856 இவ்வாயாத்தீவு
856 இவ்வாயாத்தீவு காணப்படும். அவற்றின் அவற்றின் இலைக்காம்பு, இலைக்காம்பு, பக்கக் காம்புகளில் சிற்றிலைகள் உள்ளன. அதே கிளையில் அடுத்தடுத்துக் காணப்படும் மற்ற இலைகளில் இலைக்காம்புப் பகுதிகள் படிப்படியாகத் தட்டை யாகவும், அகலமாகவும் மாற்றம் அடைவதைக் காணலாம். அதே சமயத்தில் சிற்றிலைகள் எண்ணிக்கையில் குறைந்து, முடிவில் இல்லாமலே போகும். அதாவது எண்ணிலடங்காச் சிற்றிலை களைக் கொண்ட கூட்டிலை நாளடைவில் பாதக மான பருவ நிலையில் சிற்றிலைகளே அற்ற தனி யிலைகளைப் போலக் காணப்படும். கூட்டிலையின் இலைக்காம்பு தட்டையாக இலை போல உருமாறி இலையின் பணியைச் செய்யும் நிலையை ஃபில்லோடு (காம்பிலை) எனத் தாவர வியல் வல்லுநர் கூறுவர். கூட்டிலை நிலையில் தாவ ரங்கள் நீராவிப் போக்கு மூலம் அதிக அளவில் நீரை இழக்கலாம். இவ்விதமான நீராவிப்போக்கைத் தடுக்கச் சிற்றிலைகள் அற்ற நிலை ஏற்படுகின்றது. ஆகையால் இலையின் முக்கிய பணியான ஒளிச் சேர்க்கை பாதிக்கப்படுவதால் சிற்றிலைகளின் தொழிலை இலைக்காம்பு செய்ய இலையுருத் தோற் றம் உதவுகின்றது. வறண்டநிலத் தாவரங்களான அக்கேஷியா சிற்றினங்கள், பார்க்கின் சோனியா முதலிய தாவரங்களில் காம்பிலை நிலையைக் காண லாம். இலைகளின் உருவிற்கும், ஊட்டத்திற்கும் நேர் முகத் தொடர்பு உண்டு எனச் சில தாவர வல்லுநர் கள் கூறுவதுண்டு. பெர்க் டால்ட் ஆஸ்திரேலியா வின் அக்கேஷியா இனங்களில் பல ஆய்வுகளை நடத்தியுள்ளார். இத்தாவரத்தின் நாற்றுகளில் கூட்டிலைகளும், முதிர்ந்த தாவரத்தில் தனியிலைகள் போன்ற காம்பிலைகளும் அமைந்திருக்கும். சூழ்நிலை யில் தக்க மாறுபாடுகளை ஏற்படுத்தினால் முதிர்ந்த தனியிலை போன்ற காம்பிலைகளைக் கூட்டிலைக ளாக்கலாம் என நிறுவியுள்ளார். தாவரங்கள் அதிக நிழலில், அதாவது மூன்று விழுக்காடு முழுச் சூரிய ஒளியில் வளர்க்கப்படும்போது மேற்கூறிய பின் உருமாற்றம் ஏற்படுகிறது. இதற்கு அவர் கூறும் காரணம் நாற்று நிலையில் அக்கேஷியா தாவரங் களில் கார்போஹைட்ரேட் குறையும் சூழ்நிலை ஏற்படுகிறது. இவ்வித நாற்றுக்கு அதிகமான சூரிய ஒளியும், கார்பன் டைஆக்சைடு வளிமமும் தருவதால், இரட்டித்த சிறகிலைகள் தோன்றாமல் தொடக்க நிலையிலேயே காம்பிலைகள் தோன்று வதைக் காணலாம். இந்த ஊட்ட இலையுருமாற்ற மான நேர் தொடர்பை அனைவரும் ஒப்புக்கொள்ள தில்லை. பருவகால மாற்றத்தினால் இலையின் உருவில் ஏற்படும் மாற்றத்தைத் தக்க எடுத்துக்காட்டுகளுடன் தாவர வல்லுநர்கள் விளக்கியுள்ளார்கள். வளர்ச்சி யின் போது ஏற்படும் பல சிக்கலான இடையூறு களால் இலை வளர்ச்சியின் நடுநிலையானது பாதிக் கப்பட்டு, அதுவே இலை உருத்தோற்றத்திற்குக் காரணமாகின்றது. இலையுதிர் காலத்தில் இலைகள் வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருப்பதால் இவை தடைப்பட்ட வளர்ச்சியுடன் காணப்படும். முழு வளர்ச்சி அடையாத இலைகளே தண்டில் அதிக மாகக் காணப்படும். வசந்த காலம் தொடங்கியவுடன், தடைப்பட்ட வளர்ச்சி மீண்டும் மாறுபட்ட பிளாஸ்ட்டோகுரோன் அமைப்பில் நடைபெறத் தொடங்குவதால், இலை களின் உருவம், அமைப்பு ஆகிய இரண்டுமே மாறு படுகின்றன. தாவரத்தைச் சூழ்ந்த வெப்பநிலை இந்த பிளாஸ்ட்டோகுரோன் மாற்றத்திற்குக் காரண மாகும் என ஆர்னி தமது ஆய்வின் மூலம் மெய்ப் பித்துள்ளார். உகந்த பருவ நிலையில் 10-20 நாள் கள் இடைவெளியில் தோன்றும் புது இலைகள், பாதகமான பருவத்தில் 60-70 பிளாஸ்ட்டோகுரோன் இடை வெளியில் தோன்றுகின்றன. கோஸ்லோ விஸ்கி கிளான்சன் ஆகிய அறிஞர்கள் இளவேனிற் கால இலையுதிர் கால இலைகள் தங்கள் கார்போ ஹைட் ரேட் ஊட்டத்தில் வேறுபாடு காட்டுவதே அவற் றின் உருமாற்றத்திற்குக் காரணமாகும் எனக் குறிப் பிடுகின்றனர். தி.ஸ்ரீ. கணேசன் நூலோதி. McLean, R.C. and Ivimey Cook. Test Book of Theoretical Botany, Longmen Group Ltd., London., 1951; Rao, K.N. and K.V. Krishna- moorthy, Angiosperms, S. Viswanathan Pvt. Ltd., Madras. 1976. இவ்வாயாத்தீவு தென்கிழக்குக் கிரீசில் உள்ள இவ்வாயாத்தீவு (Evvoia island) கிரேக்கத்தின் பெரும்பரப்பிலுள்ள போயிட் டியாவிலிருந்தும் அட்டிக்காவிலிருந்தும் எவ்ரிப்பாஸ் நீர்ச்சந்தியால் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாயா, வளமுடைய பள்ளத்தாக்குகளையுடைய மலைகளை கொண்டுள்ளது. இத்தீவின் பரப்பளவு 3,800 சதுர கிலோ மீட்டர். செம்மறி ஆடு, ஆடு முதலிய கால் நடைகளை வளர்த்தலும், ஆலிவ், திராட்சை, கோதுமை ஆகியவற்றைப் பயிரிடுதலும் இங்குள்ள முக்கிய தொழில்களாகும். இந்தத் தீவில் மேக்னசைட், லிக்னைட் சுரங்கங்கள் காணப்படுகின்றன. இங்கு பளிங்குக் கல் வெட்டி எடுக்கப்படுகிறது. ம்.அ.மோ.