பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/911

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழைத்‌ தரம்‌ 887

பருத்தியும், பயனற்ற பொருள்களும், காற்றோ டைகளுடன் சேர்ந்து படிதல் அறை அல்லது குழிவு (settling chamber) வழியாகச் செல்லும்போது மிகுந்த எடையுள்ள பயனற்ற துகள்கள் அவற்றைச் சேகரிக்கும் தட்டில் நேரடியாக வந்து விழுகின்றன. இவ்வாறு பருத்தியும் பயனற்ற பொருள்களும் பிரிக்கப்படுகின்றன. மற்றொரு முறைப்படி, ஒற்றைப் பருத்தி முடி காற்றோடைகளினால் எடுத்துச் செல்லப படும்போதும் கலத்திலிருந்து வெளிச் செல்லும் போதும் முழுதுமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. எடைக்குறைவான பயனற்ற பொருள்கள் கீழே விழுந்துவிடக் கூடிய கொண்டிருப்பினும் காற்றோடைகளினால் சிறிது தொலைவு எடுத்துச் செல்லப்படுகின்றன. காற்றோ டைகளைச் சரியாகச் சீர்படுத்துவதன் மூலம் எடைக் குறைவான பயனற்ற பொருள்கள் எடை மிகுந்த பயனற்ற துகள்கள் விழுகின்ற இடத்தைத் தாண்டி பயனற்ற துகள்களைச் சேகரிக்கும் தட்டில் விழுகின் றன. வெல்வேறு துகள்களின், விழுகின்ற வழிகள் புள்ளியிடப்பட்டுள்ள கோட்டினால் மேலேயுள்ள படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளன. உடனடியாக போக்கைக் செய் பருத்தி, எளிய அழுக்குத்துகள்கள் படிதல் அறையிலிருந்து வெளியேற்றப்பட்டு, கூட்டின் பரப் பிற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு கூட்டின் துளைகள் வழியாக உறிஞ்சப்பட்டுப் பருத்தியி லிருந்து நீக்கப்படுகின்றன. அந்தப் பருத்தி கூட்டுக் குள் அடுக்கை ஏற்படுத்துவதோடு அதன் சுழலும் திசைக்கு ஏற்றவாறு முன்னோக்கிப் பயணம் கிறது. அனைத்துப் பருத்தி அடுக்குகளுக்கும் முதன் மையான பருத்தி, கூடுகளின் ஈரமாக்கப்பட்ட பகுதி மேலே வரும்பொழுது பின்னால் வருகின்ற பருத்தி யினால் முன்னாலிருக்கும் வெளியிடும் தட்டிற்குத் தள்ளப்படுகின்றது. இதனால் வெளிவிடும் தட்டிற் கும், கூட்டுக்குமிடையேயுள்ள உள்ளிழுப்புக் கூடுகள் அடுக்குகளைக் குச்சிகளாக்கத் துணை செய்கின்றன. இறுதியாக அந்தப் பருத்தி வெளிவிடும் பெட்டி யினுள் விழுகின்றது. இம் முழு பதினைந்து நிமிட நேரம் ஆகும். ஆய்வுக்குப் எடையிட்டு, பயனற்ற பொருள்களின் அளவை அது அனைத்து மாதிரிக் கூற்றின் விழுக்காடாகக் கொடுக்கப்படுகிறது. இரு மாதிரிக் கூறுகளைப் பகுத் தாய்வின் வழியாகச் செலுத்தி அதன் சராசரி கணக் கிடப்படுகிறது. சராசரிக்கிடையேயான வேறுபாடு 20 விழுக்காட்டிற்குக் குறைவான தாயிருந்தால் புள்ளி யியலின்படி முதன்மையானதன்று. எடுத்துக்காட் டாக, இரு பருத்திகள் ஒரே பயனற்ற பொருள் களைக் கொண்டிருப்பன 1.0, 1.2 விழுக்காடுகளைக் கொடுப்பின் அவை