பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/867

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலைப்‌ பச்சை 843

அவற்றின் துணை நிறமிகள் இலைப் பச்சையை மறைத்து விடுவதே காரணமாகும். இலைப்பச்சையில் பத்து வகை உண்டு. அவை, இலைப்பச்சை a,b,c,d,e, பாக்டீரியா இலைப் பச்சை a,b,c,d; குளோரோபியம் இலைப்பச்சை அல்லது பாக்டீரியோவிரிடின் இவற்றில் இலைப் பச்சை a, b மிகவும் குறிப்பிடத்தக்கவை. அனைத்து வகைத் தன்வாழ்விகளிலும் இலைப்பச்சையும், உயர் தாவரங்களில் aயும்,bயும் 2:1 என்ற விகிதத்தில் இருக்கும். இம்மூலக்கூறான இலைப்பச்சைக்குரிய ஆங்கிலப் பெயர் 1818 ஆம் ஆண்டு பெலிட்டர், கேவன்டவ் என்பவர்களால் சூட்டப்பட்டது. பசுந்தாவரங்களில் இலைப் பச்சைத் தொகுப்பு உண்டு என்பதை 1860- இல் ஃபரெமி கண்டுபிடித்தார். 1864-இல் ஸ்டோக்ஸ் அனைத்துப் பசுந்தாவரங்களிலும் இலைப் பச்சையும் கரோடினாய்டுகளும் உள்ளன என்ற உண்மையை ஆய்வுகளினால் வெளிப்படுத்தினார். ஸ்வெட் 1906 இல் எவ்வாறு இம்மூலக்கூறுகளைப் பிரித்தெடுக்க இயலும் என்பதை நிறுவினார். இலைப்பச்சையின் வேதிப் பண்புகளை வில்ஸ்டாட்டர் என்பார் உணர்த்தினார்; மேலும் இவர்தம் ஆய்வாளர்கள் இலைப் பச்சைக்கும் இரத்தத்தின் சிவப்புச் செல் களில் காணப்படும் ஹீம் மூலக் கூறுக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டுபிடித்தனர். இலைப் பச்சை 2, b முதலியவற்றின் வேதிவாய்ப்பாடு பின்வருமாறு இலைப் பச்சை 843 இலைப்பச்சை a- C,H,O,N,Mg - (நீலப் பச்சை நிறம்) 70 இலைப் பச்சை b - C5H7 ON,Mg- (எண் ணெய்ப் பச்சை நிறம்) இவற்றிலிருந்து இலைப்பச்சை b என்பது 3 இன் ஆக்சிஜனேற்ற நிலையைக் குறிப்பது தெரிய வரு கிறது. இம்மூலக்கூறின் ஒளி உறிஞ்சல் நிரல் (absorption spectrum) இரு உறிஞ்சல், உச்சங்களைப் பெற்றிருக் கும். ஒன்று நீல - ஊதா அலை வரிசையிலும் (429- 453 nm) மற்றொன்று சிவப்பு அலை வரிசையிலும் (645-663 nm) அமைந்திருக்கின்றன. இலைப் பச்சை என்பது ஒரு பெருமூலக்கூறு; அதில் மூன்று சிறப்புப் பகுதிகள் உள்ளன. நான்கு பைரோல் வளையங்கள் இணைந்த டெட்ராபைரோல் என்பது இம் மூலக்கூறின் தலைப் பகுதியான பார்ஃபைரினைக் குறிக்கிறது. ஃபைடால்வால் என்ற ஒரு நீண்ட ஆல்கஹால் வால் பார்ஃபைரின் தலையில் ஒரு குறிப்பிட்ட பைரோல் வளையத்துடன் இணைந்திருக்கும். பார்ஃபைரின் வளையத்திற்கு நடுவில் ஒரு மக்னீசியம் அணு காணப்படும். பொதுவாக இம் CH₂ CH3 CH 2 H . a H₂C H 3 CH3 IV N--Mg. II H2 H. Hz H₂C HC C-CH H. V 10 9 (CHz5 HỘ—CH (CH2) HC-CH3 (CH2); H,C CH, 9 III 5 CHa -CH2-CH3 லைப் பச்சை மூலக்கூறு a (CHON,Mg). ஃபைடால் வால் Mg பார் ஃபைரின் தலை NH பைரோல் வளையம்