பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/846

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

822 இலுப்பை

822 இலுப்பை இலுப்பை 5 1. கிளை பூங்கொத்துள்ளது 2. பூ3. புல்லியும் அல்லியும் 4. அல்லியின் உட்புறம் விரித்துக் காட்டியிருப்பது அல்லிப்பிரிவு காதும் அல்லியோடு இரண்டு வரிசையாக இணைந்துள்ள கேசசஸ் கலும் தெரிகின்றன B. மகரந்தப்பை முன் பின் தோற்றங்கள் 8. சூலகம் நெடுக்கு வெட்டு (stipule) காணப்படும். பூக்கள் வெளிறிய மஞ்சள் நிறமானவை; இவை இலைகளின் கோணத்தில் ஒற்றை யாகக் காணப்படும். கனி முட்டை வடிவானது; ஒற்றை விதை கொண்டது. பிப்ரவரி-மே மாதங்களில் பூத்து, செப்டம்பர் -அக்டோபர் மாதங்களில் காய்க்கும். இலுப்பையின் குறிப்பிடத்தக்க விளைபொருள் அதன் விதையே ஆகும். விதையிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகின்றது. பொதுவாக, இம்மரம் 8-10 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி, 60 ஆண்டுகள் வரை பலன் தரும்.இதன் ஆயுள் 80 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. பெரும்பாலும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறையே பலன் தரும். முதிர்ந்த கனிகள் மரத்தி லிருந்து இயற்கையாகவே விழும். கிளைகள் உலுக் கப்பட்டுக் கனிகள் சேகரிக்கப்படுகின்றன. கனி நசுக்கப்பட்டு, விதை எடுக்கப்படுகின்றது. விதையை உலர்த்தித் தடியால் அடித்துப் பருப்பைப் (விதையின் எடையில் சுமார் 70%) பிரித்தெடுத்து, விற்பனைக் குக் கொண்டு வருவர். இந்தப் பருப்பையே இலுப்பை விதை என்பர். ஏறத்தாழ ஒரு மரத்திலிருந்து 30-45 கிலோ வரை பருப்புக் கிடைக்கும். பெரும்பாலும், செக்கில் ஆட்டியே பருப்பிலிருந்து எண்ணெய் எடுக் கப்படுகிறது. பருப்பின் எடையில் 60% எண்ணெய் இருப்பினும் செக்கிலாட்டும் முறையில் 20-30% எண்ணெயே எடுக்க முடிகிறது. இதற்கு மாறாக எந்திரச் செக்குகளில் ஆட்டினால் 34-37% வரையும் கரைப்பான்களைப் பயன்படுத்தினால் 40-43% வரையும் கூட எண்ணெயைப் பிரித்தெடுக்கலாம். இலுப்பை எண்ணெய் உணவுக்கு ஏற்றது. கிராமப்புறங்களில் இதைச் சமையலுக்குப் பயன் படுத்துவர்: தூய்மைப்படுத்தப்படாத எண்ணெய் அடர் மஞ்சள் நிறமுடையது. சந்தையில் கிடைக்கும் எண்ணெய் பசுமை கலந்த மஞ்சள் நிறத்துடனும், கெட்ட நாற்றத்துடனும், ஒவ்லாத சுவையுடனும் இருக்கும். குளிர் காலங்களில் இந்த எண்ணெய் உறைந்துவிடும். எனவே நெய்யில் கலப்படம் செய்வ தற்கு இது பயன்படுத்தப்படுகின்றது. இதன் கெட்ட நாற்றத்தைக் குறைப்பதற்குச் சிறிது மோரும் இதனுடன் கலக்கப்படுகின்றது. இந்த எண்ணெய் விளக்கேற்றவும் பயன்படுத்தப்படுகிறது. தொழில் துறையில் தூய்மைப்படுத்தப்பட்ட எண்ணெய் உயவு மெழுகு, மெழுகுவத்தி, சலவைச் சவுக்காரம் ஆகியவை செய்யப் பயன்படுகின்றது. மருத் துவத்தில் தோல்நோய், வாதநோய், தலைவலி முதலிய வற்றைக் குணப்படுத்தவும் மலமிளக்கவும், பால் உற் பத்தியைப் பெருக்கவும், வாந்தியைத் தூண்டவும் (emetic) பயன்படுகிறது. இலுப்பைப் பிண்ணாக்கில் சுமார் 16% புரதச் சத்து இருந்தாலும், மௌரின் என்ற சப்பானின் வகை நச்சுப் பொருளும் இருப்பதால் இதைக் கால் நடைத் தீவனமாகப் பயன்படுத்துவதில்லை. ஆனால், நிலங்களுக்கு உரமாக இடப்படுகிறது. மெளரின் இருப்பதால், பிண்ணாக்கிலுள்ள தழைச்சத்து பயிர் களுக்குக் கிடைப்பது சற்றுத் தாமதமாகிறது. ஆத லால், இப்பிண்ணாக்கைப் பயிர் நடுவதற்குச் சில வாரங்கள் முன்னரே நிலத்தில் இடவேண்டும். தென் னிந்தியாவில் இலுப்பைப் பிண்ணாக்கைத் தூளாக் கிச் சிகைக்காய்த்தூளுடன் (அரப்பு) கலந்து தலை முடியைக் கழுவப் பயன்படுத்துகின்றனர். இப்பிண் ணாக்கிற்குப் பூச்சி, மீன், மண்புழு ஆகியவற்றைக் கொல்லும் தன்மையுண்டு. இதன் விதை ஓட்டி லிருந்து கிளர்வுறு கரி தயாரிக்கப்படுகிறது. இலுப்பைப் பூக்களின் புல்லி இதழ்கள் சதைப் பற்றுடன் வெளிர் மஞ்சள் நிறத்திலிருக்கும். மார்ச்- ஏப்ரல் மாதங்களில் பெய்யும் கோடை மழையில் உதிர்ந்துவிடும். இவ்வாறு பூ உதிர்தல், தென்னிந்தி யாவில் மற்ற மாதங்களிலும் நிகழும். இந்தப் பூக்கள் சேகரிக்கப்பட்டு உலர்த்தப்படுகின்றன. ஒரு மரத்திலிருந்து சுமார் பத்துக் கிலோ வரை பூக்கள் கிடைக்கும். இப்பூக்களில் சர்க்கரை, உயிர்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து ஆகியவை மிகுந்துள்ளன. ஆத லால், பூக்கள் நேரிடையாகவும் சமைத்தும் உண் ணப்படுகின்றன. ஆனால், இப்பூக்களை அதிக அள வில் உண்டால் மூளை பாதிக்கப்படும். பூக்களில் சர்க்கரை ஓரளவு மிகுந்திருப்பதால் அவை சாராயம் வடிக்கவும் பயன்படுகின்றன. ஒரு டன் பூவிலிருந்து