பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இனமாக்கம்‌ (தாவரம்‌)

118 இனமாக்கம் (தாவரம்) செயல்பட்டதற்கான சான்று எதுவும் கிடைக்க வில்லை.இனங்காணா விண்வெளிப் பொருள்கள் பற்றிக் கிடைத்த செய்திகளுள் பெரும்பாலானவை இவ்வகையினவாகவே இருக்கின்றன. தொட்டு உணரக்கூடிய சான்றுகளுடன் கண்டோர் இரண் டாம் வகையைச் சார்ந்தவர்களாவர். விண்வெளிப் பொருள்கள் தரையிலிறங்கியதால் விட்டுச் சென்ற நிலச்சுவடுகள், அவற்றின் தாக்குதலால் ஏற்பட்ட விழுப்புண்கள் போன்றவை இவர்கள் காட்டும் சான்றுகளாகும். இனங்காணா விண்வெளிப் பொருள்களைப் பார்த்து, அருகில் சென்று தொட் டுணர்ந்து, உள்ளே சென்று வேற்றுலக மனிதர்களு டன் உறவாடியதாகக் கூறுவோர் மூன்றாம் வகை யினர். வளி காணா மண்டலத்தின் மேலுயரப் பகுதிகளில் அடுக்கு ஏவூர்திகள் வெடித்து இயக்கப்படுதல், வான வூர்திகள் தாழ்வாகப் பறக்கும்போது விடுக்கும் அறி குறி ஒளிகள், செயற்கைக் கோள்கள், செயற்கைக் கோள்களின்மீது பூசப்பட்டிருக்கும் ஒளிரும் பூச்சுகள், இடம் விட்டு இடம் பெயரும் பறவைகள், கட்டுப் பாடின்றித் தனித்துப் பறக்கும் பட்டங்கள், எரிவிண் மீன், வால்விண்மீன், மேகத்தால் ஒளியின் எதிர் பரப்பு,உயரப் பறக்கவிடப்பட்டிருக்கும் பலூன்கள். மின்மினிப் பூச்சிகள், வில்லை வடிவ முகில், சூரிய குடும்பத்தில் மிகுந்த மிளிர்வுடன் ஒளிரும் வெள்ளி என்ற கோள் போன்றவைகூட இனம் விண்வெளிப் பொருள்களாகத் தவறாகக் கருதப் பட்டிருக்கின் றன. இனங்காணா விண்வெளிப் பொருள்களை விரிவாக ஆராய்ந்த அமெரிக்க விமானப் படையினர், மக்களால் அறிவிக்கப்பட்ட செய்திகளில் தொண்ணூற்றைந்து விழுக்காடு இனம் காணா விண்வெளிப் பொருள்களைக் குறிப்பிட வில்லை என்பதை உறுதியாக நிறுவினர். வளிமண்ட லத்தில், சூரியனின் கதிர்கள் ஊடுருவிச் செல்லும் போது, அங்குள்ள பனித்துளிகளால் எதிரொளிக்கப் பட்டு மிளிர்வுடன் ஒளிவட்டங்களாகத் தோன்று கின்றன என்றும், இதுபோன்ற மனவுருத் தோற்றங் களும் இனங்காணா விண்வெளிப் பொருள்களாக மக்களால் பார்க்கப்பட்டிருக்கின்றன என்றும், இவர் களுடைய ஆய்வு முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. எஞ்சியுள்ள ஐந்து விழுக்காடு செய்திகளை ஏற்கக் கூடிய இயற்பியல் நடைமுறைகளைக் கொண்டு விளக்கிக் கூற இயலவில்லை. இது உண்மையில் இனம் காணா விண்வெளிப் பொருளைக் குறிப்பிடு வதாகக்கூட இருக்கலாம்; இல்லையெனில் இதுவரை அறியப்பட்டிராத இயற்கையின் புதிய வெளிப்பாடா கவும் அமையலாம். இனங்காணா விண்வெளிப் பொருள்கள் பற்றிய செய்திகள் அனைத்தும் வெறும் கதைகள் என்று ஒதுக்கிவிட முடியாததற்குக் இருப்பது, சிறந்த நாகரிக வளர்ச்சியும் அறிவில் காரணமாக முதிர்ச்சியும் பெற்ற உயிரினங்கள் இவ்வண்டத்தில் எங்கோ ஓரிடத்தில் இருக்கலாம் என்பதற்குப் புறக் கணிக்க முடியாத வாய்ப்புள்ளது என்பதே ஆகும். தனலெட்சுமி மெய்யப்பன் இனமாக்கம் (தாவரம்) தாவர வகைப்பாட்டியலில் தாவரங்களை அவற்றின் தோற்ற ஒற்றுமையைக் கொண்டு பல குழுக்களாகப் பிரித்து, அக்குழுக்களை ஏற்றத்தாழ்வு வரிசையில் தாவரவியலார் அமைத்துள்ளனர். பொதுவாக இனம் (species) என்பதே தாவரவியலில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சொல்லாகும். இச்சொல் வரையறுக்கப்படாத நிலையில் இணைப்பதற்கும் பிரிப்பதற்கும் தகுந்தவாறு அமைந்ததாகும். எந்த ஓர் உயிரியலாரும் இனம் என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது அதன் உட்பொருளை மேலெழுந்தவாறே வெளிப்படுத்த முடிகிறது என்று டார்வின் கூறியுள்ளார். உயிரியலில் வேறு எந்தச் சொல்லையும் பயன்படுத்துவதில் இந்த அளவுக்குச் சிக்கல் ஏற்பட்டதில்லை. சிலர் இனம் என்பதை ஓர் உண்மையான பொருளாகவும், பிறர் அதை ஒரு புலப்படாத கருத்தாகவும் கருதுவதுண்டு. இனங்களின் வகைப்பாட்டியலைப் பழமையான புறத்தோற்றப் புவியியல் எனவும். உயிரியல் (மரபியல், செல் மரபியல், உயிர் வகைப் பாட்டியல்) எனவும் இருவகையில் கூறலாம். லின்னேயஸ்ஸின் இனக்கொள்கை முந்தைய வகையைச் சேர்ந்தது. ஓர் இனக் குழுவைச் சார்ந்த தாவரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தனித்தாவரமே அக்குழு வின் பிரதிநிதியாக அமைகிறது. உயிர் வகைப் பாட்டியலர்களால் முதல்வகை இனக்கொள்கை கடுமையாக மதிப்புச் செய்யப்படுகிறது. உயிரியல் இனக்கொள்கை, கடந்த எண்பது ஆண்டுகளில் தொடங்கி நின்று நிலைபெற்றுவிட்டது. மரபு அடிப் படையில் வேறுபாடுகள் இனப்பெருக்க வழிகள் முதலியவற்றுக்குச் சிறப்பளிக்கப்படுகிறது. வெல் இனமாக்கத்தை அறிய வேண்டுமானால் புதிய இனங்கள் எந்தச் சூழ்நிலையில், எவ்லாறு தோன்றுகின்றன என்பதை அறியவேண்டும். புறத்தோற்றவியல் என்பது வெளிப்படையாகவே வேறுபாடுகள் காண்பிக்கும் தாவரங்களை வேறு இனமாகக் கொள்வதாகும். பொதுவாகப் பால் இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்களில் மரபுப் பொருள்கள் தடையின்றிப் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டால் உயிரியலார் அக்குழுவை ஓர் இனம் என்பர். அதே சமயம் அக்குழு மற்ற