பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/910

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

886 இழைத்‌ தரம்‌

886 இழைத் தரம் மும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. பருத்தியிலி ருந்து கொட்டை நீக்கப்படுமுன் பருத்தி தொடக்கப் படித்தரமாக்கப்படுகிறது. பின்னர் அது சூடான் துறைமுகத்தில் ஆராயப்பட்டு மறுபடித்தரமாக்கப் படுகிறது. பருத்தியிழையின் நீள மதிப்பீட்டைச் சேர்த்துக் கொண்டும், பயனற்ற பொருள்கள் கலப் பினைக் குறைப்பதனால் விளையும் விளைவையும் அமெரிக்கப்படித்தரப்பழக்கத்துடன் கட்டவரைபடம் வரைந்து ஒப்பிட்டுக் காணும்போது சரியானதாக இருக்கிறது. பயனற்ற பொருள்களின் கலப்பிளை அளத்தல் - சைர்லி பகுத்தாய்வான். பயனற்ற பொருள்களின் கலப்பினை அளக்க சைர்லி பகுத்தாய்வான் பயன் படுகிறது. அது செயல்படும் முறையைக் காணலாம். பயன்படுத்திச் செயல் அந்த எந்திரம் மிதவைப்பிரித்தல் கொள்கையில் காற்று மின்சாரத்தைப் படுகிறது. ஊட்டல் மேடை மீது மாதிரிக் கூறை வைக்க வேண்டும். இந்த மாதிரிக் கூறு ஊட்டல் உருளியின் மூலம் உள்ளிழுப்பானுக்கு அனுப்பப்படும். அதன் மிகுந்த விரைவும், பற்களும் பருத்தியைப் பெரும் பகுதி திறந்து ஒற்றை முடி நிலையைத் தருகிறது வலிமையான மையத்திலிருந்து புறத்தை நோக்கி வெவ்வேறு எடைச் செறிவுள்ள பொருள்களைக் கொண்டு செல்லும் விசையினால், பருத்தி முடி பயனற்ற துகள்கள் துகள்கள் வெளியேறுவதற்குத் தொடு கோடான திசைப்போக்கில் பயணம் செய்ய முயலும் போது, காற்றோடைகள் உள் நுழைகின்றன. இந்தப் போக்கு நீண்ட குறுகிய தகட்டின் செயலினால் மிகுதிப்படுத்தப்படுவதுடன் நீண்ட குறுகிய தகடு காற்று மின்சாரத்தைச் செலுத்துவதற்கு ஏற்றவாறு சிறப்பாக உருவமைக்கப்பட்டுள்ளது. காற்று மின் சாரம், உள்ளிழுப்பான் உருளி நகர்வதால் பொது வாகக் காற்றோடையுடன் சேர்கின்றன. இதனால் சுழற்காற்று ஏற்படாதவாறு, நீண்ட குறுகிய தகடு உருவமைக்கப்பட்டுள்ளது. 8 5 15 10 16 17 12 14 7. சைர்லி பகுத்தாய்வான் 1. ஊட்டல் மேடை 2. ஊட்டல் உருளை 3. உரிக்கும் கத்தி 4. கூடு 5. ஈரமாக்குபவர் 6. இங்கே தூசு வெளியேற்றப்படும் உள்ளிழுப்பான் 8. காற்றோடைகள் 9. சிறந்த இழை மற்றும் தூசுகள் காற்றோடைகளினால் கூட்டிற்குக் கொண்டு செல்லப் படுகின்றன 10. தூய்மையாக்கப்பட்ட பருத்தியை வெளிவிடும் பெட்டி 11. காற்றோடைகளிலிருந்து அழுக்குகள் கீழே விழுகின்றன தூசு வெளியேற்றப்படுகிறது 13. விசிறி 14. காற்றைக் கட்டுப்படுத்தும் இதழ் 15. நீண்ட குறுகிய தகடு 16. கீலிட்ட கதவு 7. பயனற்ற பொருள்களுக்கான தட்டு. 22.