் இலார்னைட்டு 67 5°C வெப்ப நிலைக்குக் கீழ் நிலைத்தன்மை கொண்டது. ஒளியியல் பண்பு முறையில் இதை ஆராயும் போதும் நுண்ணோக்கியின் உதவியால் காணும் போதும் நிறமற்றதாகவும், செவ்விணை வடிவப் பக்கத்தை இரட்டுறு பக்கமாகக் கொண்டும் இரட் டுறவு காணப்படுகிறது. இதன் ஒளிவிலகல் எண், விரைவொளி அச்சுக்கு (2) 1.730 ஆகவும், மெது ஒளி அச்சுக்கு (a) 1.707 ஆகவும், இடைவெளி அச் சுக்கு (P) 1.715 ஆகவும் காணப்படும். இலார்னைட்டு ஒளியியலாக நேர்மறைப் பண்பைக் கொண்டது. தன் ஒளியியல் அச்சுக் கோணம் நடுத்தரமானது. இவ்வகை இலார்னைட்டு சுண்ணாம்பு ஆலிவின் அல்லது ஷனோனைட் என்று அழைக்கப்படும். ஃபிரிடிகைட் என்ற ஒருவகை இவார்னைட்டு உயர் வெப்ப நிலையில் செஞ்சாய் சதுரப்படிகத் தொகுதி யிலும், (orthorhombic system of crystals) போலி அறுகோணப் பல்லுறுப்புத் தொகுதியிலும் கிடைக் கின்றன. இவ்வகை இலார்னைட்டு தொடுகை உருமாற்ற வளாகங்களில் குறிப்பாக அயர்லாந்தில் இலார்னே என்ற பகுதியிலும், ஆலிவின் நிறைந்த பாறைகளி லும் காணப்படுகின்றன. இலிம்பர்கைட்டு -சு.ச. இது ஒரு கருமை நிறக் கண்ணாடிப் பாங்கு மிகுந்த பசால்ட்டு வகையாகும். இலிம்பர்கைட்டில் (eimbur- gite) முதன்மைக் கனிமமான ஆலிவின், பைராக்சின் தொகுதியில் உள்ள ஆகைட்டு ஆகிய கனிமங்கள் மிகுந்தும் பெரும் பெரும் பரல்களாகவும் (phenocrysts ) காணப்படுகின்றன. இப்பாறைகளை ஆய்வு செய்யும் போது இவை சிலிக்கா குறைவுப்பாறைகளின் வகை களைச் சேர்ந்தவை என்று அறியப்படுகிறது. மேலும் இவ்வகைப் பாறைகளில் ஃபெல்சுபார்கள் குறை வாகவோ அரிதாகவோ காணப்படும். சு. ச,