பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 இனவரலாறு (தாவரம்‌)

124 இனவரலாறு (தாவரம்) படி இந்தோ - மலேஷியா தென்கிழக்கு ஆசியா, போன்ற வெப்ப நாடுகளில் தொடங்கி அண்டார்டிக் வரை பரவியதாகவும் கருதப்படுகிறது. புவியியல்,உயிரியல் சான்றுகள் மூலம் கண்டப் பெயர்ச்சி எனப்படும் நிலை பொருந்துவதாக உள்ளது. அண்டார்க்டிகா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, தென் அமெரிக்கா ஆகிய வற்றை இணைந்து இருந்தவையாகக் கொண்டு இவற் றைக் கோண்ட்வானா தரை என்று அழைக்கும் பல சான்றுகள் உண்டு. பூக்கும் தாவர இனங்கள் உயர மான கோண்ட்வானா பகுதியில் தாழ்ந்த குறுக்குக் கோட்டில் தட்ப வெப்பநிலையைப் பொறுத்து வளர்ந்தமையால் அவையே பூக்கும் தாவரங்களின் மூதாதை வழி என்று நிறுவுகின்றனர். கோண்ட் வானா தரைப்பகுதியைக் கடல் மூடியபோது இடப் பெயர்ச்சியடைந்து, வடக்கு ஆசியா, ஐரோப்பா பகுதிகளுக்குச் சென்றதாகவும், மேற்கில் இந்தியப் பெருங்கடல் கடலோரப் பகுதியில் பரவியதாகவும் ஸ்மித் (1973) கூறியுள்ளார். ஆவரே (1973) என்ப வர் கண்டப்பெயர்ச்சியையும், தாவரத் தொகுதிகள் உலகில் பரவிய விதத்தையும் ஏற்க முடியா என்று சான்றுகளுடன் விளக்கியுள்ளார். ஒரு வித்திலைத் தாவரத்தின் இனவரலாறு இன் னும் தெளிவுபடுத்தப்படவில்லை. முன்பு இன வரலாற்றின்படி இரு வித்திலைத் தாவரங்களின் மூதா தைகளாகிய தாவரங்களிலிருந்து ஒருவித்திலைத் தாவரங்கள் தோன்றின என்றும், தற்போது இரு வித்திலைத் தாவரங்களிலிருந்துதான் ஒருவித்திலைத் தாவரங்கள் தோன்றின என்றும் கூறப்படுகின்றது. பெய்லி (1949) சீடேல் (1953), கிராங்குபேஸ்ட் (1969) ஆகிய தாவர வல்லுநர்கள் உள்ளமைப்பு களை வைத்து இனவரலாற்றை முடிவு செய்ய முயல் கின்றனர். எடுத்துக்காட்டாகக் கோசாகை, மோசி லேய், சீடேல் (1970) போன்ற தாவர இயல் வல்லுநர் கள் தாமரை இனத்தின் வேர்ப்பாகத்தில் உள்ள முன்சாற்றுக் கற்றைகளின் மாறுபாட்டால் ஒருவித் திலைத் தாவரத்தின் நிலை புலப்படாமல் போக, நிம்பயேசி என்ற தாவரக் குடும்பத்தில் அதைச் சேர்க்கலாமா என்ற ஐயம் எழச் செய்தனர். பியூட்டமேசி, அலிஸ்டேசி போன்ற தாவரக் குடும்பங்களின் வேர்களில் உயர்ந்த உள் சாற்றுக் கற்றைகள் காணுமிடத்து அவை முடிவு செய்ய இய லாத நிலைக்குச் செல்கின்றன. இந்த உறுப்பு அமைவு கள் அலிஸ்டமேசி என்ற தாவரக் குடும்பம் தரை யினின்று தண்ணீர்ப் பக்கம் வளர்கின்றது என்ற கருத்தை வலுப்படுத்தவில்லை. டாம்லின்சன் (1970) உயர்ந்து வளர்ந்துள்ள மரங்களின் மூதாதைகள் ஒருவித்திலைத் தாவரத்தின் இனவழியாக