பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/857

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலைச்சுருட்டுப்‌ புழுக்கள்‌ 833

10 12 13 15 17 10. 12, இலைச்சுருட்டுப் புழுக்கள் 833 லைவடிவம் சிறுநீரக வடிவம் (வல்லாரை).11. பிறை வடிவம் (வேம்பு). நீள்வட்டவடிவம் (பலா) 13. நீள் இதய 14 வடிவம் (மந்தாரை). பாளை வடிவம் (டிராசிரா). 15. ஆப்பு வடிவம் (ஆகாயத்தாமரை), 16. நீள்முட்டை வடிவம் (கொய்யா). 17. வட்டவடிவம் (தாமரை). நுனியும் சிறிது அகலம் குறைந்து நீள வட்டமாகவும் அமைந்திருக்கும். (எ. கா.) கொய்யா, பலா, நித்திய கல்யாணி. நீள் சதுர வடிவம் (oblong shape). இலையின் அடிப்பரப்பு முதல் நுனி வரை ஒரே சீரான அகலம் உடையது. அகலத்தை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு நீளமுடையது. (எ.கா.) வாழை, இட்டலிப் பூ. இதய வடிவம் (cardate shape). இங்கு இலைப் பரப்பு இதய வடிவுடன் இருக்கும். (எ.கா.) பூவரசு, அரசு. நீள் இதய வடிவம் (obcardate shape). இலைப் பரப்பு தலை கீழான இதய வடிவானது (எ.கா.) மந்தாரை. சிறுநீரக வடிவம் (reniform). இலைப்பரப்பு, சிறு நீரகம் போல் அடிப்பக்கத்தில் அழுத்தப்பட்டிருக்கும் அவரை விதை வடிவிலிருக்கும். (எ. கா.) வல்லாரை. உருண்டை வடிவம் (orbicular shape'. இலைப் பரப்பு உருண்டை வடிவமானது. (எ.கா,) தாமரை. இலையின் ஆப்பு வடிவம். (cuniate shape) தொடக்கம் குறுகலாகவும், நுனி அகலமாகவும் அமைந்திருக்கும்.(எ.கா.) ஆகாயத் தாமரை, சிடா. முக்கோண வடிவம். (deltoid shape). இலை முக்கோண வடிவம் அல்லது அகன்ற ஆப்பு வடிவத்தி லிருக்கும். (எ. கா.) கல்யாண முருங்கை. பானை வடிவம். (spathulate shape). இலைகள் கரண்டி வடிவத்தில் பாளை போன்ற தோற்றத்தி லிருக்கும். (எ.கா.) டிராசிரா அரிவாள் வடிவம் (falcate shape). இலைகள் வளைந்து அரிவாள் போன்ற தோற்றத்தில் காணப் படும். (எ.கா) வேம்பு, யூகலிப்ட்டஸ். அ.க.4-53 சாய் வடிவம் (oblique shape) பொதுவாக இலை யின் நடு நரம்பு இலைப்பரப்பை ஒத்த இரண்டு பகுதிகளாகப் பிரிக்கும். ஆனால் சாய்ந்த வடிவ லை நடு நரம்பிற்கு ஒரு புறம் அகலமான இலைப் பரப்பும் மறுபுறம் அகலம் குறைந்த இலைப்பரப்பும் இருக்கும். (எ. கா.) பெகோனியா. அம்பு நுனி வடிவம் (sagitate shape). இலைப் பரப்பின் தொடக்கத்தில் உள்ள இரு மடல்களும் இலையடிப்பகுதியை நோக்கிக் குறுங்கோணத்தில் அமைந்திருக்கும். (எ. கா.) சேம்பு, சேஜிட்டேரியா. விரி அம்பு நுனி வடிவம் (hastate shape), இதுவும் அம்பு நுனி வடிவுடையது. இலையின் தொடக்கத்தில் உள்ள இரு மடல்களும் (leaf lobes) வெளிநோக்கி விரிகோணத்தில் அமைந்திருக்கும். (எ. கா.) டைஃ போனியம். . பா.அண்ணாதுரை இரா. தா நூலோதி. இராமமூர்த்தி, கே.கே., தமிழ்நாட்டுத் தாவரங்கள், தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1978; பாலசந்திர கணேசன், கே.ஆர். தாவர புற அமைப்பியல், தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை. 1976; Parker S. P. Leaf Shape, McGraw-Hill Book Co., New York, 1982. இலைச்சுருட்டுப் புழுக்கள்

வெப்ப மண்டல நாடுகளில் பைராஸ்ட்டிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த பல இலைச்சுருட்டுப் புழுக்கள் பயிர்களைத் தாக்கிச் சேதம் விளைவிக்கின்றன.