பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/856

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

832 இலைகளின்‌ வடிவம்‌

832 இலைகளின் வடிவம் ஜாடி உள்ளே செரிமான நொதிகள் உள்ளன. யின் வாய்ப்புறத்து அழகாலும்,மணத்தாலும் கவரப் பட்டு ஜாடியின் மேல் அமரும் பூச்சி வழுக்கி உள்ளே விழுந்துவிடும். பின்னர் உள்ளிருக்கும் முள்களால் குத்தப்பட்டு மயங்கி உள்ளே இருக்கும் நச்சு நீரில் விழும். ஜாடியின் அடியில் புரதப் பொருள்களைச் செய்யும் நச்சு நீர் உண்டாகிறது என்பர். ஆதலால் இப்பூச்சிகள் இந்நீரில் கரைந்து செடிக்கு உணவா கின்றன. இவற்றைப் போன்றே சராசீனியா, சீனியா, உட்ரி குலோரியா, டையோனியா முதலிய தாவரங்களும் பூச்சியுண்ணும் தாவரங்களாகும். மேலும் காங்கோ நாட்டில் உள்ள பழங்குடியினர் இக்காலத்திலும் கூட நரபலிப் பழக்கமுடையவர்களாக இருக் கின்றனர். தங்கள் நாட்டில் காலாகாலங்களில் மழை பெய்யவேண்டும் என வேண்டிக்கொண்டு ஆண்டே ரியா ஜைகஸ் (antaria gigas) என்னும் செடியில் இளம் கன்னிகளை எறிந்து விடுவார்கள். இச்செடி அக்கன்னிகளை விழுங்கி உள்ளே இருக்கும் நச்சு நீரில் கரைத்து உணவாக்கிக் கொள்ளும். பா.அண்ணாதுரை நூலோதி. Christensen, C. M.; Root, Stem and Leaves, The Book of Popular Science,, Grolier Inc.. New York, 1968; Puller, H. J., and Carothers. Z.B., The Plant World, Holt, Rine Hart & Winston, Inc., New York, 1963; H. C., Gangulee, K. S. Das and C. Datta, College Botany, New Control Book Agency, Calcutta, 1982; Sinnot, E, W., & Wilson, K.S.. Botany Principles and Problems, McGraw Hill Book Inc., New York, 1963. இலைகளின் வடிவம் தாவரங்களின் வாழ்க்கைக்கு இலைகள் இன்றியமை யாதன. இலையின் வடிவ அமைப்பு (leaf shape) தாவரங்களுக்கேற்ப, பலவாறு அமைந்திருக்கும். இலைகளின் குறிப்பிடத்தக்க பணி ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரித்தல் ஆகும். இலைகளின் வழி யாக நீராவிப்போக்கும் நடைபெறுகிறது. தாவரங் களின் மற்ற உறுப்புகளைப் போலவே இலைகளி லும் சுவாசித்தல் நடைபெறுகிறது. இவ்வேலை களுக்குத் தக்கவாறு இலைகளின் புற உருவ அமைப்பும் உள்ளமைப்பும் அமைந்துள்ளன. இலைகளின் வடிவங் களைத் தாவரவியல் வல்லுநர்கள் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தியுள்ளனர். ஊசி வடிவம் (acicular shape). இலைகள் நீண்டும் குறுகிய குறுக்களவைக் கொண்டும் ஊசிபோல் அமைந்திருக்கும். (எ. கா.) பைன். நீண்ட வடிவமைப்பு (linear shape), இலைப்பரப் பின் அகலத்தைவிட நீளம் அதிகமானது. (எ.கா) புல். ஈட்டி வடிவம் (lanceolate) இலைப்பரப்பின் தொடக்கம் அகலமாகவும் பிறகு குறைந்தும் நுனிப்பகுதி கூர்மையாகவும் இருக்கும். அகன்ற அடிப்பாகம் காம்பிற்கு அருகில் ஈட்டியின் தோற்றத் தைத் தரும். (எ. கா.) செவ்வரளி, மூங்கில், நெட்டி லிங்கம். நீள் ஈட்டி வடிவம் (oblanceolate). இது தலை கீழான ஈட்டி வடிவமானது. இலையின் நுனிப்பகுதி அகலமாகவும் தொடக்கம் கூர்மையாகவும் இருக்கும். (எ.கா) பிரம்பு. முட்டை வடிவம் (ovate shape). இலையின் தொடக்கம் அகலமாயும் நுனி அகலம் சிறிது குறைந்து முட்டை வடிவமாகவும் காணப்படும். (எ.கா) ஆல் லை. நீள் வட்ட வடிவம் (obvate shape) இது தலைகீழ் முட்டை வடிவமாகும். அகன்ற அடிப்பாகம் முனை யில் காணப்படும். (எ.கா.) பாதாம், தேக்கு. நீள் முட்டை வடிவம் (eliptic shape). இலைப்பரப் பின் மையப்பகுதி அகலமாகவும் தொடக்கமும் இலை வடிவம் 1.ஊசி வடிவம் (பைன்). 2. நீள் வடிவம் (புல்). 3. ஈட்டி வடிவம் (செவ்வரளி), 4. நீள்சதுரவடிவம் (வாழை). 5. சாய் வடிவம் (பெகோனியா).6. முட்டை வடிவம் (ஆல்). 7. இதய வடிவம் (பூவரசு).8. அம்புநுளி வடிவம் 1 2 (சேஜிட்டேரியா). 9. விரி அம்பு நுனிவடிவம் (டைஃபோனியம்).