இழைமுறைகள் 883
அ இழைமுறைகள் 883 படம் 1. மூவகை நூற்பிதிர்வு முறைகள் அ. சரநூற்பு ஆ.உலர் நூற்பு இ. உருக்குமுறை நூற்பு யாகச் சிம்பிலிருந்து நூல் நூற்கின்றன.இந்நூல், சிம்பு நூல்நூற்பு முறைகளைவிட வலிமையாகவும் நீளமிக்கதாகவும் உயர் சுருக்கியல்புடையதாகவும் உள்ளது. படல நூல்நூப்பு. இது மிக எளிய நூற்பு முறை யாகும். படலம் நீளப்போக்கில் நூற்பியின மூல மாகப் பிதிர்வு முறையால் முறுக்கி இவ்வகை நூல் நூற்கப்படுகிறது. தேவைப்பட்டால் இவற்றுக்கு அங்குலத்துக்கு ஓரிரு முறுக்கு ஏற்றப்படும். படல நூல் திரிப்பின் போதே படலங்கள் முறுக்கப் படுவதும் உண்டு. நூற்பிதிர்வுமுறை நூற்றலை ஈரமுறை, உலர் முறை, உருக்கல் முறை என மூன்று வகையாகப் பிரிக்கலாம் (படம் 1). இவை பெரிதும் செயற்கை இழையாக்கத்திலேயே பயன்படுவனவாகும். இரட்டை உறுப்பு இழைநூல். வேறுபட்ட புற நிலைப் பண்புகளும் வேதியியல் பண்புகளும் உள்ள நூல்களை ஒட்டிய முறையில் தொடர்நூல்நூற்பியில் நூற்கலாம். இவற்றை ஈருறுப்பு நூல், அகட்டு நூல், அணி இழைக் கூட்டுநூல் என அழைப்பர் (படம் 2). யாப்பமைத்தல். முதன் முதலில் யாப்பமைவு (textured) செய்யப்பட்ட நூல் எலன்கா (helenca என்னும் இருபுரித் தொடர்படல் நூலாகும். இது பல கட்ட மறுக்கல், வெப்பத்திருக்கல், முறுக்கவிழ்த்தல் ஆகிய செயல்முறைகளை மீண்டும் மீண்டும் பயன் படுத்திச் செய்யப்படுகிறது. யாப்பமைத்தலைப் பொதி, சிம்பு, பிதிர்வு, ஈரு றுப்பு ஆகிய அனைத்து வகை வடிவங்களிலிருந்தும் செயற்கை நூலாக்கும் முறைக்குப் பயன்படுத்தலாம். இழையிலுள்ள இரு உறுப்புகளைக் குளிர்வித்தல், சூடாக்கல் ஆகியவற்றிற்கு உட்படுத்தும்போது வெவ் வேறு அளவில் விரிந்து சுருங்குகின்றன. இதனால் இழுப்புறல்,பருத்தல் ஆகிய இயல்புகள் மேம்படு கின்றன. இம்முறை அக்ரிலிக் பொதி, சிம்பிழை A அ.க. 4-56அ 03 A நீள்வெட்டுத் தோற்றம் குறுக்குவெட்டுத் தோற்றம் இழை குறுக்குவெட்டுத் தோற்றம் படம் 2. இரட்டை உறுப்பு இழையமைப்புகள் அ. ஈருறுப்பு நூல், ஆ. புறணி அகட்டு நூல், இ. அணிச்சிற்றிழை நூல்.