62 இணைப்புக்கெழு
62 இணைப்புக்கெழு பற்றிய கருத்தை வெளியிட்டார். இதனால் நுண் ணோக்கியைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. 1853 இல் ஜே.எல். ரிடல் (J. L. Riddell) தாம் கண்டு பிடித்த இணைப்பார்வை நுண்ணோக்கியைப் பற்றி உலகுக்கு அறிவித்தார். சில காலத்திற்குப் பிறகு எஃப்.எச். வென்ஹாம் (F. L. Wenham) என்பவர் ஒரு நுண்ணோக்கியை அமைத்தார். இது ரிடல் நுண் ணோக்கியைப் போன்றே இருந்தது. இதனைப் படம் 6 இல் காணலாம். அவர் பொருளருகு ஆடிக்கும் கண்ணருகு ஆடிக்கும் இடையில் பிரிட்டலின் அமைப் பைப் பயன்படுத்தினார். DDD அமைப்பால் வெளிவரும் கதிர்கள் கண்ணருகு ஆடி களுக்கு வரும் வழியில் தமது பாதையை விட்டு மாறி விடுகின்றன. அதனால் இடப்புறப் பொருளருகு லென்சிலிருந்து வெளிவரும் கதிர், வலக் கண்ணருகு லென்சிற்கும், வலப்புறப் பொருளருகு லென்சிலிருந்து வெளிவரும் கதிர் இடப்புறக் கண்ணருகு லென்சிற் கும் செல்கின்றன. இந்த இணைப்பார்வை நுண் ணோக்கியை ஒரு கண்பார்வை நுண்ணோக்கியாகப் பயன்படுத்த முடியாது. இந்த நுண்ணோக்கியில் எதிர் பலிக்கும் முப்பட்டகம் பயன்படுத்தப்பட்டுள் ளது. பொருளருகு ஆடிக்குப் பின்னால் அருகில் வைக்கப்படும்பொழுது, பொருளருகு ஆடியின் வலப் பாதியிலிருந்து வரும் கதிரை, நுண்ணோக்கியில் உள்ள இடக் கண்ணருகு ஆடிக்கு அனுப்பிவிடுகிறது. பொருளருகு ஆடியின் இடப்புறத்திலிருந்து வரும் கதிர் நேராக வலக் கண்ணருகு ஆடிக்குச் செல்வதை படம் 7 விளக்குகிறது. இரா. சேகரன் படம்6. ணைப்பார்வை நுண்ணோக்கி மாறுபட்ட இதன் காரணமாக ஏற்படும் விளைவை அவரால் தடுக்கமுடியவில்லை. 1860இல் மற்றுமொரு புதிய நுண்ணோக்கி கண்டுபிடிக்கப் பட்டது. இதில் ஒரே அச்சில் ஒளி விலக்கம் அடை யும் முப்பட்டகங்களைப் பயன்படுத்தினார். இந்த படம் 7. சமச்சீரற்ற இணைப்பார்வை நுண்ணோக்கியின் குழல் இணைப்புக்கெழு காண்க: இணைவுப்பட்டியல் இணைப்புகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எந்திர உறுப் புகளோ கட்டட உறுப்புகளோ இணையும் இடம் இணைப்பு (joint) அல்லது மூட்டு எனப்படுகிறது. காண்க, கட்டட இணைப்புகள். எந்திர இணைப்புகள் அல்லது மூட்டுகள் பல வகைகளில் செய்யப்படுகின்றன. இவற்றை நிலை யான மூட்டுகள், தற்காலிக மூட்டுகள் என இரு வகைப்படுத்தலாம். திருகு (screw), பற்றி (clamp) போன்றவை தற்காலிக மூட்டுகள். பற்றாசிடல் (brazing), பற்றவைத்தல் (welding), தரையில் அறை தல் (rivetting) என்பன நிலையான மூட்டுகள் ஆகும். கீழே வழக்கில் உள்ள பல்வேறு இணைப் புகளை உருவாக்கும் முறைகள் தரப்பட்டுள்ளன. திருகுமுறை. மரையாணியும் மரையும், எந் திரத் திருகும் மரையும், துளையிட்ட இடைவெளி களில் திருகிணைத்த திருகும், தண்டு அல்லது குழாய் களில் உள்ள மரையிட்ட பகுதிகளும், புரியுள்ள செருகமைப்புகளும், சுருள்கம்பிச் செருகுகளும், இயக் கும் திருகுகளும் இவ்வகை இணைப்புகளாகும். காண்க, மரையாணி; மரையாணி இணைப்பி; மரை: திருகு; திருகிணைப்பி; அடைவலயம்.