இழை அறி ஆய்வு 863
மெலிமையின் வரையறை. எல்லா இழைகளும் வட்டமான வெட்டுமுகமாக இருப்பின், அவற்றின் விட்டத்தை நுண்ணோக்கியினால் அளக்கலாம். ஒவ் வோர் இழையிலும், இழையின் வெட்டுமுகம் அதன் நீளத்தில் சீராக இருப்பின் அது அளவிட மிகவும் எளிதாகும். ஆனால், ஒவ்வோர் இழையிலும் வெட்டுமுகம் இழையின் தளத்தில் வேறுபடுவதுடன், ஒவ்வோர் இழைக்கும் வேறுபடுகின்றது. ஆகவே, இழையின் மெலிமை காண கீழே உள்ள முறை பயன்படுத்தப்படுகிறது. இழையின் நிறையைக் காண இழையின் நிறை = இழையின் கன அளவு = x இழையின் அடர்த்தி இவ்வாய்பாட்டிலிருந்து இழையின் வெட்டுமுகப்பரப்பளவு இழையின் நீளம் இழையின் அடர்த்தி நிறை, வெட்டுமுகத்திற்கு நேர்விகிதத்திலுள்ளது என அறியலாம். மேலும், இழையின் ஒரு நீளத்தின் நிறை, அதனு டைய வெட்டுமுகத்தோடு தொடர்புடையதாக இருக் கும். ஒரு குறிப்பிட்ட நீளத்தையுடைய இழையின் எடையை அளவிடும்போது, அதிலிருந்து நேரியல்பு அடர்த்தியைக் கண்டுபிடிக்கலாம். நேரியல்பு அடர்த்தி = எடை அலகு நீளம் வெவ்வேறு வெட்டுமுக அளவுகளைக் கொண் டுள்ள இழைகளின் நேரியல்பு அடர்த்தி ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாக, அதிக அடர்த்தியுள்ள இழைக்கு, குறைந்த அளவு வெட்டுமுகம் இருப்பதால், இவ்வாறு ஒன்றிப் போகின்றது. இரா. அ. நூலோதி. Booth, J.K., Principles of Textile Testing, Third Edition, Butter Worth Scientific, London. 1968. இழை அறி ஆய்வு இழையை இனங்கண்டறிதல் அந்த இழைக் கூறின் இயல்பைச் சார்ந்தும் ஆய்வாளரைப் பொறுத்தும் ஆய்வு செய்வதற்கான வசதிகளைப் பொறுத்தும் அமைகிறது. சட்டப்படி இழையின் பெயரும் இழை யைப் பயன் படுத்திச் செய்யும் அனைத்துப் பொருள் களும் தகவல் குறிப்புத்தாளில் (label) தரப்படுவதால் அதிலிருந்து நுகர்வோர் இழையின் வகையை அறிய லாம். மேலும் ஐயம் நீட்டித்தால் எரிஆய்வாலும் இழை அறி ஆய்வு 863 (burning test) கரை ஆய்வாலும் (solubility test) இழையை ஆய்வு செய்து இனங்கண்டறியலாம். பார்வை மதிப்பீட்டுமுறை, ஆடை அல்லது துணி யைப் பார்வையாலும், கையால் தொட்டுப்பார்ப்ப தாலும் மதிப்பிடலாம். இது இழையை இனங்கண்ட றியும் முதல் நிலையாகும். என்றாலும் இம்முறை இயற்கை இழையையும் செயற்கை இழையையும் பிரித்தறிய எப்போதும் உதவாது. எனவே, பின் வரும் இயல்புகளையும் கவனித்தல் உதவியாக அமையும். அவை இழை நீளம், இழை மிளிர்வு. இழை உடலம், யாப்பு மென்மை - வன்மை, விறைப்பு- நெளிவு ஆகியனவாகும். இழை நீளத்தை முறுக்குப் பிரித்துக் கண்டறிய வேண்டும். எல்லா இழைகளும் இழைப் புரிகளால் (filaments ) அமைவதில்லை. சில இழைகள் அதாவது, பருத்தி, மயிர் ஆகியவை பொதியிழைகளாக (staple fibre) அமைகின்றன. எரித்தல் ஆய்வு. இழையை எரித்து இழையில் அமைந்த வேதி உட்கூறுகளைத் தீர்மானித்து இழை வகையை இனங்காணலாம். பொதியிழைகளை இனங் கான இந்த ஆய்வு பயன்படாது. எரி ஆய்வுடன் பார்வை மதிப்பீட்டு முறையையும் பயன்படுத்திச் சில இழைகளை மேலும் தெளிவாக இனங்காண லாம். எடுத்துக் காட்டாக, செல்லுலோஸ் இழை படலமானால் அவ்விழை ரேயான் ஆகும். பொதி யிழையானால் இழை வகையை னங்காண்பது அரிது. பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றி எரிஆய்வினால் இழை வகைகளை இனங்கா எரிஆய்வினால் இழை வகையை இனங்காண அட்டவணை- 1உதவும். காணலாம். ஆடையில் உள்ள இழையை இழுத்துப் பலமுறை ஒரே வகைப் பொருளாலானதா என அறிய வேண் டும். மிளிர்வு, முறுக்கு, வண்ணம் ஆகியவற்றைக் கொண்டு இழை வேறுபடுவதைக் கண்டறியலாம். கிடையாக இழையைப் பிடித்து மெதுவாகத் தீக் கொழுந்தில் காட்டிப் பல முறை எரியவிட வேண் டும். ஏற்படும் நிகழ்வுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். நுண்ணோக்கி ஆய்வு. நுண்ணோக்கியில் இழை யைப் பார்வையிடுவது இழை வகையை அறிய உதவு கிறது. இதனால் ஆடை உழைப்பை அறியலாம். இயற்கை இழைகளை இனங்கான இம்முறை நன்கு உதவுகிறது. இம்முறையில் செயற்கை இழை களைக் கண்டறிதல் அரிதாகும். இழையின் குறுக்கு வெட்டு முகத்தை ஆய்வு செய்து இழை இனங் காணும் கூடுதலான தகவல்களைப் பெறலாம். இழை யின் நீள் வெட்டு முகமும் குறுக்கு வெட்டு முகமும் இழை இனங்காண உதவும் முக்கியமான சிறப்பியல்பு களாகும்.