பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 இனப்பெருக்கம்‌ (விலங்குகள்‌)

110 இனப்பெருக்கம் (விலங்குகள்) முதலில் நியுக்ளியஸ் பல முறை மறைமுகப் பகுப்பு முறையினால் பிளவுறுகிறது. அதனால் ஓர் உயிரியினுள் பல சிறு சேய் நியுக்ளியஸ் கள் தோன்றுகின்றன. ஒவ்வொரு சேய் நியூக்ளி யஸைச் சுற்றிலும் சிறிது சைட்டோப்பிளாசம் சூழ்ந்து கொள்கிறது. இந்தச் சைட்டோபிளாசமும் நியூக்ளியஸும் சேர்ந்த அமைப்பு ஒரு சேய் உயிரியா கும். இவ்வாறு ஓர் உயிரி பல சேய் உயிரிகளாக மாறுகிறது. சில காலங்களில் சில ஒருசெல் உயிரி களில் இத்தகைய சேய்ச் செல்களைச் சூழ்ந்து உறை கள் உண்டாகும். இவற்றிற்குச் சிதல்கள் (spores) என்று பெயர். அவற்றின் வாழ்வுக்கேற்ற தட்ப வெப்பநிலையும் சூழ்நிலையும் உண்டாகும்போது சிதல் உறை வெடித்து வெளியே வந்து உயிரிகளாக வளர்கின்றன. இவ்வகை இனப்பெருக்கம் அமீபா, மலேரியா ஒட்டுண்ணி, மோனோசிஸ்ட்டிஸ் போன்ற விலங்குகளில் காணப்படுகிறது. பல சிறுகூறுகனாதல். இவ்வகை இனப்பெருக்கம் ஓர் ஒழுங்கின்றி எந்த விதி முறைக்கும் உட்படாமல் நடைபெறுகிறது. ஆனால் மற்ற இனப்பெருக்க முறைகளில் காணப்படுவது போன்றே இறுதியில் இளந்தலைமுறை தோற்றுவிக்கப்படுகிறது. ஹைட்ரா போன்ற குழியுடலிகளின் உடல் துண்டுகளாக்கப்பட்டாலும், ஒவ்வொரு துண்டும் இழந்த பகுதிகளை வளர்த்துக் கொண்டு மீண்டும் முழு உருவம் பெற்று வாழ்கின்றது. அரிவியாவின் வாழ்க்கைச் சுழற்சியின்போது ஸ்கைஃபிஸ்டோமா என்னும் இளவுயிரி உண்டாகிறது. இதில் தொடர் அடுக்க முறையினால் தட்டுகள் போன்ற பல மெடு சாக்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக உண்டாகின்றன. வாழ்க்கைச் சுழற்சியின் முடிவில் மெடூசாக்கள் அனைத்தும் தனித்தனியே பிரிந்து வாழத் தொடங்கு கின்றன. நாய்டிடே குடும்பத்தைச் சேர்ந்த சில நன்னீர் வளைதசைப் புழுக்களின் உடலில் சில இடங்களில் புதிய உடற்கண்டங்கள் தோன்றிப் பிளவுகள் ஏற்படுகின்றன. இப்பிளவுகளால் உண்டா கும் ஒவ்வொரு துண்டும் ஒரு தனிப்புழுவாக வளர்ந்து வாழத் தொடங்குகிறது. மேலும் பல்சுணைப்புழுக்களில் உடல் நான்கு அல்லது ஐந்து துண்டுகளாகப் பிரிந்து, பின்னர் ஒவ்வொரு துண்டும் வளர்ந்து தனித்தனிப் புழுவாக வாழ்கிறது. சில மொட்டு விடுதல். இவ்வகை இனப்பெருக்கம் குழியுடலிகளிலும், வாலில் தண்டுடையனவற்றிலும் காணப்படுகிறது. ஹைட்ராவின் உடலில் ஏதாவது ஓர் இடத்தில் சிறிய முளை போன்ற புறப்புடைப்பு உண்டாகும். இப்புடைப்பு வளர்ந்து பெரிதாகி மொட்டாக மாறுகிறது. நன்கு வளர்ந்த மொட்டில் கூம்பு வடிவ வாய்முனைப் பகுதியும், அதைச் சுற்றி உணர் நீட்சிகளும் உண்டாகின்றன.