பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/886

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

862 இழை அளவுகள்‌

862 இழை அளவுகள் நீளத்தின் பொருட்டு அமைக்கப்படும் எந்திரங்களில் இவை உகந்தனவாக இரா, சான்றாக, பருத்தியின் நீளத்தைக் கணக்கிட மாற்று முறையொன்று கையாளப்படுகிறது. இழையின் நீளத்தை அளக்கத் தொகுப்பு நிகழ்வெண் விளக்கப்படம் (cumulative frequency diagram) அல்லது பரவல் வளைவு (distri- bution curve) ஆகியவற்றைக் கொண்டு கட்ட வரை படம் ஒன்று வரைந்து அதன் மூலம் இழையின் நீளம் அளக்கப்படுகிறது. இவற்றில் நிகழ்வெண் பர வல் வளைவு (frequency distribution curve) முறை அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. நிகழ்வெண் பரவலின் செவ்வக அலைவெண் படம் வரையும் போது நிகழ்வெண் பரவல் சமச்சீரில்லாமல் இருக் கும். இதை ஈடுசெய்ய நிகழ்வெண்ணை விழுக் காடாக மாற்றிப்பயன்படுத்த வேண்டும். கட்ட வரைபடம் வரையும்போது நிகழ்வெண் விழுக் காட்டை ஆயக்குத்திலும், பிரிவு நீளத்தைக் கிடை அச்சிலும் கொண்டு வரைய வேண்டும். பயன் எடைப் எடைப்பரவல். நிகழ்வெண் பரவலில் படுத்தப்படும் அதே முறையைக் கொண்டு பரவலைக் (weight distribution) கணக்கிடலாம். இழையின் எடை. அலகு நீளம் ஹெச் என்பது மைக்ரோகிராம்/அங்குலம் என்ற அளவால் குறிக்கப் படுகிறது. இதிலிருந்து தொகுப்பு நிகழ்வெண் விளக்கப்படம் வரையப்படுகிறது. இங்கு பிரிவு நீளம் ஆயக்குத்திலும், தொகுப்பு விழுக்காடு கிடை அச்சிலும் குறிக்கப்படுகின்றன. இம்முறை, இழையின் எடை அலகு நீளம் என் னும் வாய்பாடு எல்லா இழையின் நீளத்திற்கும் சம மாக இருப்பின் பயன்படுகிறது. காட்டாக, கம்பளி யில், இழையின் எடை/அலகு நீளம் இழையின் நீளத் தைக் கொண்டு வேறுபடுகிறது. இங்கு பிரிவு எடை என்பது பிரிவு நீளம், பிரிவு நிகழ்வெண், இழையின் எடை/அலகு நீளம் ஆகியவற்றின் பெருக்கற்பல னாகும். நீளப்பரவல்,சில இடங்களில், நீளப்பரவல் கணக்கிடப்படுகிறது. இம்முறையில் ஒவ்வோர் இழைப்பிரிவின் மொத்த நீளம் அளக்கப்படுகிறது. இழை நீளம் என்பது பிரிவு நீளம், பிரிவு நிகழ் வெண் ஆகியவற்றின் பெருக்கற்பலனாகும். இம் முறையில் ஒவ்வோர் இழையின் பிரிவின் மொத்த நீளம் கணக்கிடப்படுகிறது. இழை எடை/அலகு நீளம், மாறிலியாக இருப்பின், நீளப்பரவல் வளை வும், எடைப்பரவல் வளைவும் இணைகின்றன. இழையின் நீளத்தைக் கணக்கிடுவதால் அதனு டைய மூலப்பொருளின் தரமும், அதற்கேற்றவாறு இழையைச் செயற்படுத்தும் முறையும், இழைத் துண்டிப்பும், சீவு செயல்முறையின் திறமையும் கணக்கிடப்படும். இழையின் மெலிமை அளவிடுதல் இழை மெலிமையின் முக்கியத்துவம். நூற்பதற்கு ஏற்ற இழையின் தரத்தைக் காண இழை நீளம் பயன் படினும், பல இடங்களில் இழையின் மெலிமை முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. கருத்திய லான எந்திரத்தில் உற்பத்தியாகும் நூலிழையில் கூட, இழைகள் முறுக்கிழையில் சீராக இல்லாமல் இருப்பதால் ஒழுங்கின்மை ஏற்படுகின்றது. முறுக் கிழையில் உள்ள இழைகள், வெட்டுமுகத்தில் உள்ள சராசரி இழையின் எண்ணிக்கையைப் பொறுத் தமையும். வெட்டு முகத்திலுள்ள சராசரி இழையின் எண்ணிக்கை அதிகமாகும்போது முறுக்கிழையில் உள்ள ஒழுங்கின்மை பெரிதும் குறைகின்றது. வெட்டு முகத்திலுள்ள சராசரி இழையின் எண் ணிக்கை, இழையின் மெலிவைப் பொறுத்து அமை கின்றது. இழை மிகவும் மெலிவாக இருக்கும்போது புரியின் எண்ணிக்கை அதிகமாவதால், முறுக்கிழை யில் ஒழுங்கின்மை குறைகின்றது. மெலிமையாக நூலிழை இருக்கும்போது வெட்டு முகத்திலுள்ள இழைகளின் எண்ணிக்கை குறைவதால், ஒழுங்கின்மை அதிகமாகும். அவை ஒரு புள்ளியை அடைந்தவுடன் அவை எந்த இழை யானாலும் நூற்க இயலாமல், நூற்றல் வரைய றையை அடைகின்றன. பருத்த இழையைப் பயன் படுத்தும் போது அவை விரைவாக நூற்றல் வரை யறையை அடைகின்றன. இவற்றைப் பின்வருமாறு சுருங்க விளக்கலாம். 1. ஒரே எண்ணிக்கையுடைய மெலிவான இழையிலிருந்தும், பருத்த இழையிலிருந்தும் நூற் கப்படும் நூலிழையில், மையமான இழையிலிருந்து தயாரிக்கப்படும் நூலிழை சமச்சீராகவும், அதிக உறுதி வாய்ந்ததாகவும் இருக்கும். 2. ஒரு மெல்லிய இழையிலிருந்து நூற்கப்படும் இழை பருத்த இழையிலிருந்து நூற்கப்படும் நூலிழையை விட மெலிமையாக இருக்கும். இழை களின் மெலிமைத் தன்மை அதிகமாகும்போது, நூலிழையில் உள்ள ஒவ்வோர் இழையும் ஒன்றோ டொன்று இணைவதற்கு வேண்டிய மொத்தப் பரப் பளவு அதிகமாகும். ஆகவே, நூலிழையில் உள்ள இழைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இணைவதற்கு குறைந்த அளவான திரிப்பு தேவைப்படுகிறது. இழைக்கு இரண்டு முக்கிய இயல்புகள் உண்டு; அவை முறுக்க விறைப்பு (torsional rigidity) அல்லது திரிப்பு எதிர்ப்பு; விறைப்பு அல்லது வளைவு எதிர்ப்பு என்பன. விறைப்பான இழைகளிலிருந்து உருவாக்கப் படும் ஆடைகள் மடிப்புக் கலையாமல் இருப்பதுடன் அழகாகத் தொங்க விடவும் பயன்படுகின்றன.