பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/899

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழை உற்பத்தியில்‌ வேதிப்‌ பொறியியல்‌ 875

இழை ஈரப்பதத் தொடர்பு, ஆய்வு காற்றிலுள்ள ஈரப்பத நிலையைப் பொறுத்து, இழை யின ஈரப்பதம் அமைகின்றது. வேதி முறை, பனித் துளி முறை ஹேர்ஹைக்ரோ மீட்டர் முறை, போன்ற முறைகளில் இழையின் ஈரப்பதத் தொடர்பு களைக் கண்டறியலாம். மேலும் நனைந்த, உலர்ந்த ஹைக்ரோ மீட்டர் மூலம் அறியும் முறையில் அ. நிலையாக வைக்கப்படும் ஹைக்ரோ மீட்டர் முறை, சு ஆ. சுற்றிக் கண்டறியும் (நிலையாக வைக்கப் படாத), ஹைக்ரோ மீட்டர் முறை என இருமுறைகள் அடங்கும். வேதி முறை. இதில் கால்சியம் குளோரைடு அல்லது பாஸ்ஃபரஸ் பென்ட்டாக்சைடு உலர்ந்த உப்பு மூலம் ஆய்வு செய்யப்பட்டு, ஈரப்பத உறவு கண்டறியப்படுகிறது. இம்முறை நடைமுறையில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. பனித்துளிமுறை. இது வேதி முறைக்கு அடுத்த சிறந்த முறையாகும். இம்முறையில் தூய உலோகக் குடுவையில் நீர் நிரப்பப்பட்டு ஆய்வு செய்யப்படு கிறது. குடுவையின் மேற்பரப்பில் படியும் நீரின் பனித்துளி அளவைக் கொண்டு காற்றிலுள்ள ஈரப்பத அளவு கண்டு அறியப்படுகிறது. முறையும் தற்காலத்தில்கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்த முடி ஹைக்ரோ மீட்டர் முறை இம்முறையில் ஒரு தலைமுடியையோ பல முடிகளையோ ஓர் இணைப் பில் முள்குறியுடன் இணைத்து, காற்றிலுள்ள ஈரப் பதத்தை ஹைக்ரோமீட்டர் மூலமாக அறிய முடியும். இது ஒரு தோராயமான ஈரப்பத அளவை மட்டுமே அறியப் பயன்படுகிறது. இதை ஆய்வுக்கூடத்தில் பயன்படுத்த முடியாது. நனைந்த உலர்ந்த ஹைக்ரோமீட்டர் முறை. இது அனைத்துத் தொழிலகங்களிலும் பயன்படுத்தப்படும் முறை ஆகும். இது ஒரு சிறந்த முறை. பயன் நிலை இதில் இரண்டு வெப்பநிலைமானிகள் படுகின்றன. ஒரு வெப்பநிலைமானி உலர் யிலும் மற்றொரு வெப்பநிலைமானியின் நுனி ஒரு கிண்ணத்தில் உள்ள நீரிலும் வைக்கப்பட்டு இருக்கும். ஆய்வுக்கூட அல்லது தொழிலக அறையின் சார்பு ஈரப்பதம் உலர்ந்த, ஈரமான வெப்பநிலை மானிகளின் அளவுகள் மூலம் கண்டறியப்படும். இது நிலையான ஹைக்ரோமீட்டர் சேர்ந்தது. வகையைச் சுற்றும் ஹைக்ரோமீட்டர். தேவைக்கேற்ற இடத் தில் உடனே கண்டறிய இது பயன்படுகிறது. இவ் வாறு இழை ஈரப்பத உறவுகளை மேலே கூறப்பட்ட முறைகளாலும், ஆய்வுகளாலும் கண்டறியலாம். இழை உற்பத்தியில் வேதிப் பொறியியல் 875 உலர்ந்த வெப்பநிலைமானியின் அளவையும், ஈரமான வெப்பநிலைமானியின் அளவையும் கண்ட றிந்து இவற்றிற்கிடையில் உள்ள வேறுபாட்டைக் கண்டறிந்து அதை உலர்ந்த வெப்ப நிலைமானி அளவு அட்டவணைக்கு ஒப்பிட்டு அறையின் சார்பு ஈரப் பதம் விழுக்காட்டில் (R.H. %) கண்டறியப்படும். இந்த அட்டவணையைத் தெர்மாமீட்டர் தயாரிப் பாளர்களே அளிப்பார்கள். தொழிலகங்களில் காற்றின் ஈரப்பதம் பின்வரு மாறு இருக்க வேண்டும். நூற்பு ஆலை பருத்தி நெசவு ஆலை பாலியஸ்டர் நெசவு ஆலை 65 % 70% 80% 85% 70% 75% தி.அ.வெங்கடாசலம் இழை உற்பத்தியில் வேதிப் பொறியியல் வெப்ப 1945ஆம் ஆண்டிற்குப் பிறகு வேதிப் பொறியியல் மனிதனின் செயல் முறை இழைகளிலும், பல புதிய பல்லுறுப்பிகளின் தொகுப்புகளிலும் பெரும்பங்கு கொண்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட இழை களை மாற்று வடிவமாக்க அதாவது நெய்தலுக் கேற்ற, பின்னுதலுக்கேற்ற, சாய மேற்கக்கூடிய, மேல்பூச்சை ஏற்கக்கூடிய இழைகளாக மாற்ற மிகுந்த செலவாவதால் இவ்வகை இழைகளில் பெரும்பாலா னவை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. உருக்கி நூற் றலில் (melt spinning) பல்லுறுப்பிகளின் இரு இயல்பு கள் நூற்றல் செயல்முறையை விளக்குகின்றன, அவை உருகு நிலையும், கண்ணாடி மாறு நிலையும் (glass transition temprature) ஆகும். இவ் வெப்பநிலையில் இழைகளின் தூள் நிலை உறுப்பு களிலுள்ள மூலக்கூறு இணைப்புகள் விடுவிக்கப்படு கின்றன. இது தன்விருப்பப்படி இழை சுருங்குவதற்கு அனுமதியளிப்பின், பெரும்பான்மையான இடங்களில் இழைகளின் படிகமாகும் பகுதிகள் துகள் படிநிலை உறுப்புகளில் தொங்கவிடப்படுகின்றன. இதிலிருந்து படிநிலையில் பெறப்படு இழைகள் வெவ்வேறு கின்றன. மிகக்குறைவான கண்ணாடி மாறு வெப்ப நிலையைக் கொண்டிருக்குமாறு தயாரிக்கப்படும் இழைகளின் இயல்புகளில், இவ்வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுவதால் மிகுந்த வேறுபாடுகள் உண் டாகின்றன. (எ. கா.) அக்ரிலிக், வைனைல் அசெட் டேட். இதன் கண்ணாடி மாறு வெப்பநிலை -50°C ஆகும். மூன்றாம் சிறப்பியல்பு, இழைகளாகக் கூடிய மூலக்கூறுகளைச் சங்கிலித் தொடரிலுள்ள மூலக்கூறு களுடன் தொடர்பு ஏற்படுத்துதலாகும். பொதுவாக, மனிதச் செயல்முறை இழைகள் இயற்கையான