பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/878

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

854 இலையுருத்தோற்றம்‌

854 இலையுருத்தோற்றம் படுத்தப்பட்டன. தற்போது அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இலையுதிர்த் திகள் வேளாண்மையில் பயன்படுத்தப்படு கின்றன. பயன்கள். இலையுதிர்த்திகளைத் தெளிப்பதால் இலைகள் ஒரே சமயத்தில் உதிர்வதால் பருத்தி போன்ற பயிர்களில் ஒரே சமயத்தில் கருவிகளைக் கொண்டு அறுவடை செய்ய முடிகின்றது. இலை களை உதிர்ப்பதால் காய்கள் மிக விரைவில் முற்றி விடுகின்றன. இலையுதிர்த்திகளைப் பயன் படுத்துவதால் பழம், காய், விதை ஆகியவற்றின் தரம் உயர்கின்றது. பயிர்களின் பருவம் குறைக்கப் படுவதால் ஓர் ஆண்டில் இரண்டு. அல்லது மூன்று முறை பயிரிட முடிகின்றது. உதிர்ந்த இலைகள் மண்ணில் விழுந்து மட்கி நிலத்தை வளப்படுத்து கின்றன. இலையுதிர்த்திகள். இலைகளை உதிர்ப்பதற்குப் பயன்படும் வேதிப் பொருள்கள் இலையுதிர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன. தற்போது வேளாண் மையில் மக்னீசியம் குளோரேட், சோடியம், குளோ ரேட், சோடியம் குளோரோ அசெட்டேட், ட்ரை குளோரோ அசெட்டிக் அமிலம், அம்மோனியா, அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம் அயோ டைடு, எத்திலின், கிளைப்போசேட் டைக்வாட், பாராக்வாட், ஆர்சனிக் அமிலம், அமிட்ரின், வளர்ச்சித் தடுப்பான் எஸ். எ.டி. எச். (SADH Succinic Acid Dimethyl Hydrazide) போன்ற இலை யுதிர்த்திகள் பயன்படுத்தப் படுகின்றன. பயிர்களில் இலையுதிர்த்திகள். பல்வேறு காரணங் களுக்காகப் பற்பல பயிர்களில் இலையுதிர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது பருத்தியில், பாராக்வாட்டும், ஆர் செனிக் அமிலமும் பயன்படுத்தப்படுவதால் முற்றிய காய்களைத் தவிர வளரும் காய்களும் முற்றிவிடுவ தால், காய்கள் ஒரே சமயத்தில் வெடித்துவிடு கின்றன. இதனால் இலைகள் உதிர்ந்துவிடுவதால், பருத்தியை ஒரே சமயத்தில் அறுவடை செய்யவும் மேலும் பருத்தியின் தரம் குறையாமல் இருக்கவும் இது உதவுகின்றது. சோயாமொச்சைப் பயிரில் கிளைப்போசேட் தெளிப்பதால் அறுவடைப்பருவம் ஒரு வாரம் குறைகின்றது. நெற் பயிரில் டைக்வாட் தெளிப்பதால், இலைகளில் பச்சையம் குறைந்து மணிகள் விரைவில் முற்றிவிடுகின்றன. இதனால் மணிகளின் ஈரப்பதத்தைக் குறைத்து விதைகளின் தரத்தை உயர்த்த முடிகின்றது. உருளைக் கிழங்குப் பயிரில் எத்திலின் தெளிப்பதால் இலைகள்முற்ற கிழங்குகளை மிக விரைவில் அறுவடை செய்ய முடியும். சோளத்தில் மணிகள் முதிர்ச்சியடைய கிளைப்போசேட் பயன்படுத்தப்படுகின்றது. கரும்புப் பயிரில் பாராக்வாட் தெளிப்பதால், இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடுகின்றன. இதனால் கரும்பின் தரம் உயர்ந்து, இனிப்புச் சத்தும் கூடுதலா கின்றது. காடுகளில் நடப்படும் நாற்றுகளின் உயரத்தையும் வளர்ச்சியையும் குறைக்க இலை யுதிர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன. பொட்டா சியம் அயோடைடு 0.6 விழுக்காடு தெளிப்பதால் இலைகள் உதிர்கின்றன என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. காட்டில் வளர்ந்த மரங்களின் மேல் இலையுதிர்த்திகளைத் தெளிப்பதால், இலைகள் உதிர்ந்து, மரங்களை எளிதில் வெட்ட முடிகின்றது. கோ. பாலகிருட்டிணன் நூலோதி. Palevitch, D. Defolation of snap bean with pre harvest treatments of 2-chloro ethylphospho- nic acid., Horticultural Science 1970; Larsen F. E., Promotion of leaf abscission of deciduous nursery stock with 2-chloro ethyl phosphonic acid. Journal of America Society of Horticultural Science. 1970; Nickle, L. G., Plant Growth Regulatars Agricultural uses, Springer-verlage, New York, 1982. இலையுருத்தோற்றம் வேறுபட்ட பருவ காலங்களில் இலையில் மாறுபட்ட தோற்றமே இலையுருத் தோற்றம் (phyllomorphy) ஆகும். இது ஃபில்லோடி (phyllody) என்றும் குறிப் பிடப்படுகிறது. சூழ் ஏதாவது ஒரு தாவரத்தை மிகவும் ஏற்ற நிலையில் வளர்க்கும்போது அதிக நீரும், சத்துப் பொருள்களும் கொடுப்பதால் அதன் வளர்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இச்சூழ்நிலையில் தாவரத்தின் உடற் பகுதிகள் நன்கு வளர்ச்சி அடை கின்றன. பூக்களோ, காய்களோ உண்டாவதில்லை. பூக்கள் தோன்றினாலும் அவற்றிற்குரிய வண் ணத்தை அவை இழக்கின்றன. மலரின் உறுப்புகள் பசுமை நிறம் அடைகின்றன. இவ்விதமாக அல்லிகள், மகரந்தத் தாள்கள் முதலியவை பசுமையான இலை போல மாறுவதையே இலையுருத் தோற்றம் என்பர். தாவரங்கள் நோய்வாய்ப்படும் இத்தகைய இலையுரு மாற்றத்தையும் இலையுருத் தோற்றம் எனக் கொள் ளலாம். மலரைப் பொதுவாக உருமாறிய, குறை வளர்ச்சி பெற்ற சிறு கிளையாகக் கருதுவதுண்டு. அதனால் மலரில் காணப்படும் உறுப்புகளான புல்லி, அல்லி, மகரந்தத்தாள் ஆகியவற்றை இலையின் உருமாற்றமாகக் கொள்வதுண்டு. அதனால் சில சூழ்நிலையில் மலரின் உறுப்புகளான புல்லி, அல்லி, மகரந்தத் தாள்கள் இலைகளைப் போல முன்