பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 இனப்பெருக்கம்‌ (விலங்குகள்‌)

112 இனப்பெருக்கம் (விலங்குகள்) இனப்பெருக்கம் நடைபெறுகிறது. இவ்வாறு இவை குறிப்பிட்ட காலத்தில் இனமுதிர்ச்சி அடைவதால் இனச்செல்கள் ஒரு குறுகிய காலத்தில் மிகுதியாக உண்டாகி, உடலைவிட்டு வெளிப்பட்டுக் கருவுறு தலுக்கு ஆயத்தமாகவுள்ளன. மேலும் இவ்வாறு கருவுற்று, வளர்ச்சி குறிப்பிட்ட காலங்களில் அடைந்து, வெளிவரும் இளவுயிரிகளால் உகந்த கால நிலையில் முறையாக வாழ்க்கையைத் தொடங்க முடிகிறது. தட்டைப்புழு பிளநேரியா அல்ப்பைனா வில் 10°C க்குக் குறைவான வெப்பநிலையில்தான் இனச்செல் உறுப்புகள் வளர்ச்சியடைகின்றன. முத்துச்சிப்பியில் உயர் வெப்ப நிலையில் இனச்செல் உறுப்புகள் வளர்ச்சியடைகின்றன. லிம்னேயா என்ற குளத்து நத்தையில் பகல்பொழுது மிகுந்து உள்ள மிகுபகல் நாள்களில்தான் சினையணுக்கள் உண்டாகின்றன. பல்சுனைப்புழுக்கள் இனத்தைச் சேர்ந்த புழுக்கள் கூட்டம்கூட்டமாக நீந்திச் செல் லும்போது அருகருகே இனச்செல்கள் வெளியிடப் படுவதால் கருவுறுதல் எளிதாக நடைபெறுகிறது. லியோடிஸ் ஃபுகாட்டா என்ற புழு இனத்தின் ஆண் பெண் ஆகிய இருபால் புழுக்களும் மிகக் குறுகிய காலமே கூட்டமாகக் கூடி வாழ்கின்றன. இவை இரவு நேரங்களில் வால்பக்கத்தை வளைகளுக்கு வெளியே வைத்து வாலைத் துண்டித்து இனப் பெருக்கச் செல்களை வெளியிடுகின்றன. வெளிக் கருவுறுதல் நடைபெறுகிறது. ஏரியன் என்ற இலை அட்டை இருபால் உயிரி யாகும். இதில் இருவகை ஹார்மோன்கள் உள்ளன. மூளையிலிருந்து சுரக்கப்படும் ஹார்மோன் முட்டை வளரவும், கண்காம்பிலிருந்து சுரக்கப்படும் ஹார் மோன் விந்து வளரவும் உதவுகின்றன. பேய்க்கண வாய் என்னும் மெல்லுடலியின் கண்காம்பிலிருந்து உண்டாகும் ஹார்மோன்கள் இனச்செல் உறுப்பு களை வளர்ச்சியடையச் செய்கின்றன. ஓடொண்ட்டோசில்லிஸ் ஈனோப்ளா என்னும் பல்சுணைப்புழுக்கள் பௌர்ணமி கடந்த இரண்டு மூன்று நான்காம் நாளில் சூரியன் மறைந்த அறுபது நிமிடத்திற்குப் பிறகு கூட்டமாகக் காணப்படுகின்றன. பெண்புழுக்கள் நீர்மட்டத்தை நோக்கி நீந்திச் சென்று சிறுசிறு வட்டமாகச் சுழன்று வருகின்றன. அப்பொழுது அவற்றின் உடலில் விட்டு விட்டு உயிர் ஒளி உமிழ்வு (bioluminiscence) ஏற்படு கிறது. அதே காலத்தில் அவை சினையணுக்களையும் வெளியிடுகின்றன. பெண்புழுக்களின் ஒளி உமிழ்வைக் கண்டவுடன் ஆண்புழுக்கள் பதினைந்து அடி ஆழத்திலிருந்து பாய்ந்து வந்து பெண்புழுக்களின் வட்டத்தினுள் புகுந்து பெண் புழுக்களோடு சேர்ந்து சுற்றுகின்றன. அப்போது ஆண், பெண் ஆகிய இரு வகைப் புழுக்களும் இனச்செல்களை வெளியிடுவதால் எளிதாகப் புறக்கருவுறுதல் நடைபெறுகிறது. சில பூச்சி இனங்கள் இனச்சேர்க்கைக்கு முன் ஆணும் பெண்ணும் வளைதல், தொடுதல், அணைத்தல், நடனம் ஆடுதல், பாடுதல், முகத்தோடு முகம் தேய்த்தல் போன்ற காதலாட்டங்களில் ஈடு படுகின்றன. எ.