பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/876

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

852 இலையுதிர்தல்‌

852 இலையுதிர்தல் வகைக் காடுகள் உள்ளன. இத்தகைய தட்ப வெப்பநிலை ஆண்டின் பல மாதங்களில் இருப்பதும் நைப்பீரம் நிலைத்திருப்பதும், ஒரிரண்டு மாதங்களே வறட்சி மாதங்களாக இருப்பதும் இக்காடுகள் அமைய அடிப்படையாக அமைகின்றன. எனவே இவை நைப்பீர இலையுதிர் காடுகள் என்றழைக்கப் படுகின்றன. இந்திய இலையுதிர் காடுகளின் மொத் தப் பரப்பில் ஏறக்குறைய நாற்பது விழுக்காடு இவ் வகையில் அடங்கும். இந்திய நைப்பீர இலையுதிர் காடுகள் வடக் கத்திய வெப்ப மண்டல நைப்பீர இலையுதிர் காடுகள், தெற்கத்திய வெப்ப மண்டல நைப்பீர இலையுதிர்காடுகள் என்றும், மேலும் இரு உட்பிரிவு களாகப் பிரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டு மொத்தக் காட்டுப்பரப்பில் ஏறத் தாழ ஐந்து விழுக்காடுகளில் நைப்பீர இலையுதிர் காடுகள் அமைந்துள்ளன. அவற்றில்தான் பயன் மிக்க தேக்கு மரங்கள் வளர்க்கப்படுகின்றன. மழைப் உலர் இலையுதிர் காடுகள். இவ்வகைக் காடுகளில் அனைத்து அடுக்குகளிலும், பெரும்பான்மையான தாவரங்கள் இலையுதிர் தன்மை கொண்டும், சிறு பான்மையானவை மாறாப் பசுமைத் தன்மையுட னும் இருக்கும். மேலும், இவை அமைந்துள்ள இடங் களில் ஆண்டிற்கு ஆறு மாதங்களுக்கு மேல் வறட் சியும், வெப்பநிலையும் (வேனிற்கால உயரளவு 48×) ஆண்டில் 1000-1500 மி.மீ. வரை பொழிவும் கொண்டு பெரும்பாலும் உலர்ந்த அல்லது வறண்ட சூழ்நிலையாகவே இருக்கும். ஆகவே, இவை உலர் இலையுதிர் காடுகள் எனவும், இந்தியாவில் இவை வெப்ப மண்டலப் பகுதிகளில் மட்டுமே அமைந்துள்ள காரணத்தால் வெப்ப மண்டல உலர் இலையுதிர் காடுகள் என்றும் குறிப் பிடப்படுகின்றன. இந்திய இலையுதிர் காடு களின் மொத்தப் பரப்பில் இவை ஏறத்தாழ அறுபது விழுக்காடு உள்ளன. தமிழ்நாட்டு மொத்தக் காட்டுப் பரப்பில் 35-40 விழுக்காடு உலர் இலை யுதிர் காடுகளாகும். ஏறக்குறைய நாற்பத்தைந்து வகை இரு விதை யிலைத் தாவரக் குடும்பங்களைச் சார்ந்த தாவர வகைகள் இலையுதிர் காடுகளில் காணப்பெறுகின் றன. இவற்றுள் இலெகுமினேசி எனும் பயறுவகைக் குடும்பத் தாவரங்களே மிகுதியாக இருக்கும். இவற்றை அடுத்துக் காம்பிரிட்டேசி, மீலியேசி, பிக்நோநியேசி,வெர்பனேசி, மால்வேசி, பர்சரேசி, அப்போசைவேசி, மோரேசி தாவரக் குடுபங்களைச் சேர்ந்த மரவகைகள் உயர் அடுக்கிலும், யூஃபோர் பியேசி, ரூட்டேசி, அனகார்டியேசி ஆகிய குடும்பத் தாவரங்கள் கீழ் அடுக்குகளிலும் காணப்படும். இவற்றுள் குறிப்பிடத் தகுந்த மரவகைகளாவன; நைப்பீர இலையுதிர் காடுகளில், மேல் அடுக்குத் தாவரங்களான ஆய்மா (Careya arborea), இருள் (Xylia xylocarpa) ஈட்டி (Dalbergia latifolia), சிலை வாகை (Albizzia odoratissimus) தேக்கு (Tectona grandis), நாவல் வகை (Eugenia spp) பூவத்தி (Schcileichera oleosa), மஞ்சள் கடம்பு (Adina. cordifolia) மருது வகை (Terminalia spp), வெக்காலி (Anogeissus latifolia) வெண்தேக்கு (Lagerstroemea lanceolata), வேங்கை Paterocarpus marsupium) தடுசு (Grewia tilaefolla) மூங்கில் வகை முதலியன குறிப்பிடத்தக்கவை. கீழ் அடுக்கு. பெரும்பாலும், மாறாப் பசுமைத் தாவர வகை களைக் கொண்டதாயிருக்கும். அவற்றின் பட்டியல் மிக விரிவானது. உலர் இலையுதிர் காடுகளில் ஆச்சா (Harwickia binata) ஆத்தி வகை (Bauhinia spp) செந்தணக்கு (sterculia urenes). சாரப்பருப்பு (Buchanania latifolia), தேக்கு (Tectona grandis), சோம்பு (Soymida febrifuga) புரசு (Chloroxylon swietenia), மருது வகை வெக்காலி கல்மூங்கில் (Dendrocalamus spp) ஆகியவை முதன்மையானவை. இக்காடுகளிலுள்ள தரைத் தாவரங்களில் இலைத் தாவரங்களைக் காட்டிலும், புல் வகை மிகுந்து காணப்படுவது குறிப்பிடத்தக்க சிறப்பியல்பாகும். இலையுதிர்தல் ச.பாலகதிரேசன் இது மரங்களில் இயல்பாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சி ஆகும். முதுமை காரணமாகவோ, பருவ கால மாற்றங்களுக்கேற்பவோ சூழ்நிலை வேறு பாடுகளினாலோ இலைகள் உதிர்கின்றன. இலைக் காம்புகளின் அடிப்பாகத்தில் விலகற் பகுதி உருவாவ தால் இலையுதிர்தல் ஏற்படுகிறது. இந்த விலகற் பகுதி தனிப்பட்ட பாரன்கைமா செல்களாலானது. செல் சுவர்களை வலுவிழக்கச் செய்யும் பெக்டினேஸ் செல்லுலேஸ் ஆகிய நொதிகள் இப்பகுதியில் இது உண்டாகின்றன. இவை செல் சுவர்களின் மையப் பகுதியினைக் கரைத்து விடுகின்றன். வளர்பருவத்தின் இறுதியில் நிகழ்கிறது. செல் சுவர் கள் வலுவிழப்பதன் விளைவாக விலகல் பகுதியில் செல் சிதைவு ஏற்படுகிறது. நீரையும் உணவுப் பொருள்களையும் கூட த்தும் காற்றுத் திசுக்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டு அவை பசை போன்ற பொருள்களால் அடைபட்டுப் போகின்றன. இலை யுதிர்வதற்கு முன்னரே அதிலிருந்து நைட்ரஜனும், மற்ற கனிமப் பொருள்களும் கிளைகளுக்கு மிகுந்த அளவில் மீண்டும் கொண்டு சேர்க்கப்படுகின்றன. குளிர் காலத்தில் இக்கனிமப் பொருள்கள் தண்டு