894 இழை, மனிதச் செயல் முறை
894 இழை, மனிதச் செயல் முறை உளி எஃகினாலோ, அதிவேக உளி எஃகு, வார்ப்பு உலோகக் கலவை ஆகியவற்றாலான வெப்பப் பத னிடப்பட்ட காம்பினாலோ, பற்றாசு இடப்பட்ட (brazed) கார்பைடு முனையினாலோ செய்யப்படு கின்றன. சீராக்கும் கருவிகள், காடிகள், இரட்டை வெட் டுளிகள், பல உளி முனைக் காம்புகள் (gang tools) போன்றவை இழைப்பு எந்திரத்தில் பயன்படுத்தப் படும் பிற கருவிகளாகும். வேலையை அமைத்தல். வேலையை அமைத்தல் என்பது எந்திரத்தின் வெளியீட்டை அதிகரிக்க உத வும் சிறப்பு வாய்ந்த பகுதியாகும். இழைப்பு எந்தி ரத்தில் வேலையை அமைப்பது, பிற எந்திரத்தை விடக் கடினமானதாகும். குறிப்பாக, சிறிய அல்லது நடுத்தர அளவுடைய ஒழுங்கற்ற உருவமுடைய துண்டுகள் ஒரே நேரத்தில் இழைக்கப்படுவதால், வேலை அமைததல் கடினமானதாக உள்ளது. வேலை கள் கருவிகளின் தொடர்பற்ற வெட்டு அழுத்தத்திற் கும், எதிர் திருப்பலின் போது உண்டாகும் நிலைம விசைக்கும் (inertia force) உட்படுவதே இதற்குக் காரணமாகும். சீராக்க வேண்டிய பரப்புகளின் இறுக்குப் புள்ளி களுக்கு (clamp point) அடியில் காகிதம் வைக்கப்படு கிறது. இது உராய்வை அதிகரிக்கவும், மேசையைப் பாதுகாக்கவும் உதவுகிறது. வேலை செய்யப்படும் துண்டுகள் சிறியவையாக இருக்கும்போது தாங்கும் குறடுகள் பயன்படுத்தப்படுகின்றன. மாக இழைத்தலுக்குத் தேவைப்படும் திறன் தோராய hp = DFSK, இதில் D = F = S = என்று குறிக்கப்படுகிறது. லெட்டு ஆழம், (அங்குலத்தில்) ஊட்டம் அல்லது வெட்டின் திண்மம் (ipm) (அங்குலம் ஒரு நிமிடத்தில்) வேகம் (விசை ஒரு நிமிடத்தில் (fpm) K = மாறிலி; இது இடை வார்ப்பிரும்பிற்கு 3, இவகுவெட்டு எஃகிற்கு 6. வெண்கலத்திற்கு 1.5 என்ற மதிப்புகளைக் கொண்டது. . இழைப்பு எந்திரத்தின் சுமைதாங்கும் திறன். சில சமயங்களில் அதிகமான சுமைகளினால் இழைப்பு எந்திரங்களுக்கு ஊறு ஏற்படக்கூடும். பெரிய வீழ் சம்மட்டியின் திமிசு போன்ற பளுவான வேலைகள், அதிகச் செறிவான சுமையைத் தவிர்க்கும் பொருட்டு, கனமான நீளச் சட்டங்களால் தாங்கப்பட வேண்டும். பக்கத்திறப்பு இழைப்பு எந்திரங்களில் மேசை யின் இடப் பக்கமாக நீட்டப்பட்டிருக்கும் வேலை, சில சமயங்களில், எந்திரத்தின் இடப்பக்க அடிப் உண்டாக் பாகத்தில் அதிகச் செறிவான சுமையை கும். இதைத் தகுந்த முறையில் தவிர்க்க வேண்டும். வா.அ. இழை, மனிதச் செயல் முறை - பதினேழாம் நூற்றாண்டில் ஹுக் என்ற அறிவிய லார் ஏற்றநீர்மத்தை மிகச் சிறிய துளையின் வழி யாகப் பீறிட்டுப் பாய்ச்சி உறையச் செய்யும்போது பட்டுப்புழு போன்ற இழை உருவாகலாம் என்று கூறினார். முந்நூறு பின்னர் ஆண்டுகளுக்குப் பிரான்ஸ் நாட்டுக்காரரான கவுண்ட் டி கார்டோ னெட் என்பவர் செல்லுலோஸ் கரைசலைக் கொண்டு முதன் முதலில் வெற்றிகரமாக மனிதச் செயல்முறை இழையைத் தயாரித்தார். 1910 இல் அமெரிக்காவில் ரேயான் இழைகளும் 1925 இல் அசெட்டேட் இழைகளும் வணிக நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டன. 1940 ஆம் ஆண்டு முதல் செல்லுலோஸ் அற்ற அல்லது நைலான் தொகுப்பு இழை தயாரிக்கப்பட்டது. பின்னர் முப்பது ஆண்டு களுக்குள் மேலும் பதினெட்டு இன இழைகள் மாற்று வடிவங்கள் அல்லது வேறுபாடுகள் வற்றுடன் சந்தைகளில் தோன்றியன. மிகுந்த எண்ணிக்கையுடைய புதிய இழைகளின் பெயர்கள் முகப்புகளில் தோன்றியமையால் அவற்றைப் பயன் படுத்துவோர்க்குப் பெரும் குழப்பம் விளைந்தது. ஆகிய சட்டம் மற்றும் இனப்பெயர்கள். 1958 இல் காங்கிரஸ், ஆடைகளின் முகப்புகளை வரிசைப் படுத்துவதன் மூலம் அவற்றைப் பயன்படுத்துவோர் ஆடைகளின் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காக்கவும், அவற்றைத் தயாரிப்போருக்குப் போட்டி யிலிருந்து பாதுகாப்பளிக்கும் வகையிலும் சட்டம் இயற்றியது. இச்சட்டம் அதாவது ஆடை இழை வினைப்படுபொருள் வெளிப்படுத்தும் சட்டத்தில் கம்பளி விளைப்படுபொருள்களின் முகப்புச் சட்டப் பிரிவின் கீழுள்ள இழைகளையும் சில விலக்களிக்கப் பட்ட இழைகளையும் தவிர, பிற இழைகளை உள்ளடக்கியுள்ளது. 1958 இல் இச்சட்டம் இயற்றப்பட்டாலும் 1960 வரை அது நல்லபலனை அளிக்கவில்லை. இடைப் பட்ட காலத்தில் ஃபெடரல் வணிகக் குழு இச்சட் டத்தில் சில குறைகளைக் கண்டுபிடித்து அவற்றைப் போக்கும் விதிகளையும், வழிமுறைகளையும் ஏற் படுத்தியது. கீழ்க்காணும் மனிதச் செயல்முறை இழை இனப்பெயர்கள் ஃபெடரல் வணிகக் குழு, இழைத்