பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்க முதன்மை உறுப்புகள்‌ 97

செடிகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் விதைகளைக் கலந்து புதிய வகைகள் உருவாக்கப் படுகின்றன. தன்மகரந்தச் சேர்க்கை. நெல், கோதுமை,நிலக் கடலை, எள் முதலிய தன் மகரந்தச் சேர்க்கையுடைய பயிர்களில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறா மல் தடுத்து விதைகள் பெருக்கப்படுகின்றன. இப்பயிர்களில் இரு வகைகள் அவற்றின் இணைவி கள் மூலமாகச் செயற்கையில் இணைத்து உண் டாக்கப்படும். முதல் தலைமுறையில் தன்மகரந்தச் சேர்க்கையின் மூலம் அவற்றை வளர்த்து, அவற்றில் பண்புடைய செடிகளைத் தேர்ந்தெடுத்து மிகை விளைச்சலைத் தரக்கூடிய படுகின்றன. வகைகள் உருவாக்கப் பயிர்களில் உயர் விளைச்சலைப்பெறக் கூடுதவ் முனைப்புத் திறன், தரமான விதைகள் முதலிய வற்றையே தேர்ந்தெடுத்து விளைச்சலைப் பெருக்கி நல்ல இனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். விதை களை நோய் தாக்காமல் இருக்க அவற்றைப் பூஞ்சைக் கொல்லிகளுடன் கலந்து விதைக்கலாம். இதுவும் அதன் இனத்தைப் பெருக்கும் முறையாகும். விதையிலாப்பெருக்கம். முதிர்ச்சி அடைந்த தாவ ரத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பகுதிகள் மூலம் புதிய தாவரங்களை உண்டாக்கும் முறைக்கு விதை யிலாப் பெருக்கம் என்று பெயர். இம்முறையில் இனப்பெருக்கம் செய்யப்படும் குறிப்பிடத்தக்க பயிர் கரும்பாகும். தண்டின் ஒரு பகுதியான கணுவும், கணுவிடைப்பகுதியும், மொட்டும் அடங்கிய கரும்பின் கரணையை நட்டுப் புதிய கரும்பு உண்டாக்கப் படுகின்றது. இம்முறை தீவனப்புல் வகைகளிலும் பின்பற்றப்படுகின்றது. இம்முறையை நெற்பயிரிலும் கையாண்டு ஆண்வளமின்மையுடைய செடிகளைப் பெருக்கி ஆய்வுகளுக்குப் பயன்படுத்தலாம். செடிகளில் விதைகளை உருவாக்க மகரந்தச் சேர்க்கையும் கருவுறுதலும் தேவையாகும். எனினும் ஆண்பெண் இணைவிகள் இணையாமலே விதை களை உண்டாக்கும் செடிகளும் உள்ளன. குறிப்பாக இது புல் வகைகளில் காணப்படுகின்றது. இம்முறை யில் தாய்த் தாவரத்தில் உள்ள பண்புகள் அனைத் தும் சேய்த் தாவரத்திலும் காணப்படுகின்றன. இது ஒரு வகையான விதையிலாப் பெருக்கமே ஆகும். இப்பொழுது புதிய முறையில் இனப்பெருக்கம் செய்யும் முறை திசு வளர்ப்பாகும். செடியின் எந்தப் பகுதியிலும் உள்ள ஒரு திசுவை எடுத்து அதற்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளித்தால், திசு வளரத் தொடங்குகிறது. இம்முறையில் பயிர்களில் உள்ள மகரந்தத்தையோ சூல்களையோ கொண்டு புதிய செடிகளை உண்டாக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. இம்முறையில் மிகக்குறுகிய அ.க.5-7 காலத்தில் இனப்பெருக்க முதன்மை உறுப்புகள் 97 புதிய மேலும் நோய் - பூச்சி தாவரங்களை உருவாக்கலாம். இவற்றின் இவற்றின் எதிர்ப்புத்திறன் உடைய வகைகளை உருவாக்குவதும் எளிதாகின்றது. இரு வேறுபட்ட வகைகளில் புரோட்டோபிளாச இணைப்புச் செய்தும் இனப்பெருக்கம் செய்யப் படுகின்றது. இம்முறையைக் கையாண்டு வீரியப் பயிர்களை உருவாக்கலாம். புதிய ஆர். அப்பாதுரை இனப்பெருக்க முதன்மை உறுப்புகள் ஆண் இனப்பெருக்க முதன்மை உறுப்பு விரை என்றும் பெண் இனப்பெருக்க முதன்மை உறுப்பு அண்டாசயம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. விரை. இது உருளை வடிவில் பக்கத்திற்கொன் றாக இரு விதைகள் விதையுறைத் தடுப்புச்சுவரால் பிரிக்கப்பட்டு, டியூனிக்கா அல்புஜினியா என்ற நார் உறையால் மூடப்பட்டிருக்கும். விரையின் பின்புறம் விரையோடு எபிடிடைமிஸ் இணைகிறது. எபிடிடை மிஸிலிருந்து தொடங்கும் அகல் நாளம் விரையின் கீழ்ப்பகுதியைத் தொட்டுக் கொண்டிருக்கும். விரை யின் உறையங்கி என்ற உறையால் உருவாக்கப்பட்ட இடத்துள் இருக்கும். விரைக்கும் விரைமேவிக்கும் டக்டன் டிஃபிரன்ஸ் 'விதை குருதிக்குழலி கள் விதை மேவி விதை திரிமால்டரிக் ஃபேசியா வெஜி வந்து ஃபேசியா டார்டல் தசை தோல் விதைப்பை கிளாவிடன் அன்குறி படம்