அமைய லாம் என்றார். அண்மைக்காலத்தில் மூலம், அடிப்படைக் கார ணம் இவற்றைக் கொண்டு இனவழியைக் காண முயல்கின்றனர். மூதாதைகள் வளர்ச்சி மேல்நோக் கித்தான் செல்லும். அதனால் அழிவு தவிர்க்க முடி யாததாகும். ஒரே மாதிரியான தாவரங்களின் உறுப்பு அமைவுகள் மிகவும் தொன்மை வாய்ந் தவை என்றும், பலதரப்பட்ட உறுப்பு அமைவுகள் உயர்ந்த தாவரங்களின் தன்மைகள் என்றும் கருது கின்றனர். படிமலர்ச்சி என்பது ஒரே நேரத்தில் அனைத்துத் தாவர உறுப்புகளையும் தாக்காமல் ஒன்று வளர்ச்சி பெறும், மற்றது அழிவு பெறும் என் பதுதான் முறையாகும். மரபு வழி மாற்றம் ஒத்து அமையும் பச்சையம் இருப்பதையும், பச்சையம் இல் லாததையும் வைத்து நோக்கும்போது முந்திய தாவர இனம்தான் மூத்தது என்று கருதப்படுகின்றது. இனவழியின் தன்மைகள் தாவரங்களின் தொடர்பில் அமைவதால் இவை மரபுவழி வகைப்பாட்டிற்கு ஊன்றுகோலாக அமைகின்றன. தாவரங்களின் உள் உறுப்புக்களைக் காணும் போது தண்டின் உட்பகுதிச் சாற்றுக் கற்றைகள் வளையமாக அமைந்திருந்தால் அவை முன்னோடிகள் என்றும் ஒழுங்கீனமாக இருப்பின் அவை பிந்திய காலத்தவை என்றும் கருதப்படுகின்றது. மரங்களின் தண்டுப்பாகம், புதர்களின் தண்டைவிடத் தொன்மை வாய்ந்தது. தண்டில் கிளைகள் இல்லாதிருக்கும் தாவர இனங்கள் கிளைகளுடன் கூடியவற்றைவிடத் தொன்மை வாய்ந்தவை இவ்வாறு பல உண்டு. வரலாற்றுச் சான்றின்படி இலைகள் அடுக்குக்கு எதிர் எதிராகத் தண்டில் அமைந்திருந்தால் அத் தாவரம் திருகு அமைப்பாக இருக்கும் தாவரத்திற்கு முந்தியது என்றும் இலையில் வலை நரம்புகளை யுடைய தாவரம், இணைப்போக்கு நரம்பமைப்பு ஆக இருக்கும் தாவரத்திற்கு முற்பட்டது என்றும், அல்லிவட்டத்தில் இருந்துதான் இதழ் மாறுபாடு கொண்டது என்றும், குலகக் கீழ்ப் பூ முந்தியது, சூலக மேல் பூ பிந்தியது என்றும், இணையா இணைச் சூலகம் முந்தியது, இணைந்த இணைச் சூலகம் பிந்தியது என்றும், மிகுதியான மகரந்தத் தாள்கள் உடையது முந்தியது, குறைந்த தாள்கள் உடையது பிந்தியது என்றும், மகரந்தத் தூள் முந்தி யது, மகரந்தத் தூள் பிந்தியது என்றும் பல கருத்துக்கள் உண்டு. ஸ்மித் (1967) பல மேற்கோள்களைக் காட்டி வெப்பநிலையில் வளரும் தாவரங்கள் குளிர்நிலை யில் வளரும் தாவரங்களைவிட முந்தியவை என்றும் நீண்டகாலத் தாவரங்கள், குறுகியகாலத் தாவரங் களைவிடப் பிந்தியவை என்றும்; பச்சையம் உள்ளது முந்தியது, பச்சையம் இல்லாதது பிந்தியது என்றும், சாதாரண இலை முந்தியது, கூட்டு இலைகள் பிந்தி யவை என்றும்; புல்லிவட்டம் உள்ள பூக்கள் முந்தி