பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/866

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

842 இலைப்‌ பச்சை

842 இலைப் பச்சை பல அவற்றின் மேற்பரப்பில் ஏரியோல்கள் எனப்படும் சிறு புடைப்புகள் உண்டு, அவற்றில் முள்கள் கொத்தாக அமைந்திருக்கும். அவை கோண்மொட்டு இலைகளின் உருமாற்றங்களேயாகும். இவ்வித உரு மாற்றம் நீராவிப்போக்கைத் தடுப்பதோடல்லாமல் ஆடு மாடுகள் மேயாமலும் பாதுகாக்கின்றது. மொக்வென்பெக்கியா வகை (Muchlenbeckla spp). இது ஒரு தோட்ட அழகுச்செடி. இதன் தண்டு பச்சையாக நாடா போல் இருக்கும். க்ளேடோடு அல்லது கிளேடோபில் இவ்வகை உருமாற்றங்கள் இலைகள் போலவே காணப்படும். அஸ்பராகஸ் ராசிமோஸ் (Asparagus Face- mosus). இது தண்ணீர் விட்டான் கிழங்கு, கட மூலம், சதாவேரி என்றும் வழங்கப்படுகிறது. இது வறண்ட நிலங்களில் வாழ்வதற்கு ஏற்ற தக வமைவுகள் கொண்டது. இலைகள் உருமாறிய நிலை யில் இருக்கும். சிறப்புத்தண்டின் இலைகள் வளைந்த முள்களாகவும், பக்கத் துணைக் கிளை இலைகள் அஸ்பராகஸ் லெம்னா, உல்ஃபியா ஐரோப்பாவிலிருந்து புகுத்தப்பட்ட செடியாகும். இலைகள் போலவே இதன் கிளேடோட்டுகள் காணப்படும். லெம்னா, உல்ஃபியா, இவை இரண்டும் நீர் வாழ் தாவரங்களாகும். இவை பூக்கும் தாவரங்களிலேயே மிகச் சிறியவை. குளம், குட்டைகளில் மிகுதியாக மிதக்கக் கூடியவை. இவற்றின் உடலம் வட்டமான தட்டுப்போல 2 - 4 மி.மீ. குறுக்களவுடன் இருக் கும். பெரும்பாலானோர் இந்த உடல் பகுதியை க்ளேடோட்டாகக் கருதுகின்றனர். தி. ஸ்ரீகணேசன் ஊசி, செதில் இலைகளாகவும் மாறி நீராவிப்போக்கைக் குறைக்கின்றன. இவ்வுருமாறிய இலைகளின் கோணங் களிலிருந்து மூன்று பக்கங்களைக் கொண்ட, போன்ற பச்சையான கிளேடோட்டுகள் கற்றையாக இருப்பதைக் காணலாம். மூன்று முதல் பதினைந்து வரை உள்ள க்ளேடோடு கற்றை நுனி வரை சைம் அமைப்பில் இருக்கும். தாவரவியலார் கிளேடோட்டு களை உருமாறிய பூக்காம்பாகக் கருதக் காரணம். அவற்றின் அமைப்பும் சில சூழ்நிலைகளில் அவற்றின் நுனியில் மலட்டு மலர் மொட்டுகள் தோன்றுவது மேயாகும். ரஸ்கஸ் அகுலியேட்ஸ் ( Ruscus aculeatus). இலைப் பச்சை அனைத்துப் பசுந்தாவரங்களிலும் அமைந்து, ஒளிச் சேர்க்கையில் பெரும் பங்கு கொள்ளும் வண்ண மூலக்கூறு இலைப் பச்சை (chlorophyll) எனப்படு கிறது. புல்பூண்டுகளை உண்ணும் உயிரினங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை உண்டாக்கு வதே இம்மூலக்கூறின் சிறப்புப் பண்பாகும். ஒளிச் சேர்க்கை நடத்தும் அனைத்துச் செலகளிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலைப் பச்சை வகை கள் காணப்படும். இவ்விலைப் பச்சை மூலக்கூறு களைத் தவிர, துணை நிறமிகளான கரோடினாய்டு களும் ஃபைகோபிலின்க களும் பசும் செல்களில் உண்டு. ஒளிச்சேர்க்கை நடத்தும் பெரும்பாலான தாவர உறுப்புகள் பச்சையாக இருந்தாலும், சில பாசிகளும், பாக்டீரியாவும், பழுப்பு, சிவப்பு, ஊதா வண்ணங்களுடன் காணப்படுகின்றன. இதற்கு