கருத்தில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. ஆனால் ஒன்று 1.4 என்றும், மற் றொன்று 1.8 என்றும் விழுக்காடுகளைக் கொண்டி ருப்பின் அவை கருத்தில் கொள்ளப்படமாட்டா. இழைத் தரம் 887 சைர்லி பகுத்தாய்வானின் செயல்முறை சார்ந்த பயன்கள்: இது விற்பவருக்கும் வாங்குபவருக்கும் பருத்தியின் மூலப் பொருளிலுள்ள பருத்தி, பயனற்ற பொருள்களின் விகிதங்களின் விவரத்தைக் கொடுக்கப் பயன்படுகிறது; குறிப்பிட்ட வகை லது குறியீடுள்ள பருத்தி அல்லது பயனற்ற பொருள் பற்றி அதனை நூற்பவரிடம் உள்ள எந்திரத்திற் கேற்ற நுட்பமான கருத்தை அளிப்பதற்குப் பயன் படுகிறது; சிக்கெடுத்தலையும் சேர்த்து, விளைபொருள் களின் எந்த ஒரு நிலையிலும் அதன் தூய நிலையைக் கண்டறியப் பயன்படுகிறது; எந்த ஓர் உற்பத்தி எந்திரத்தின் மூலமாகவும் பயனற்ற பொருள்களி லிருந்து நூற்கக் கூடிய இழைகளின் அளவைக் கணக் கிடப் பயன்படுகிறது; திறத்தல், தூய்மை செய்தல் ஆகிய செயற்பாங்கின் தொடர்ச்சியில் சிறந்த இழை கள் வீணாவதன் அளவைக் படுகிறது. காண இது பயன் மேலும் சைர்லி பகுத்தாய்வான் மைக்கேராநைர் (micronaire), W.I.R.A மெலிமை மீட்டர் ஆய்வுகளுக் குத் தேவையான பருத்தியைத் தயாரிக்கப் பயன்படு கிறது. ஏனெனில் அந்த இழைகள் நன்கு திறக்கப்படு வதுடன் பயனற்ற பொருள்களின்றியும் உள்ளன. தென் மண்டல ஆராய்ச்சிக் கூட மிருதுவான பஞ் சற்ற சோதிப்பான். தென் மண்டல ஆராய்ச்சிக் கூட மிருதுவான பஞ்சற்ற சோதிப்பான் (the southern regional research laboratary nonlint tester) வான பஞ்சற்ற அல்லது பருத்தியிலுள்ள பயனற்ற பொருள்களைப் பற்றி விரைவாகவும் நுட்பமாகவும் கணக்கிடுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. என்பது மிருதுவான பஞ்சற்ற சோதிப்பான் உள்ளெடுக்கும் வகையைச் (taker-in type) சார்ந்த தூய்மைப்படுத்துவானாகும். இது மிருதுவான பஞ் கள்ள பருத்தியிலிருந்து அயல் பொருள்களைத் திற மையாகவும் விரைவாகவும் நீக்குகிறது. இது புதுவித மான ஊட்டல் முறையைக் கொண்டுள்ளது. அது பருத்தியை மிகுதியாக இழைப்புக்குள்ளாக்குவதுடன், வெளித்தள்ளப்படும் பயனற்ற பொருள்களைத் திரும்பவும் பஞ்சினால் உள்ளிழுக்கப்படுவதை எதிர் சுழிப்புப் பிணைப்புக் கட்டைகளால் தடுக்கிறது. தொடர் செயல்முறையில் பருத்தி இரு முறை தூய்மையாக்கப்படுவதுடன், காற்றை வெளியேற்றல், காற்றைச் சுற்றிச் செலுத்தல் ஆகிய முறையுமிருப்ப தால், புறத் தடுப்பான் அதற்குத் தேவைப்படுவ தில்லை. நூறு கிராம் எடையிடப்பட்ட மாதிரிப் பஞ்சுப் பருத்திக் கூறை எடுத்து ஊட்டல் மேசையின் மீ து பரவியவாறு வைக்க வேண்டும். அங்கே இரு உருளி கள், புகையோட மற்றும் மற்றும் தூய்மைப் படுத்தும் உருளைகளுக்குள் இதை ஊட்டுகின்றன. தூய்மைப்