மொட்டுகள் தாய் ஹைட்ராவிலிருந்து பிளவுற்றுப் பிரிந்து சென்று சேய் ஹைட்ராக்களாகத் தனித்து வாழ்கின்றன. ஒபிலியா வில் மொட்டுவிடுதல் முறையால் பாலிலி இனப் பெருக்கம் நடைபெறுகிறது. மேன்மேலும் மொட்டு கள் உண்டாவதால் கூட்டுயிரி பெருகிக்கொண்டே இருக்கும். அசிடியன்கள் போன்ற சில விலங்குகளின் வயிற்றுப் பகுதியிலிருந்து குழாய் போன்ற ஒரு தண்டு வளர்கிறது. இதிலிருந்து பல மொட்டுகள் அரும்புகின்றன. அசிடியக் கூட்டுயிரியில் அனைத்துத் தனி உயிரிகளும் ஒரே உயிரி போன்று சேர்ந்து இயங்குகின்றன. பாலிலி இனப்பெருக்கத்தின் தன்மை, இவ்வகை இனப்பெருக்கத்தின் மூலம் விலங்குகள் குறுகிய காலத்தில் பெருமளவு இளவுயிரிகளைத் தோற்றுவிக் கின்றன. பாலிலி இனப்பெருக்கத்தில் ஒரே உயிரி பிறவுயிரிக் கலப்பின்றித் தன் அடுத்த தலைமுறை உயிரிகளை உண்டாக்குவதாலும், மேலும் அது தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறுவதாலும் உயிரி களின் மரபு வீரியம் குறைகிறது. சேய் உயிரியின் ஜீன் அமைப்பு, தாய் உயிரியின் ஜீன் அமைப்பைப் போலவே இருப்பதால் அவற்றிற்கிடையே பெரும் வேறுபாடு இல்லை. பால்வழி இனப்பெருக்கமுறை, பால்வழி இனப் பெருக்க முறை புரையுடலிகள் (sponges) முதல் மனிதன் வரை அனைத்துப் பல செல் உயிரிகளிலும் நடைபெறுகிறது. பல செல் உயிரிகளின் இரு வகை யான மாறுபட்ட அமைப்புடைய இனச்செல்களின் சேர்க்கையினால் ஓர் உயிரி உண்டாகிறது. . பொதுவாக விலங்குகளில் இரு பாலினங்கள் உள்ளன. அவை ஆண்பால், பெண்பால் எனப்படும். ஒவ்வொரு பாலினத்திலும் அதற்கே உரித்தான இனச்செல் உறுப்புகளும் பாலின உறுப்புகளும் உள்ளன. ஆண் இனச்செல் உறுப்பாகிய விந்தகத்தி லிருந்து, ஆண் இனச்செல்களாகிய விந்தணுக்களும், பெண் இனச்செல் உறுப்பாகிய சினையகத்திலிருந்து, பெண் செல்களாகிய சினையணுக்களும் உண்டா கின்றன. விந்தணு சினையணுவுடன் இணைவதற்குக் கருவுறுதல் என்று பெயர். கருவுற்ற சினையணு கரு முட்டை ஆகிறது. இந்தக் கருமுட்டைதான் உயிரியாக வளர்ச்சியடைகிறது. பொதுவாகப் பால் வழி இனப்பெருக்க விலங்குகள், புறப்பால் பண்பு களின் மூலம் வேறுபடுகின்றன. இத்தகைய புற உறுப்புக்களுக்குத் துணைப்பால் உறுப்புக்கள் என்று பெயர். ஒரு சேவல் அதன் கொண்டை வளர்ச்சியா லும், இறகுகளின் அமைப்பாலும் பெட்டைக்கோழியி னின்று வேறுபட்டுக் காணப்படுகிறது. இதைப் போலவே மனிதனின் மயிரும், உடலில் பரவலாகக் காணப்படும் மயிரும் குரலும் துணைப் பால் பண்பு களாகும். மண்புழு போன்ற சில விலங்குகளில் இருபால் இனச்செல் உறுப்புகளும் ஓர் உயிரியிலேயே காணப்படுகின்றன. இவை இருபால் உயிரிகளாகும். மற்ற விலங்குகளில் இனச்செல் உறுப்புகள் தனித்தனி