பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/845

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலுப்பை 821

இலுப்பை 821 இலிமோனைட்டு து பாறையாகவும், கனிமப் போலியாகவும் கனிமக் கூழ்மமாகவும் காணப்படுகிறது. சதுப்பு நிலத்தினைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான இலிமான் (limon) என்னும் சொல்லின் அடியாக இலிமோனைட்டு (limonite) என்ற பெயர் பெற்றது. வண் படிக வடிவில்லாத் துகள் நிலையை உடைய இக் கனிமம் ஸ்டேலக்டைட்டு, பாட்ரியாய்டல்,மாமில்லரி நார் ஆகிய வடிவங்களில் கிடைக்கின்றன. பழுப்பு, கரும்பழுப்பு, மஞ்சள்-பழுப்பு எனப் பல ணங்களில் கிடைக்கிறது. மஞ்சள்-பழுப்பு கீற்றினை உடையஇது ஒளிகசியாத தன்மையுடையது.பட்டு, உலோகம் போல் மிளிர்வும் மண்ணைப் போன்று மங்கியும் காணப்படும். இதன் கடினத்தன்மை 5 முதல்5.5 வரையிலும். அடர்த்தி 3.6 4.0 வரையிலும் காணப்படுகிறது. இதன் வேதியியல் உட்கூறு 2Fe, O,3.3H,0 (தோராயமானது). இரும்பு ஆக்ஸைடு 85.5 விழுக் காடு,நீர் 14.5 விழுக்காடு இருக்கும். நீரின் அளவு 12 முதல் 14 விழுக்காடு வரை வேறுபடுகிறது. இலி மோனைட்டின் தந்துகிப் பரப்புக் கவர்ச்சியினால் நீரளவு வேறுபடுகிறது. போக் தாதுக்களில் மணல், களி, பாஸ்ஃபேட்டு, மங்கனீஸ் ஆக்சைடு, ஹியூமிக் அமிலம் ஆகிய கலப்புகள் இருக்கலாம். இரும்பினைக் கொண்ட பிற கனிமங்கள், தாதுக் கள் காற்று, ஈரப்பசை, கார்பானிக் அமிலம் அல்லது கரிம அமிலத்தின் சூழலில் இலிமோனைட்டாக மாறு படுகிறது. பைரைட்டு, மேக்னடைட்டு சிட்ரைட்டு, பெரிடெரஸ் டோலமைட்டு, ஃபெர்ரஸ் இரும்பினைக் கொண்ட மைக்கா, பைராக்ஸீன், ஆர்ன்பிளண்ட்டு கள் ஆகிய கனிமங்களே பெரும்பாலும் இலிமேனைட் டாகின்றன. குறைந்த அழுத்த வெப்ப நிலை லேயே இரும்பினைக் கொண்ட நீர்மத்திலிருந்து உரு வாவதால் க்கனிமம் பல இடங்களில் கிடைக்கிறது. சதுப்பு நிலங்களில் இரும்புப் பாக்டீரியாக்கள் நீரி லிருந்து இரும்பினை உறிஞ்சிப் பின்னர் ஃபெர்ரிக் ஹைட்ராக்சைடு ஆகப் படியவிடுகின்றன. கார் பானிக அமிலம் நீரிலிருந்து ஆவியாதலினால் இரும்பு ஆக்சைடு பிரிக்கப்படலாம். உலோக நரம்பிழைகள் புவிப்பரப்பில் தெரியும் பகுதிகளில் இலிமோனைட்டு வேதிக்கரைவுப் பரப்பு களாகவும் இரும்புக் கவிப்புகளாகவும் காணப் படலாம். இலியாமா நூல் (Liama yarn ) காண்க, ஒன்றிய நூல்கள். சு. ச. இலிஸ்லே நூல் வார், கையுறை, எந்திரப்பின்னல் ஆகியவற்றுக்குப் பயன்பட்ட லினன் அல்லது சணற்போலி நூலுக்கு முதலில் இலிஸ்லே லூல் (lisle yarn) என்ற பெயர் வழங்கியது. தற்போது நெடும்பொதிப்பருத்தி நூலுக்கு இப்பெயர் வழங்குகிறது. இது காற்றால் புறப்பரப்பு இழைப்பிசிறு நீக்கப்பட்ட நீவிய, அதி முறுக்குடைய மெல்லிய நூலாகும். இலீனியன் தாவர வரலாறு காண்க: லைக்கீனியன் தாவரங்கள் இலுப்பை உலோ.செ. இம்மரம் சப்போடேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. வட இந்தியாவில் காணப்படும் பாசியா லாட்டிஃபோலியா (Bassia latifolia) தென்னிந்தியா வில் காணப்படும் மதுக்கா வாஞ்சிஃபோலியா (Madhuca longifolia) ஆகிய இருவகை மரங்களுமே இலுப்பை எனத் தமிழிலும், வெண்ணைய் மரம் (butter tree) என ஆங்கிலத்திலும் அழைக்கப்படு கின்றன. இவையிரண்டுமே ஒன்றையொன்று பெரிதும் ஒத்திருப்பதால், வணிகத்தில் இவையும் இவற்றின் விளைபொருள்களும் வேறுபடுத்தப்படுவதில்லை. நாட்டு இலுப்பை என்று அழைக்கப்படும் மதுக்கா லாஞ்சிஃபோலியா, எப்பொழுதும் பசுமை யாக அடர்த்தியான கிளைகளுடன் கூடிய பெரிய மரமாகும். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மழைக் காடுகளிலும், ஆறு, ஓடை, கால்வாய், ஏரி ஆகிய வற்றின் கரைகளிலும் சாலை ஓரங்களிலும் இம் மரத்தைக் காணலாம். கிராமங்களை அடுத்துள்ள தோப்புகளிலும், கோவில் நிலங்களிலும் இதை அடர்த்தியாக வளர்க்கின்றனர். பாதுகாக்கப்பட்ட காடுகளிலும் இது ஏராளமாக வளர்க்கப்படுகின்றது. மரத்தின் பட்டை மஞ்சள் கலந்த சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் சிறிதளவு பிளவுபட்டிருக் கும். தண்டு அல்லது கிளைகளை வெட்டினால், அக்காயங்களில் சிவந்த பால் போன்ற நீர் கசியும். இலைகள் கிளைகளின் நுனிகளில் திரட்சியாகக் காணப்படும். இலையின் இரு முனைகளிலும் கூம்பிய ஈட்டி போன்றவடிவமும் மெலிந்த இலைக்காம் பின் அடிப்பகுதியில் நீண்ட இலையடிச்செதிலும்