பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 இஸ்க்கியா தீவு

130 இஸ்க்கியா தீவு பார்வை இழப்பைத் தடுப்பதற்காகச் சர்க்கரையுடன் வைட்டமின் A கலக்கப்படுகிறது. இரத்தக் இனிப்புணவும், உடல் நலமும். இதய குழாய் நோய்களுக்கான காரணங்களில் மிகுதியாக இனிப்பு உட்கொள்ளுதலும் ஒன்றாகக் கருதப் படுகிறது. மிகுதியான எடைக்கும் மிகுந்த கலோரி உட்கொள்ளுதல் மற்றொரு காரணமாகும். சுக்ரோஸ் பல்சொத்தை ஏற்படப் பெரிதும் காரணமாகும். நுண்கிருமி இருக்கும்போது எவ்வித மாவுப்பொருளும் பற்சொத்தையை ஏற்படுத்த வல்லது. பல்சொத்தை, உட்கொள்ளும் சுக்ரோஸ் அல்லது சர்க்கரையின் அளவைப் பொறுத்து ஏற்படுவ தன்று. அதனுடைய இனிப்புணர்வின் தன்மை (எ.கா. பல்லில் ஒட்டிக் கொள்ளுதல்) சாப்பிடும் நேரம் (எ.கா. உறங்கப்போகும் முன் சாப்பிடுவது) ஆகிய வற்றைப் பொறுத்தமையும். இனிப்பூட்டிகள். தரமுள்ள உணவோ, ஆற்றல் தரும் தன்மையோ அற்ற, இனிப்புச் சுவை அளிக்கும் பொருள்கள் இனீப்பூட்டிகள் என்று அழைக்கப்படு கின்றன. இவை சர்க்கரை நோய் உள்ளவர்கள் களுக்கு மிகவும் பயன்படுகின்றன. இவற்றில் சாக்கரின் பழங்காலந்தொட்டே புழக்கத்தில் இருந்து வரும் ஒரு பொருள் ஆகும். இது நடைமுறையில் இன்றளவும் வீட்டுப் பயன்பாட்டில் உள்ளது. சாக்கரின் நிற மற்ற தூள் போன்றது. நீண்ட நாள் சாக்கரினைப் பயன்படுத்தும்போது சிறுநீர்ப்பையில் புற்று நோய் ஏற்படுவதாகக் கனடா நாட்டு அறிக்கை ஒன்று தெரி விக்கிறது. இருப்பினும் மிகக் குறைந்த அளவு பயன் படுத்துவதால் தீங்கு ஏதும் விளைவதில்லை என்றும் கூறப்படுகிறது. -3. சைக்லமேட். இது சர்க்கரையை விட முப்பது மடங்கு மிகுதியான இனிப்புச் சுவை கொண்ட இது சோடியம் குறைவாக உட்கொள்ள வேண்டிய வர்களுக்குச் சிறந்ததாகும். மால்ட்டிடால். இது மால்ட்டோஸிலிருந்து தயாரிக் கப்படுகிறது. இது 90% சாதாரண சர்க்கரையைப் போன்று இனிப்பானது. உட்கொள்ளும்போது குடலில் செரிக்க முடியாததால் இனிப்பூட்டியாகப் பயன்படுத்தும் தகுதி பெறுகிறது. மால்ட்டோசி லிருந்து தயாரிக்கப்படும் மற்றோர் இனிப்பூட்டி ஆஸ்பர்டேம் ஆகும். சைலிட்டால். இது சைலோசிலிருந்து தயாரிக்கப் படும் மற்றோர் இனிப்பூட்டியாகும். இது சாதாரண சர்க்கரையை விட மெதுவாக உடலில் கலக்கிறது. இருப்பினும் மெதுவாக உடலில் கலக்கும் தன்மை உள்ளதால் ஆற்றல் அளவைக் கணக்கிடும்போது இவற்றிலிருந்து கிடைக்கும் ஆற்றலின் அளவையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். ஆர்.இளங்கோவன் இஜோலைட் ஊடுருவிய அனற்பாறை வகையில் இஜோலைட் (ijolite) என்பது ஒரு வகையாகும். இப்பாறை சிறப்புக் கனிமமாக நெப்பிலினையும் காரபைராக்சின கனிமங்களையும் கொண்டு காணப்படுகிறது. நெப் பிலினைட் நெப்பிலின் டோலிரைட் என்னும் வெளி உமிழ் பாறை வகைகளுக்கு இணையான ஆழ்நிலைப் பாறை வகை இஜோலைட் ஆகும். இப்பாறையின் வண்ணச் சுட்டெண் (colour index) முப்பதிலிருந்து எழுபது வரை இருக்கும். இதை மிசோக்ராட்டிக் என்பர். அதாவது இரும்பு மக்னீ சியம் உட்கூறுகொண்ட கனிமங்கள் மிகுந்து இப் பாறை மிகுந்த கருமை நிறம் கொண்டு காணப்படும். இதில் குறிப்பாகப் பைராக்சின் கனிமங்கள் நல்ல. தன் உருவாக்க நிலை யாப்பிலும் இதைச் சுற்றிக் குறைகள் உருவாக்க நிலையிலும் நெப்பிலின் நிறைந்து காணப்படும். இப்பாறையில் அருகிய கனிமங்களாகக் கருமை நிறக் கார்னெட், டைட் டனைட் அப்படைட், கான் கரினைட், கால்சைட்ச முதலியவை காணப்படும். எடுத்துக்காட்டாக, சுவீடனில் அலனோ, நார்வேயில் ஃபென் என்னும் இடத்திலும், பெனின்சுலாவில் கோலா என்னும் இடத்திலும், சோவியத்து நாட்டிலும் இப்பாறைகளில் மிகுதியான ஒலாஸ்டனைட் கனிமங் கள் நிறைந்து காணப்படுகின்றன. இப்பாறை வகை களிலும் இஜோவைட்டில் உள்ளது போல் கனிமங் உள்ளன. ஆனால் யுரடைட்டில் நெப்பிலின் நிறைந்தும், நெல்லிடிகைட்டில் மிகுந்த பைராக்சின் கொண்டும் காணப்படுகின்றன. கள் பர்வஸ்கைட் இஸ்க்கியா தீவு சு.சந்திரசேகர் தென் இத்தாலியிலுள்ள கேம்ப்பானியாவில் கேட்டா வளைகுடாவுக்கும் நேப்பின்ஸ் விரிகுடாவுக்கும் இடை மிலுள்ள டிர்ஹீனியன் கடலில் இஸ்க்கியாத் தீவு அமைந்துள்ளது. மரகதத்தீவு என அழைக்கப் படும் இத்தீவு, சிறந்த உல்லாச இடமாகவும் உடல் நல ஓய்விடமாகவும் திகழ்கிறது. இத்தீவில் ஏற்பட்ட எரிமலைக் கொந்தளிப்பால் தங்குவதற்குத் தகுதி யற்றது என்று இது பலமுறை புறக்கணிக்கப்பட்டது. எரிமலைத் தீவாகிய இதன் பரப்பளவு 46.5 சதுர கிலோ மீட்டராகும். ம.அ. மோகன்