830 இலைகளின் மாறுபாடுகள்
830 இலைகளின் மாறுபாடுகள் சிறு செடிகளாகிப் பின் அவை தனித் தாவரமாகும். சில்லா இலை முனையில் உள்ள இடத்திலிருந்து புதுத் தாவரம் உருவாகும். தட்டைக் காம்புகள் (phyllodes). இவைத் தொழி லைச் செய்யும் இலைக் காம்பிற்குத் தட்டைக் காம்பு என்று பெயர். இது பெரும்பாலும் கூட்டிலைக் காம்புகளில் காணப்படும். ஆஸ்திரேலியாவில் மிகு தியாகக் காணப்படும் வேல மரத்து (acacia melanoxylon ) இனத்தில் உள்ள மரக்கன்று முளைத்து வரும்போது இக்கூட்டிலைகளைக் காணலாம். இலை களைப் போலவே காணப்படும் இலைக்காம்புகள் தட்டையாகவும் பச்சையாகவும் இருக்கும். இலை இத் தொழிலைச் செய்யும். ஹெட்ரோபில்லி. ஒரே தாவரத்தில் இரு வேறு பட்ட இலைகள் இருக்கும் நிலை ஹெட்டிரோபில்லி எனப்படும்.(எ.கா) லிம்னோபில்லா ஹெட்டிரோ ஃபில்லா (limmophylla heterophylla) என்ற தாவரத் தின் கீழிருக்கும் நீரில் மூழ்கியுள்ள இலைகள் வேர்கள் போலவும், நீரை உறிஞ்சும் தன்மையுடனும் காணப் படும். நீருக்கு மேலுள்ள இவைகள் அகன்று, சாதாரணமாக மற்ற இலைகள் போன்று ஒளிச் சேர்க்கை நடத்தும். நீர் மட்டத்தில் வேர் போலில் லாமலும், இலைபோல் இல்லாமலும் இடைப்பட்ட இலைகள் காணப்படும். பூச்சியுண்ணும் இலைகள் (insectivorus leaves). பூச்சியுண்ணும் இலைகள் சிறு பூச்சிகளைக் கொன்று அவற்றில் உள்ள புரத உணவை டுத்துக் கொள் கின்றன. இவ்வகைத் தாவரங்கள் நைட்டிரஜன் சத்துக் குறைந்த இடத்தில் வாழ்வதால் அதை ஈடு செய்யப் புரத உணவிலுள்ள நைட்ரஜனை எடுத்துக் கொள்கின்றன. பூச்சியுண்ணும் தாவரங்கள் ஆறு குடும்பங்களைச் சேர்ந்தவை. 15 இனங்களில் 495 வகை பல இடங்களில் காணப்படுகின்றன. டிராசிரா வகையினம். சதுப்பான, இளகிய மண் ணில் வளரும். இதன் இலைகள் தேக்கரண்டி வடி வத்தில் இருக்கும். இவற்றில் சுரப்பி நீட்சிகள் (tentacles) உண்டு, தண்டுகள் சிறியவை. இலைகள் தண்டைச் சுற்றிக் கொத்தாகத் தோன்றும். சுரப்பி நீட்சிகள் சுரக்கும் வழவழப்பான நுண்துளிகள் சூரிய ஒளியில் பிரகாசிக்கும். ஏதாவது ஒரு பூக்சி இலையில் உட்கார்ந்தால் நடுவில் உள்ள சுரப்பி நீட்சிகள் சுற்றியுள்ள சுரப்பி நீட்சிகளுக்குச் செய்தி சொல்ல அவை அதன் மேல் பரவி அழுத்திக் கொண்டு அதையே உணவாக உறிஞ்சி உட்கொள் ளும். மீண்டும் சுரப்பி நீட்சிகள் முன்போல நிமிர்ந்து அடுத்த பூச்சியின் வரவை எதிர்பார்த்துக் காத்து நிற்கும். நெபந்தஸ் அல்லது ஜாடிச் செடி. ஆஸ்திரேலியா. மடகாஸ்கர், நீயூசினி, போர்னியோ முதலிய டங களில் மிகுதியாகக் காணப்படுகிறது. இதன் இலை யின் நடுநரம்பு பற்றுக் கம்பியாக ஒரு ஜாடியைத் தாங்கி நிற்கிறது. இது 5 முதல் 15 செ. மீ. அகலமும் 24-30 செ.மீ. நீளமும் உள்ளது. இந்த ஜாடியின் மேல் ஓர் லை போன்ற மூடி உள்ளது. ஜாடியின் இலைக்காம்பு காம்பிலை gaz சிற்றிலை காம் பிலை (இலைக்காம்பு) இவைக்காம்பு காம்பிலையாக மாறுதல் (சிறு செடியில்). காம்பிலைகள் (முதிர் செடியில்