கா. டாம்சல் பூச்சிகள், தேள். ஆண் பல கிலோ மீட்டர் தொலைவி அந்திப்பூச்சிகள் லுள்ள பெண் பூச்சியைக் கண்டுபிடிக்கும் திறமை பெற்றுள்ளன. ஆண் பூச்சிகள் பொதுவாக 40-50 பூச்சிகள் அடங்கிய சிறு கூட்டமாகக் காணப் படும். பெண்பூச்சி அதன் முன் வயிற்றுப் பகுதியைச் சற்று உயர்த்தி விரைவாகச் சிறகடிக்கும். இதனால் அதன் உடலிலிருந்து வெளிப்படும் மணம் காற்றில் பரவுகிறது. இம்மணத்தை நுகர்ந்து ஆண்பூச்சிகள் பெண் பூச்சிகளைப் புணர்கின்றன. புணர்ச்சி நடைபெற்றுப் பெண்ணின் இனப் பெருக்க உறுப்புகளுக்குள் விந்து செல்வதால் பெரும்பாலும் அனைத்து முட்டைகளும் கருவுறு கின்றன. வயிற்றுக் காலிகள், தலைக்காலிகள், ஒட்டு டலிகள் போன்றவற்றிலும் அகக்கருவுறுதல் ஏற்படு கிறது. டர்பெல்லாரியன்களிலும், வயிற்றுக்காலிகளி லும் ஆண் உயிரிகளின் விந்தைப் பெண் இனப் பெருக்க உறுப்புக்குள் பாய்ச்சுவதற்கு ஏற்ற புணர் உறுப்பு உள்ளது. ஆண் சிலந்தி ஒரு சொட்டு விந்தை வலையில் ஓர் இழையிலோ வளையில் அதற்கென அமைக்கப்பட்ட ஒரு தனி இடத்திலோ வைக்கிறது. சிலந்தியின் வாய்ப்பகுதியின் கீழ்த் தகடு போன்ற குழல் விந்துப்பையாக மாற்றமடைந்திருக் கிறது. இந்தக் குழல் அமைப்பினால் விந்துக்கூழை எடுத்துப் பெண் இனப்பெருக்க உறுப்பின் புழையில் வைக்கிறது. தேள்களிலும் இதைப் போன்ற இனப் பெருக்கம் நடைபெறுகிறது.ஆண்தேளும் பெண் தேளும் பாற்புழைகளை இணைத்துக்கொண்டு நடனம் ஆடும். அப்பொழுது ஆண் தேள் பை போன்ற விந்துத்திரள்களை வெளியேற்றுகின்றது. பென் தேள் உடனே அவற்றை இனப்பெருக்கக் கண்டத்திலுள்ள புழைக்கு எடுத்துச்சென்று அதனுள் அழுத்துகிறது. பிறகு விந்துத்திரள் உறிஞ்சி உள்ளி ழுக்கப்படுகின்றது. விந்து உறிஞ்சப்பட்டவுடன் இரு தேள்களும் ஒன்றிடமிருந்து மற்றொன்று விடு வித்துக் கொண்டு செல்கின்றன. முதுகெலும்பிகளில் பால்வழி இனப்பெருக்கம். முது கெலும்பிகளில் பொதுவாகக் குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி அடைந்து செயல்படுகின்றன. இது சில ஹார்மோன்கள் சுரப்பதைப் பொறுத்துள்ளது. ஆன்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் என்ற இரு ஹார் மோன்கள் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. லேம்ப்பிரேக்கிளில் இளவேனில் காலத்தில், ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து நீந்தி வேகமான நீரோட்டம் இல்லாத இல்லாத ஓர் இடத்தை அடைந்து, புனல் போன்ற வாயால்