892 இழைப்பு எந்திரம்
892 இழைப்பு எந்திரம் பின்னர் நீ இலிருந்து CO விற்கு இணையாக வரை யும் கோடு R ஐ விசை இல் வெட்டும். 7 இலிருந்து Do விற்கு இணையாக வரையும் கோடு விசை S இல் 8 என்ற புள்ளியில் வெட்டும். 8 இலிருந்து EO விற்கு இணையாகவும், விலிருந்து AO க்கு இணையாகவும் வரைய அவை என்ற இடத்தில் வெட்டும். இப்புள்ளியின் வழியாக AE க்கு இணையாகவும் விகித சமமாகவும் வரையப்படும். EL என்ற விசை P,Q, R,S என்ற விசைகளின் விளைவு விசையாகும். இங்கு &Byte என்பது ஓர் இழைப்பல கோணமாகும்.A,E என்பன ஒரே புள்ளியாக அமைந்தால், P,Q, R,S விசைகள் சமநிலையில் உள்ள விசைகளாகும். இழைப்பு எந்திரம் ப. கந்தசாமி வெட்டுளியின் அமைப்பு, அவற்றின் பயன்பாடுகள், செயல்முறைகளின் எளிமை ஆகியவற்றால் இழைப்பு எந்திரம் (planers), வடிவ அமைப்பு எந்திரம் (shapers),காடி வெட்டுப் பொறி (slotters) போன்ற எந்திரங்கள் அனைத்து எந்திரக்கருவிகளையும் பயன் படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இழைத்தல் (planing). இழைப்பு எந்திரம் மேற் கொள்ளும் இயக்கத்தில், வேலைக்குட்படுத்தப்பட்ட துண்டு முன்பின்னாக இயங்குகிறது. இத்துண்டினுள் வெட்டுளி (cutting tool) செலுத்தப்படுகிறது. இழைத் தலுக்கு தேவையான ஊட்டம் இடைவிட்டு இருக்கும். இந்த ஊட்டம் வெட்டக் கூடிய அகலத்தைக் குறிக் கிறது. இழைப்பு எந்திரம், நீர்மச் செலுத்தத்தையோ, எந்திரச் செலுத்தத்தையோ கொண்டது. எந்திரச் செலுத்தத்தில் மின் இயக்கி -மின்னாக்கித் தொகுப்பு. ஒட்டு மின் இயக்கி (drive motor), கட்டுப்பாட்டுக் கருவி ஆகியவை உள்ளன. நீர்மச் செலுத்தத்தைக் கொண்ட இழைப்பு எந்திரத்தின் மேசை, முன் பின் னாக இயங்குகிறது. இவ்வியக்கம் இழைப்பு எந்திரத் தின் அடிப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நீர்ம உருளைகளால் ஏற்படுகிறது. இவ்வுருளைகளில் உள்ள உந்து தண்டு (piston rod) இழைப்பு எந்திரத்தின் மேசையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எந்திரச் செலுத்தத்தையுடைய இழைப்பு எந்திரத் தின் வேகம், ஓட்டு மின் இயக்கியின் வேகத்தையும், பல்சக்கரத்தின் விகிதத்தையும் பொறுத்தது.நீர்ம இழைப்பு எந்திர மேசையின் வேகம், உந்தின் தொகு பரப்பு (effective area), இப்பரப்பிற்கு எதிராகக் குறிப் பிட்ட நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எண்ணெயின் கன அளவு ஆகியவற்றைக் கொண்டு முடிவு செய்யப் படுகிறது. இழைப்பு எந்திரத்தின் வகைகள். தொழிற்சாலை குறுக்குச் சட்டம் குறுக்குச்சட்ட மட்டுகள் குறுக்குச் சட்ட மட்டுகளின் உச்ச உயரம். பக்கமட்டு பக்கமட்டு முன்பின் இயங்கும் மேசை அடிப்பகுதி படம் 1. இரட்டைத் தொகுப்பு இழைப்பு எந்திரம்