பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/858

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

834 இலைச்சுருட்டுப்‌ புழுக்கள்‌

834 இலைச்சுருட்டுப் புழுக்கள் சார்ந்த குடும்பத்தைச் பல இலைச் சுருட்டுப் புழுக்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. இவை பொதுவாக, தங்கள் உமிழ்நீரிலிருந்து உண்டாகும் இழைகளைக் கொண்டு முதலில் இலைகளின் ஓரங் களை இணைத்து அவற்றைச் சுருட்டுகின்றன. பின் னர் சுருண்ட இலைகளுக்குள் இருந்துகொண்டு இப் புழுக்கள் இலைப் பச்சையத்தைச் சுரண்டி உண்ப தால் ஒளிச்சேர்க்கை தடைப்பட்டுப் பயிர்களின் விளைச்சல் மிகுதியாகக் குறையக்கூடும். தமிழ்நாட் டில் இத்தகைய இலைச்சுருட்டுப் புழுக்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது நெல் இலைச்சுருட் டுப் புழுவாகும். நெல் இலைச்சுருட்டுப் புழு. இதன் தாக்குதலுக் குட்பட்ட நெற்பயிரில் தொண்டைக் கதிர்ப் பருவத் திற்குப் பின் தோகைகள் காய்ந்தவாறு தோன்றும். குறிப்பாக நிழலடியில் இருக்கும் பகுதிகளில் இத்தகைய அறிகுறி முதலில் தோன்றும். தோகை நீள் போக்கில் சுருட்டப்பட்டு முதலில் வெண்மையாகத் தோன்றும். சுருட்டப்பட்ட தோகையைப் பிரித்துப் பார்த்தால் பச்சை நிறப் புழுவை உள்ளே பார்க்க லாம். தொட்டவுடன் அப்புழு குதித்துக் கீழே விழும். சிலசமயங்களில் சுருட்டப்பட்ட தோகைக்குள் புழு இல்லாமலும் இருக்கலாம். ஆனால் முன்பு இருந்த புழு விட்டுச் சென்ற மலக் கழிவுகள் அங்கு காணப் படும். பயிரில் பல இடங்களில் இந்தப் வின் தாக்குதலால் பச்சையம் சுரண்டப்பெற்றுத் தோகைகள் காய்ந்துவிடுமானால் ஒளிச்சேர்க்கை தடைப்பட்டுப் பயிரின் வளர்ச்சியும் விளைச்ச லும் குறையும். இலைச்சுருட்டுப் புழுவின் தாக்குதல் வானிலை மப்பும் மந்தாரமுமாக உள்ள புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் அதிக மாக இருக்கும். சிலசமயங்களில் இப்புழுக்களால் அறுபது விழுக்காட்டிற்கு மேலான நெற்பயிர் பாதிக் கப்படுகிறது. புழு நெபலோகிராசிஸ் மெடினாலிஸ் (Cnaphalocrosis medinalis) . இவ்வகை அந்திப்பூச்சி நெல் இலைச் சுருட்டுப் புழுவின் நிறையுயிரியாகும். பெண் அந்திப் பூச்சி கடுகில் கால்பாகம் அளவுள்ள முட்டைகளை இலைத்தோகைகளின் அடிப்பகுதியில் தனித்தனியே இடும். ஒவ்வொரு முட்டையிலிருந்தும் 4-7 நாள்களில் இளம் மஞ்சள் கலந்த பச்சை நிறப் புழு ஒன்று வெளிப்படும். முழு வளர்ச்சி பெற்ற புழு ஏறக்குறைய 2 செ.மீ. நீளமிருக்கும். இது 15 முதல் 27 நாள்க ளுக்குள் இலைத்தோகையின் பச்சையத்தைச் சுரண் டித் தின்று வாழ்கிறது. அவ்வாறு வாழும் போது இலை ஓரங்களைத் தனது உமிழ்நீரிலிருந்து உண் டாகும் இழைகளால் ஒன்று சேர்த்துச் சுருட்டி உள்ளே இருந்து கொண்டு பச்சையத்தைச் சுரண்டி உண்டு வாழ்கிறது. பின்னர் இலைச்சுருட்டுப் புழு கூட்டுப்புழுவாக மாறுகின்றது. கூட்டுப்புழுப் பருவம் 6-8 நாள்கள் நீடிக்கும். அதிலிருந்து வெளிவரும் அந்திப்பூச்சி பழுப்புக் கலந்த ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். அதன் முன் இறக்கைகளில் இருகோடு களும் பின்னி இறக்கைகளில் கோடும் ஒரு உள்ளன. தாக்கப்பட்ட பயிரின் தோகைகளைத் தட்டினால் அந்திப்பூச்சிகள் பலவாகப் பறப்பதைப் பார்க்கலாம். அந்திப்பூச்சி விளக்கு வெளிச்சத்தால் கவரப்படும். இந்த இலைச்சுருட்டுப் புழு பல புல் வகைகளிலும், பயிரிடப்படும் சோளம், மக்காச்சோளம், கோதுமை ஆகியவற்றிலும் வாழ்ந்து இனப்பெருக்கம் செய்யும். பகை நெல் இலைச்சுருட்டுப் புழுக்களின் வாழ்க்கைச் சுற்றில் காணப்படும் முட்டை, புழு, கூட்டுப்புழு ஆகிய மூன்று பருவங்களும் பல குளவி இனங்களால் தாக்கப்படுகின்றன. இந்தப் உயிரினங்கள் இயற்கையில் நெல் வயல்களிலுள்ள இலைச்சுருட்டுப் புழுக்களின் வாழ்க்கைப் பருவ நிலைகளில் அவற் றைத் தாக்கி அழித்துப் பயிருக்கு ஏற்படும் சேதத் தைக் குறைத்து உழவர்களுக்கு நன்மை பயக்கின்றன. நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழுவின் தாக்குதல் நெற்பயிர் தூர்கட்டி நன்கு வளரும் பருவத்தில் 4.5 விழுக்காடு தோகைகளும், பூக்கும் பருவத்தில் 5.6 விழுக்காடு தோகைகளும் இலைச்சுருட்டுப் புழு வினால் தாக்கப்பட்டால் அது பொருளாதார இழப்பு நிலையாகக் கருதப்படுகிறது. நெற்பயிரில் வாரம் ஒரு முறை பூச்சிக் கண்காணிப்புப் பணி மேற்கொண்டு பயிரின் மாதிரிகளைச் சோதித்துத் தேவைப்பட்டால் பொருளாதார இழப்பு நிலையைத் தாண்டாதவாறு, பயிர்க்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.