இலை இதழ்வளை 827
காம்பாக மாறுகிறது. விளிம்பு ஆக்கத்திசுவின் செயல்திறனைப் பொறுத்து இலைப்பரப்பின் பல் வேறு பகுதிகள் தோன்றுகின்றன. கோளத்தில் இலைத்துளைகள் தாவரத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க செயலாகிய ஒளிச்சேர்க்கை, இலைகள் மூலமே நடைபெறுகிறது. மேலும் நீராவிப் போக்கு, சுவாசித்தல், சேமித்தல் போன்ற வேறுபல வேலைகளையும் இலைகள் மேற் பாளை லையில் துளைச் செல்கள் இலை இதழ்வளை 827 கொள்கின்றன. இலையின் வெளி, உள் அமைப்புகள் இவ்வேலைகளுக்கேற்றவாறு பல்வேறு வகைகளில் சிறப்படைந்து காணப்படுகின்றன. எடுத்துக்காட் டாகப் பெரும்பாலான C4 என்ற சிறப்பு வகை ஒளிச்சேர்க்கை செய்யும் தாவரங்களில் வாஸ்குலார் கற்றையைச் சுற்றி உயிருள்ள சிறப்புவகைச் செல் களாலான கற்றைஉறை காணப்படுவதைக் கூறலாம். இதனை கிரான்ஸ் உள்ளமைப்பு என்று கூறுவர். ஒவ்வொரு இலையும் குறிப்பிட்ட காலம்தான் செயல் திறன் உடையது. இலையின் செயல்திறன் முடியும் நிலையில் இலைக்காம்பில் உதிர் அடுக்குத் தோன்ற இலை கீழே விழுந்துவிடும், செயல்திறன் இழந்த இலை முதலில் பசுமை நிறத்தை இழக்கும். சில தாவரங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்தில்தான் அனைத்து இலைகளும் ஒன்றாகச் செயல்திறன் இழந்து கீழே விழுகின்றன. வேறு சிலவற்றில் தொடர்ந்து ஆண்டு முழுதும், செயல்திறன் இழந்த இலைகள் மட்டும் கீழே விழுகின்றன. இவை பசுமை மாறாத் தாவரங்கள் என்று அழைக்கப்படும். · கே. வி. கிருஷ்ணமூர்த்தி நூலோதி. Fahn, A., Plunt Anatomy, Pergamon Press, Oxford, 1982; Foster, A.S., and Gifford, E.M., Jr., Comparative Morphology of Vascular Plants W.H. Freeman and Co., San Francisco, 1959. இலை இதழ்வளை a ஒரு மிகை எண்ணாக இருக்கும்போது (x2 + y2 ) x-ay 2=0 என்ற சமன்பாட்டினை மாற்றி y*(a-x) =x என்ற படிவத்தில் அமைக்கப்பட்ட சமன் பாட்டிற்கு வரையப்படும் வளைகோடு இலை இதழ் வளை அல்லது சிசாய்டு எனப்படும். டயாஸ்லெஸ் என்பவர் கண்டுபிடித்ததால், டயாஸ்லெஸ் இலை இதழ்வளை அல்லது சிசாய்டு எனவும் இதைக் குறிப்பிடுகின்றனர். சிசாய்டு வளைகோடு, இருபகுதிகளாக, x=0. x = a என்ற இருகோடுகளுக்கிடையில், X அச்சைப் பொறுத்துச் சமச்சீராக, முதலாம், நான்காம் பகுதி களில் அமைந்துள்ளது. வளைகோட்டின் இரு பகுதி களுக்கும் பொதுப்புள்ளியான ஆதி (origin) இதன் கூர்புள்ளி ( cusp) ஆகவும், X அச்சும் பொதுத் தொடு கோடாகவும் (tangent) அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. x = a என்ற நேர்கோடு y அச் சுக்கு இணையாகவுள்ள அணுகுகோடு (asymptote) ஆகும். மேலும் இவ்வளைகோடு 0<x < a என்ற இடைவெளியில் மட்டும் அமைந்திருப்பதால். அணுகுகோடு மெய்யாகும்.